‘வாள்களைக் கலப்பைகளாக அடிப்பார்கள்’—எப்பொழுது?
‘வாள்களைக் கலப்பைகளாக அடிப்பார்கள்’—எப்பொழுது?
ஒரு மனிதன் வாளை கலப்பையாக அடிக்கும் காட்சி நியூ யார்க் நகரிலுள்ள ஐக்கிய நாட்டு சபையின் சதுக்கத்தில் சிலையாக வடிக்கப்பட்டுள்ளது. இது, ஏசாயா 2-ம் அதிகாரம் 4-ம் வசனத்திலும் (பொ.மொ.), மீகா 4-ம் அதிகாரம் 3-ம் வசனத்திலும் எழுத்தில் வடிக்கப்பட்டுள்ள பைபிள் தீர்க்கதரிசனத்தின் அடிப்படையிலானது. எப்படி, எப்பொழுது இந்த வார்த்தைகள் உயிர்பெறும்?
“உலகளவில் ஆயுத விற்பனை அதிகரிப்பு—3,000 கோடி டாலர்”! என்ற தலைப்புச் செய்தியை சமீபத்தில் த நியூ யார்க் டைம்ஸ் பத்திரிகை தாங்கி வந்தது. 1999-ல் ஆயுதங்களை தயாரித்து அனுப்புவதில் முன்னணி வகித்த நாடு எது? அமெரிக்கா முதலிடத்தைப் பிடித்தது—1,180 கோடி டாலர் விற்பனை! இந்தத் தொகையில் பாதிக்கும் சற்று குறைவாக விற்று இரண்டாம் இடத்தைப் பிடித்தது ரஷ்யா. ஆனால் கடந்த ஆண்டைவிட கிட்டத்தட்ட இரண்டு மடங்கு விற்பனையை அதிகரித்துவிட்டது. அடுத்ததாக, ஜெர்மனி, சீனா, பிரான்ஸ், பிரிட்டன், இத்தாலி என இந்த அணிவகுப்பு தொடருகிறது. அதே அறிக்கை தொடர்ந்து சொன்னது: “கடந்த காலத்தைப் போலவே, மொத்த ஆயுதங்களில் கிட்டத்தட்ட மூன்றில் இரண்டு பங்கு பின்தங்கிய நாடுகளுக்கு விற்கப்பட்டுள்ளது.”
கோடிக்கணக்கானோரை கொன்று குவித்த, காயப்படுத்திய இரண்டு உலகப் போர்களும் இன்னும் பல பெரிய போர்களும் இந்த 20-ம் நூற்றாண்டில் நடந்தபிறகு, ஒருவருக்கு இந்தக் கேள்விதான் மனதுக்கு வருகிறது: “போருக்கு பதிலாக தேசங்கள் எப்பொழுது சமாதானத்தை கற்றுக்கொள்ளும்?” இது “கடைசிநாட்களில்” உண்டாகும் என பைபிள் சுட்டிக்காட்டுகிறது. (ஏசாயா 2:2) சொல்லப்போனால், இத்தீர்க்கதரிசனம் ஏற்கெனவே நிறைவேற்றமடைந்து வருகிறது. சுமார் 60 லட்சம் யெகோவாவின் சாட்சிகள் ஏற்கெனவே ‘யெகோவாவிடமிருந்து கற்றுக்கொண்டிருக்கிறார்கள்.’ அதன் விளைவாக, அவர்களுக்கு ‘நிறைவான சமாதானம்’ இருக்கிறது.—ஏசாயா 54:13, NW.
எல்லா வகை ஆயுதங்களுக்கும் போர்களுக்கும் அவற்றை ஆதரிப்பவர்களுக்கும் யெகோவா விரைவில் முடிவை கொண்டுவருவார், ஏனெனில் ‘பூமியை நாசம் செய்கிறவர்களை அழிப்பார்.’ இந்த வியத்தகு மாற்றத்தைப் பற்றி நீங்கள் கூடுதலாக அறிந்துகொள்ள விரும்பினால், தயவுசெய்து உங்களுடைய ஊரிலுள்ள யெகோவாவின் சாட்சிகளையோ அல்லது 5-ம் பக்கத்திலுள்ள பொருத்தமான விலாசத்திற்கோ தொடர்புகொள்ளுங்கள்.—வெளிப்படுத்துதல் 11:18, NW.
(g01 3/8)