அது விசுவாசத்தைப் பலப்படுத்தியது
அது விசுவாசத்தைப் பலப்படுத்தியது
போரில்லா உலகம் என்றாவது வருமா? (ஆங்கிலம்) என்று தலைப்பிடப்பட்ட 32 பக்க சிற்றேட்டைப் பற்றி நியூ யார்க்கிலுள்ள ஒரு பெண்மணி இவ்வாறு எழுதினார்: “நான் அதை எந்தளவுக்கு நன்றியோடு மதித்தேன், அதை அனுபவித்து மகிழ்ந்தேன் என்பதை உங்களுக்கு தெரிவிக்காமல் என்னால் இருக்க முடியவில்லை. நான் யூத மதத்தைச் சேர்ந்தவள் இல்லை; என்னுடைய தாய் யெகோவாவின் சாட்சியாக இருந்தபோதிலும், என்னுடைய வாழ்க்கையில் வேறெந்த புத்தகமும் இந்தளவுக்கு என் மனதை தொட்டதில்லை!
“முதலில் அதை வாசிக்க தயங்கினேன், ஏனென்றால் அது விசேஷமாக யூதருக்கு ஆர்வமூட்டும் விஷயங்களை சிந்திப்பதால், அதை புரிந்துகொள்வது சிரமமாக இருக்கும் என நினைத்தேன். ஆனால் நான் நினைத்தது தவறு. அனைத்தும் தெளிவாகவும் தர்க்க ரீதியாகவும் சொல்லப்பட்டிருந்தது.”
சரித்திரத்தில் சிலர் உண்மையிலேயே மிகவும் கொடூரமான துன்பத்தை அனுபவித்திருக்கிறார்கள். இது யூதருடைய விஷயத்தில் உண்மை, முக்கியமாக கடந்த நூற்றாண்டில் நாசி சித்திரவதை முகாமில் அவர்கள் இப்படிப்பட்ட துன்பத்தை அனுபவித்தார்கள். போரில்லா உலகம் என்றாவது வருமா? என்ற சிற்றேட்டை வாசிக்கும்படி உங்களை உற்சாகப்படுத்துகிறோம். “கடவுள் ஏன் துன்பத்தை அனுமதித்திருக்கிறார்?” “மெய் கடவுளை அறிதல்—அது எதை அர்த்தப்படுத்துகிறது?” “தேசத்தை யார் சமாதானத்திற்கு வழிநடத்துவார்?” போன்ற தலைப்புகளில் இந்தச் சிற்றேடு பேசுகிறது.
கீழ்க்காணும் கூப்பனை பூர்த்திசெய்து அதிலுள்ள விலாசத்திற்கோ அல்லது இந்தப் பத்திரிகையில் 5-ம் பக்கத்திலுள்ள பொருத்தமான விலாசத்திற்கோ அனுப்பி இந்தச் சிற்றேட்டைப் பற்றிய கூடுதலான தகவலை நீங்கள் பெற்றுக்கொள்ளலாம்.(g01 6/22)
◻ போரில்லா உலகம் என்றாவது வருமா? என்ற சிற்றேட்டைப் பற்றிய கூடுதலான தகவலை எனக்கு அனுப்புங்கள்.
◻ இலவசமாக பைபிளை கற்றுக்கொள்ள ஆசைப்படுகிறேன்.