Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

எமது வாசகரிடமிருந்து

எமது வாசகரிடமிருந்து

எமது வாசகரிடமிருந்து

இரசாயன அலர்ஜி எனக்கு 17 வயது. “இரசாயனம்​—⁠உங்களுக்கு அலர்ஜியா?” (ஆகஸ்ட் 8, 2000) என்ற தொடர் கட்டுரைகளுக்காக கோடானுகோடி நன்றி. எனக்கு பல இரசாயன அலர்ஜி [multiple chemical sensitivity (MCS)] இருப்பது சமீபத்தில்தான் கண்டுபிடிக்கப்பட்டது. சுயமரியாதையை இழக்க செய்யும் இப்படிப்பட்ட அறிகுறிகளோடு நான் மட்டுமல்ல இன்னும் பலரும் அவதிப்படுவதை அறிவது பெரும் ஆறுதலாக இருந்தது.

எஸ். சீ., இத்தாலி

(g01 4/8)

“தூய்மைக்கேடு உங்களைத் தொல்லைப்படுத்துகிறதா?” (ஜூன் 8, 1983) என்பதைப் பற்றி ஆங்கிலத்தில் நீங்கள் முன்னர் வெளியிட்ட கட்டுரைகளில் உயிர்காக்கும் தகவல்கள் அடங்கியுள்ளன. இந்தப் பயங்கரமான வியாதி, நம் ஆவிக்குரிய குடும்பத்தின் அதிமுக்கிய கூட்டுறவிலிருந்தும் சமூக தொடர்புகளிலிருந்தும் நம்மை பிரித்துவிடுகிறது. ஆனாலும் இந்த வியாதியைப் பற்றி அநேகர் புரிந்துகொள்வதும் இல்லை, அவதிப்படுபவர்களுக்கு கரிசனை காட்டுவதும் இல்லை. துன்பப்படுபவர்கள் உண்மையில் எப்படி உணருகின்றனர் என்பதை உங்களுடைய தற்போதைய கட்டுரை படம்பிடித்து காட்டுகிறது.

எம். ஜே., பிரான்ஸ்

(g01 4/8)

ஒரு வருடத்திற்கும் மேல் நான் வியாதிப்பட்டிருந்தேன். பிறகுதான் எனக்கு உதவ முடிந்த ஒரு டாக்டரை கண்டுபிடித்தேன். அந்தச் சமயத்தில் என் நண்பர்கள் தயவாகவும் குற்றம் கண்டுபிடிக்காமலும் இருந்தனர், ஆனாலும் அவர்கள் முழுமையாக புரிந்துகொள்ளவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். ஆகவே இக்கட்டுரைகளுக்காக உங்களுக்கு நன்றி. இத்தனை அநேக விஷயங்களை ஆழமாக அறிந்திருக்கும் அமைப்பின் பாகமாக இருப்பது பெரும் பாக்கியமே!

எஸ். பீ., ஐக்கிய மாகாணங்கள்

(g01 4/8)

எனக்கு MCS உள்ளது. ஆனாலும், அதைப் பற்றியும் அதன் விளைவுகளைப் பற்றியும் இவ்வளவு முழுமையாகவும், சமநிலையாகவும் விளக்கும் எந்தவொரு கட்டுரையையும் நான் இதுவரை வாசித்ததே இல்லை. அன்பும் சிரிப்புமே அதை சமாளிப்பதற்கான “மருந்து” என நீங்கள் கூறியதை பெரிதும் ரசித்தேன். மற்றவர்களிடம் அதிகத்தை எதிர்பார்க்கக்கூடாது என நீங்கள் நினைப்பூட்டியதும் நடைமுறையான ஒன்றே.

டீ. ஜீ., ஐக்கிய மாகாணங்கள்

(g01 4/8)

பத்து வருடத்திற்கும் அதிகமாக யெகோவாவின் சாட்சிகளின் பயண கண்காணியாக சேவித்தேன். அச்சமயத்தில் MCS-ஆல் துன்பப்பட்ட அநேகரை சந்தித்தும் இருக்கிறேன். உண்மையிலேயே இப்படி ஒரு வியாதி இருக்கிறது, அது அவர்களுடைய கற்பனை அல்ல என்பது மிக தெளிவாக இருக்கிறது. எப்போதும் போலவே அந்த வியாதியைப் பற்றி விழித்தெழு! முழுமையான தகவலை அளித்தது. அதோடு, துன்பப்படுபவர்களிடம் தயவு, அன்பு, கரிசனை எப்படி காட்டலாம் என்றும் நடைமுறையான ஆலோசனை கொடுத்தது.

டீ. எம்., ஐக்கிய மாகாணங்கள்

(g01 4/8)

சிருஷ்டிப்பின் அத்தாட்சி நான் பல வருடங்களாக விஞ்ஞானிகளோடு வேலைசெய்து வருவதால், சிருஷ்டிப்பை நம்புவது சிறுபிள்ளைத்தனமானது என அவர்கள் கூறுவதைக் கேட்கையில் எனக்கு எரிச்சலாகவே இருக்கும். ஆனால், “கண் காணாததை காணுதல்” (செப்டம்பர் 8, 2000) என்ற தொடர் கட்டுரைகள் அதற்கு சரியான பதிலடியாகும். ஒருசில பக்கங்களிலேயே சிருஷ்டிப்பிற்கு ஆணித்தரமான ஆதாரத்தை அளித்திருந்தீர்கள். விழித்தெழு!-வின் முதல்தரமான எழுத்துநடைக்கும் ஆராய்ச்சிக்கும் பாராட்டுகள்.

பீ. ஈ., நியூஜீலாந்து

(g01 4/22)

நான் யெகோவாவின் சாட்சிகளோடு பைபிளை படித்து வருகிறேன். அணு, செல், டிஎன்ஏ பற்றியெல்லாம் சிந்தித்தது கடவுள் இருக்கிறார் என்பதில் என் நம்பிக்கையை உறுதிப்படுத்தியது.

டீ. கே., ஜப்பான்

(g01 4/22)

வானவில் உருவாக காரணமென்ன, புல் ஏன் பச்சையாக உள்ளது, அணு என்றால் என்ன என்று இப்போது என்னால் விளக்க முடியும். விழித்தெழு! ஒரு விஞ்ஞான பத்திரிகையல்ல, என்றாலும் சிருஷ்டிகர் இருக்கிறார் என்பதற்கான விஞ்ஞானப்பூர்வ அத்தாட்சியை அளிக்கிறது.

எம். எஃப்., ஐக்கிய மாகாணங்கள்

(g01 4/22)

இரத்தமேற்றாமல் குணம் “மனசாட்சிக்கும் மனசாட்சிக்கும் போராட்டம்” (செப்டம்பர் 8, 2000) என்ற கட்டுரை என் நெஞ்சைத் தொட்டது. எனக்கு அக்யூட் ப்ரோமைலோசைடிக் லியூகேமியா (APL) உள்ளதென கண்டுபிடிக்கப்பட்டபோது நானும் அதே நிலையில்தான் இருந்தேன். அதற்கு பிறகு எனக்கு ஏற்பட்டதும் டார்லினுக்கு ஏற்பட்டதும் ஒன்றே. இன்னும் சில நாட்களுக்குள் மரித்துவிடுவேன் என டாக்டர்கள் கூறினர். அவ்வாறு அவர்கள் கூறியதோ மூன்று வருடத்திற்கு முன்பு.

ஏ. பீ., ஜெர்மனி

(g01 4/22)