Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

பிள்ளைகளை கவனிக்கும் சவால்

பிள்ளைகளை கவனிக்கும் சவால்

பிள்ளைகளை கவனிக்கும் சவால்

பிரிட்டன் செல்வச் செழிப்பில் மிதக்கும் ஒரு மேலை நாடு. ஆனால் ஒவ்வொரு வருடமும் ஒரு லட்சத்திற்கும் அதிகமான பிள்ளைகள்​—⁠முன்பைவிட இரண்டு மடங்கானோர்​—⁠வீட்டை விட்டு ஓடிவிடுகிறார்கள். இதனால் ஏழு பேரில் ஒருவர் வன்முறைக்கு அல்லது பாலின தாக்குதலுக்கு ஆளாகிறார்.

“பிள்ளைகள் ஒதுக்கப்பட்டவர்களாகவும் கைவிடப்பட்டவர்களாகவும் உணரும்போது, வீட்டைவிட்டு ஓடிப்போவது ஒருவகை பரிகாரமாக தோன்றலாம்” என பிள்ளைகள் சங்கத்தின் மேலாளர் ஈன் ஸ்பார்க்ஸ் கூறுகிறார். “இந்தப் பிரச்சினை எல்லா தரப்பினரையும் பாதிக்கிறது​—⁠அபார்ட்மென்ட்டில் குடியிருக்கும் பிள்ளைகளைப் போலவே ஒருவேளை பங்களாக்களில் குடியிருக்கும் பிள்ளைகளும் ஓடிப்போகலாம்.”

பிள்ளைகளை கவனித்துக்கொள்வதும் அவர்களைப் பயிற்றுவிப்பதும் ஒரு பெரிய உத்தரவாதம். உதவி எங்கே கிடைக்கும்? இதைப் பூர்த்தி செய்யவே குடும்ப மகிழ்ச்சியின் இரகசியம் என்ற புத்தகம் தயாரிக்கப்பட்டுள்ளது. இதிலுள்ள 16 அதிகாரங்களில் உங்களுக்காக சில தலைப்புகள்: “சிசுப்பருவத்திலிருந்தே உங்கள் பிள்ளையை பயிற்றுவியுங்கள்,” “உங்கள் பருவவயது பிள்ளை செழித்தோங்க உதவிசெய்யுங்கள்,” “உங்கள் குடும்பத்தை தீங்கு விளைவிக்கும் செல்வாக்குகளிலிருந்து பாதுகாத்திடுங்கள்.” இந்தப் புத்தகத்திலுள்ள 16 அதிகாரங்களிலும் நடைமுறையான ஆலோசனைகள் குவிந்து கிடக்கின்றன. மிக முக்கியமாக, நம்முடைய ஞானத்திற்கும் மிக மேலான ஞானத்தின் ஊற்றாகிய பைபிளையே இது பயன்படுத்துகிறது.

கீழ்க்காணும் கூப்பனை பூர்த்திசெய்து அதிலுள்ள விலாசத்திற்கோ அல்லது இந்தப் பத்திரிகையில் 5-⁠ம் பக்கத்திலுள்ள பொருத்தமான விலாசத்திற்கோ அனுப்பி, குடும்ப மகிழ்ச்சியின் இரகசியம் என்ற இந்தப் புத்தகத்தைப் பற்றிய கூடுதலான தகவலை நீங்கள் பெற்றுக் கொள்ளலாம்.(g01 8/22)

குடும்ப மகிழ்ச்சியின் இரகசியம் என்ற புத்தகத்தைப் பற்றி கூடுதலான தகவலை எனக்கு அனுப்புங்கள்.

◻ இலவசமாக பைபிளை கற்றுக்கொள்ள ஆசைப்படுகிறேன்.