எமது வாசகரிடமிருந்து
எமது வாசகரிடமிருந்து
பங்கு சந்தை “பங்குச் சந்தையில் பணத்தைப் போடலாமா?” (நவம்பர் 8, 2000) என்ற சமநிலையான கட்டுரைக்கு நன்றி. பங்கு சந்தை சம்பந்தமாக கொடுக்கப்படும் நிச்சயமற்ற டிப்ஸ்களைப் பற்றி கவனமாக இருக்க வேண்டும் என்பதை அனுபவம் எனக்கு கற்றுத் தந்திருக்கிறது. அவை பெரும்பாலும் பேரிழப்புக்கு வழிநடத்துகின்றன. பங்குகளை வாங்குவதற்கு முன்பு, மார்க்கெட் நிலவரத்தைப் பற்றி பொதுவாக அறிந்திருப்பது ஞானமானது.
என். பி., ஜெர்மனி (g01 6/8)
பங்கு சந்தையில் முதலீடு செய்வது ‘அதிர்ஷ்ட தெய்வத்தில்’ நம்பிக்கை வைப்பதை குறிக்காது என்ற உங்களுடைய கருத்தை ஆட்சேபிக்கிறேன். (ஏசாயா 65:11, NW) திடீரென மாறிவிடும் ஓர் அமைப்பில் நம்முடைய பணத்தைப் போடுவது சூதாட்டத்திற்கு சமம்.
பி. பி., ஐக்கிய மாகாணங்கள்
பங்கு சந்தையில் முதலீடு செய்வது பேரிழப்பை கொண்டுவரும் ஆபத்தான ஒன்று என்பது உண்மைதான். எந்தவொரு வியாபாரத்தையும் போலவே, இதையும் திட்டவட்டமாக வரையறுக்க முடியாது. என்றபோதிலும், பங்குகளை விற்பதை சூதாட்டம் என சொல்வது சரியாக இருக்காது. எந்தப் பொருளையும் பரிமாற்றம் செய்யாமல் பணம் கைமாறுவதே சூதாட்டம். ஆனால், பங்கு என்பது ஒரு வியாபாரத்தில் உரிமையாளருடைய முதலீட்டு பங்கை குறிக்கிறது. ஆகவே, பங்கை விற்பது சட்டரீதியிலான பொருட்களை வாங்குவதாகவும் விற்பதாகவுமே கருதப்படும்.—ED.(g01 6/8)
சாகச விளையாட்டுக்கள் கிளைடரில் பட்டம்போல பறப்பதற்கு வாய்ப்பு எனக்கு சமீபத்தில் கிடைத்தது. அது என்னை சுண்டியிழுத்தது, ஆனால் இதைப் பற்றி பைபிள் என்ன சொல்கிறது என்பதை அறிவதில் அதிக ஆவலாக இருந்தேன். சில நாட்களுக்குப் பிறகு, “சாகச விளையாட்டுக்கள்—சாக துணியலாமா?” (நவம்பர் 8, 2000) என்ற கட்டுரையில் அதற்கு பதில் கிடைத்தது. கிளைடரில் பறப்பது உண்மையிலேயே மெய்சிலிர்க்க வைக்கும் அனுபவமாக தோன்றுகிறது. ஆனால் அதில் ஈடுபட்டு என்னுடைய உயிரை ஆபத்திற்குள்ளாக்குவதைக் காட்டிலும் யெகோவாவுடன் என்னுடைய உறவே அதிமுக்கியம்.
எம். எம். எஸ்., பிரேஸில் (g01 6/8)
இயேசுவை சாத்தான் சோதித்தது “அநேகமாக ஒரு தரிசனத்தில்” என நீங்கள் குறிப்பிட்டிருந்தீர்கள். அப்படியானால் அந்தச் சோதனைகள் நிஜமானவை இல்லையா?
