Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

எமது வாசகரிடமிருந்து

எமது வாசகரிடமிருந்து

எமது வாசகரிடமிருந்து

காதலிக்க வயசு பத்தாதா? “இளைஞர் கேட்கின்றனர் . . . எனக்கு காதலிக்க வயசு பத்தாது என்று பெற்றோர் நினைத்தால்?” (பிப்ரவரி 8, 2001) கட்டுரையை அனுபவித்து மகிழ்ந்தேன். எனக்கு 17 வயதாகிறது, கல்யாணம் செய்துகொள்ளவோ ஒரு குடும்பத்தை காப்பாற்றவோ நான் இன்னும் தயாராக இல்லை என்ற முடிவுக்கு வந்திருக்கிறேன். காதலிப்பதற்கு முன்பு அதைப் பற்றி கவனமாக சிந்திக்கவும், காதலித்து கல்யாணம் செய்துகொள்ள தீர்மானிக்கையில் விவேகத்தை உபயோகிக்கவும் இந்த கட்டுரை எனக்கு உதவும்.

ஏ. எம். ஹெச்., ஐக்கிய மாகாணங்கள் (g01 10/8)

எனக்கு 15 வயதுதான் ஆகிறது, ஆனால் காதலிக்கும்படி பள்ளியிலிருந்து வரும் அழுத்தம் ரொம்பவும் சோர்வுற செய்கிறது. பைபிளும் உடன் கிறிஸ்தவர்களும் என்னை ஆதரிக்கிறார்கள் என அறிவது உற்சாகமளிக்கிறது. என்னுடைய நிலைநிற்கையில் உறுதியாயிருக்க இது எனக்கு உதவுகிறது!

எல். எம்., கனடா (g01 10/8)

இரண்டு இளைஞர் தொலைபேசியில் பேசிக்கொண்டிருக்கும் சூழ்நிலையை என்னால் நன்றாகவே புரிந்துகொள்ள முடிகிறது, ஏனெனில் எனக்கும் அதேபோன்ற நிலைதான் ஏற்பட்டிருக்கும். நான் காதலிக்க இன்னும் தயாராக இல்லை என்பதை அறிந்ததால் ஒருவரோடுள்ள உறவை முறித்துக்கொள்ள வேண்டியிருந்தது. காத்திருப்பதற்கான எனது தீர்மானத்தில் உறுதியாயிருக்க இப்படிப்பட்ட கட்டுரைகள் உற்சாகமளிக்கின்றன.

எம். ஆர். சீ., ஐக்கிய மாகாணங்கள் (g01 10/8)

எனக்கு வயது 14. திருமணம் செய்ய நான் தயாராக இல்லாததால் இந்த வயதில் காதலிப்பது எவ்வளவு ஆபத்தானது என்பதை புரிந்துகொள்ள இந்த கட்டுரை எனக்கு பெரிதும் உதவியது. காதலித்துக் கொண்டிருப்பதற்கு பதிலாக யெகோவாவோடு உள்ள உறவை வளர்க்க இப்பொழுதே உழைக்க வேண்டிய தேவையை உணர அந்த கட்டுரை எனக்கு உதவியது.

ஏ. பீ., கனடா (g01 10/8)

இந்த கட்டுரை எனக்காகவே எழுதப்பட்டதுபோல் இருந்தது. என் பெற்றோர் ரொம்ப கண்டிப்பாகவும் என் உணர்ச்சிகளை புரிந்துகொள்ளாமலும் இருப்பதாக நினைத்தேன். எனக்கு உதவி செய்து, என்னை பாதுகாக்க தங்களால் முடிந்த எல்லாவற்றையும் செய்கிறார்கள் என்பதை இப்போது புரிந்துகொள்கிறேன். வரப்போகிற “இளைஞர் கேட்கின்றனர்” கட்டுரைகளை படிக்க ஆவலோடு காத்திருக்கிறேன்!

ஹெச். ஈ., ருமேனியா (g01 10/8)

சூனாமிகள் எனக்கு 12 வயது, உங்கள் பத்திரிகைகள் எல்லாவற்றையும் வாசிப்பேன். “கொலைகார அலைகள்​—⁠உண்மையும் பொய்யும்” (மார்ச் 8, 2001) என்ற கட்டுரை எனக்கு ரொம்பவும் பிடித்திருந்தது. அந்த அலைகள் என்னை மிகவும் கவர்ந்தன; அவை எவ்வளவு சக்திவாய்ந்தவை என்பதை உதாரணத்தோடு நீங்கள் விளக்கியதையும் ரசித்து படித்தேன்.

கே. எஸ்., ஐக்கிய மாகாணங்கள் (g01 10/22)

கதிரியக்கம் “கதிரியக்கம்​—⁠ஜாக்கிரதை!” (மார்ச் 8, 2001) என்ற கட்டுரை மிகவும் எளிதாக விளக்கப்பட்டிருந்தது என்னை கவர்ந்தது. ஸ்ட்ரான்ஷியம் 90 போன்ற தனிமங்கள் மிகவும் ஆபத்தானவை என்பது எனக்கு தெரியும், ஆனால் சிசு பருவம் முதல் அவை மனிதனை பாதிக்கும் என தெரியாது. இப்படிப்பட்ட சிக்கலான விஷயங்களை புரிந்துகொள்வது மிகவும் உபயோகமானது. ஏனெனில், மனிதர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண மகத்தான சிருஷ்டிகரின் உதவி தேவை என்பதை உணர இது மக்களுக்கு உதவும். அனைவரும் பயனடைவதற்காக கடினமான விஷயங்களையும் எளிமையாக சொல்வதன் மூலம் உங்கள் வாசகர்மீது தொடர்ந்து காண்பிக்கும் அக்கறைக்காக உங்களுக்கு ரொம்ப நன்றி.

எம். ஸெட்., இத்தாலி (g01 10/22)