“இப்படிப்பட்ட புத்தகத்தை நான் வாசித்ததே இல்லை”
“இப்படிப்பட்ட புத்தகத்தை நான் வாசித்ததே இல்லை”
உங்கள்மீது அக்கறையுள்ள படைப்பாளர் இருக்கிறாரா? (ஆங்கிலம்) என்ற புத்தகம் வட போலந்திலுள்ள சிச்சீநெக் என்ற இடத்திற்கு அருகில் வாழும் இளம் வூக்காஷை கவர்ந்தது. ஆகவே, அதை பள்ளிக்கூடத்திற்குக் கொண்டு சென்று, இயற்பியல் ஆசிரியைக்கு கொடுக்க தீர்மானித்தான். அண்டத்தைப் பற்றிய தகவல்களுக்கு அந்த ஆசிரியையின் கவனத்தை ஈர்த்தான். பக்கம் 78-ல் உள்ள விளக்கப்படத்தை அவருக்கு காண்பித்தான் (இங்கே காண்பிக்கப்பட்டுள்ளது). இது, அண்டத்தின் தோற்றம் சம்பந்தமாக, இரு கருத்துக்களில் எது சரி என்பதை சிறப்பித்துக் காட்டுகிறது, இதைப் பற்றி நீங்களும் சிந்தித்துப் பார்க்கலாம்.
வூக்காஷிடம் பிற்பாடு அந்த ஆசிரியை இவ்வாறு கூறினார்: “இப்படிப்பட்ட புத்தகத்தை நான் வாசித்ததே இல்லை. சிக்கலான விஞ்ஞான தகவல்களை மிக சுருக்கமாக அதேசமயத்தில் எளிமையாகவும் தர்க்க ரீதியாகவும் விளக்குகிறது! இந்தப் புத்தகம் எனக்கு முன்பே கிடைத்திருந்தால், இயற்பியல் சம்பந்தமான புத்தம்புதிய வழிகாட்டி நூலை மேல்நிலை பள்ளிக்காக வாங்கியிருந்திருக்கவே மாட்டேன். என்னுடைய வகுப்புகளில் நிச்சயம் இதை பயன்படுத்துவேன்.”
உங்கள்மீது அக்கறையுள்ள படைப்பாளர் இருக்கிறாரா? என்ற புத்தகத்தை வாசித்துப் பார்த்ததால் உயிரின் தோற்றத்தையும், வாழ்க்கையின் நோக்கத்தையும், நாம் எப்படி வந்தோம் என்பதையும் பற்றி ஆழமாக சிந்தித்துப் பார்க்க அநேகர் தூண்டப்பட்டிருக்கிறார்கள். மிக முக்கியமாக, தகுந்த ஆதாரத்தின் அடிப்படையில் முடிவெடுப்பதற்கு அநேகர் உதவி செய்யப்பட்டிருக்கிறார்கள்.
கீழ்க்காணும் கூப்பனை பூர்த்திசெய்து அதிலுள்ள விலாசத்திற்கு அல்லது இந்தப் பத்திரிகையில் பக்கம் 5-ல் உள்ள பொருத்தமான விலாசத்திற்கு அனுப்பி 192 பக்கங்களைக் கொண்ட இப்புத்தகத்தைப் பற்றிய கூடுதலான தகவலை நீங்கள் பெற்றுக்கொள்ளலாம். (g01 9/8)
◻ உங்கள்மீது அக்கறையுள்ள படைப்பாளர் இருக்கிறாரா? என்ற புத்தகத்தைப் பற்றி கூடுதலான தகவலை எனக்கு அனுப்பவும்.
◻ இலவசமாக பைபிளை கற்றுக்கொள்ள ஆசைப்படுகிறேன்.
[பக்கம் 32-ன் படங்களுக்கான நன்றி]
Courtesy of Anglo-Australian Observatory, photograph by David Malin
“Pillars of Creation” on cover of book: J. Hester and P. Scowen (AZ State Univ.), NASA