சி. ஜி. எச்., ஐக்கிய மாகாணங்கள்
பைபிளிலுள்ளவற்றை அப்படியே சொல்லர்த்தமாக எடுத்துக்கொண்டால் பல அம்சங்கள் சிக்கலாக இருக்கும். உதாரணமாக, ‘உலகத்தின் சகல ராஜ்யங்களையும் அவைகளின் மகிமையையும் இயேசுவுக்கு காண்பிக்கும்’ அளவுக்கு உயரமான மலை எதுவும் கிடையாது. ‘பிசாசு அவரைப் பரிசுத்த நகரத்திற்குக் கொண்டுபோய், தேவாலயத்து உப்பரிகையின்மேல் அவரை நிறுத்துவதற்கு’ இயேசு அனுமதிப்பார் என்றும் நினைக்க முடியாது. (மத்தேயு 4:5-8) அப்படியென்றால், ஒருவகை தரிசனம் இதில் உட்பட்டிருக்கிறது என்பது தெளிவாகிறது. இது எப்படி நிகழ்ந்திருந்தாலும், கிறிஸ்துவை சாத்தான் சோதித்தது உண்மையிலேயே நடந்த ஒன்று. இப்படிப்பட்ட சோதனைக்கு இயேசு இணங்கிவிட மறுத்தது அவருடைய அசைக்க முடியாத உத்தமத்தை எடுத்துக் காட்டியது.—ED.(g01 6/8)
உங்கள் ஆரோக்கியம் வர்மக்கலை மருத்துவராகவும் பதிவுபெற்ற ‘பிஸியோ தெரபிஸ்ட்டாக’வும் இத்துறையில் 21 வருடங்களாக பணியாற்றி வருகிறேன். ஆயிரக்கணக்கான நோயாளிகளுக்கு உதவி அளித்திருக்கிறேன். “உங்கள் ஆரோக்கியம்—உங்கள் கையிலா?” (நவம்பர் 8, 2000) என்ற தொடர் கட்டுரைகளில் வர்மக்கலை மருத்துவத்தில் ஆபத்து இருப்பதாக சொல்லப்பட்டிருப்பதால் மக்கள் பயந்து, இந்த மருத்துவத்தை நாடத் தயங்கலாம் என்பதால் அதைக் குறித்து மிகவும் கவலைப்படுகிறேன்.
ஏ. கே., ஐக்கிய மாகாணங்கள் (g01 6/22)
கழுத்துப் பகுதிக்கு வர்ம சிகிச்சை அளிக்கும் போது நோயாளிக்கு பக்கவாதம் போன்ற பெரும் ஆபத்துக்கள் ஏற்படலாம் என நீங்கள் கூறுகிறீர்கள். நானும் ஒரு வர்மக்கலை மருத்துவராக 50-க்கும் மேற்பட்ட ஆண்டுகளாக சிகிச்சையளித்து வந்திருக்கிறேன், இதுபோன்ற பக்கவிளைவுகளை கண்டதும் இல்லை, கேள்விப்படவுமில்லை.
பி. டி. பி., ஐக்கிய மாகாணங்கள்
வர்மக்கலை மருத்துவத்தை வாசகர்கள் விரும்பினால் அதை நாடுவதை தடுப்பது எங்களுடைய நோக்கமல்ல. “விழித்தெழு!” இவ்வாறு அறிக்கை செய்தது: “வர்மக்கலையில் கைதேர்ந்த நிபுணர்கள் சிகிச்சை அளிக்கும்போது பக்கவிளைவுகள் அவ்வளவாக இருந்ததில்லை.” அதேசமயத்தில், “ஆர்கய்வ்ஸ் ஆஃப் இன்டர்னல் மெடிஸின்” தொகுதி 158, நவம்பர் 9, 1998, இதைப் பற்றி இவ்வாறு குறிப்பிட்டது: “மோசமான விளைவுகளின் வீதம் எவ்வளவு என்பது இன்னும் சர்ச்சைக்குரியதாக இருக்கிறது,” மேலும் “4,00,000-க்கு ஒருவர் முதல் 1 கோடிக்கு 3 முதல் 6 பேர் வரை என அது கணக்கிடுகிறது.” வர்மக்கலை சிகிச்சையால் பக்கவாதம் போன்ற பக்கவிளைவுகள் ஏற்படுவது மிக மிக அரிது என அத்தாட்சிகள் காட்டுவதை நாங்கள் தெளிவாக்கியிருக்க வேண்டும்.—ED.(g01 6/22)