Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

எமது வாசகரிடமிருந்து

எமது வாசகரிடமிருந்து

எமது வாசகரிடமிருந்து

கட்டுரை உயிரை காப்பாற்றியது லென்னீ என்பவரை நாங்கள் சந்தித்தோம்; “டெங்கு​—⁠கொசுக்கடி காய்ச்சல்” (ஜூலை 22, 1998) என்ற கட்டுரை தன் அண்ணனுடைய மகளின் உயிரை காப்பாற்றியதாக அவர் சொன்னார். அவளுக்கு நாட்கணக்கில் அடித்துவந்த காய்ச்சல் குறையவே இல்லை. உடம்பெல்லாம் தடிப்பு தடிப்பாக வந்திருந்தது; ஆனால் அதை தட்டம்மை என்று நினைத்த அவள் பெற்றோர் அவ்வளவாய் கண்டுகொள்ளவில்லை. தான் வாசித்த கட்டுரை லென்னீயின் நினைவிற்கு வரவே, அந்த பத்திரிகையை தேடியெடுத்து டெங்கு காய்ச்சலுக்கான அறிகுறிகளைப் பற்றி விளக்கியிருந்த பகுதியை மறுபடியும் வாசித்தார். பிறகு அவளை ஆஸ்பத்திரியில் காட்டுவதற்கு அவளுடைய பெற்றோரை சம்மதிக்க வைத்தார். ஆஸ்பத்திரியில் இருந்த டாக்டர்கள், அவளுக்கு ரத்தக்கசிவு டெங்கு காய்ச்சல் என்று உறுதி செய்தனர். தன் அண்ணன் மகளை காப்பாற்ற தனக்கு உதவிய விழித்தெழு! பத்திரிகையை லென்னீ பாராட்டினார்; பின்பு பைபிள் படிப்புக்கு ஒப்புக்கொண்டார்.

ஹே. எம். எல்., பிலிப்பீன்ஸ் (g01 11/8)

வரலாறு “சரித்திரம் சொல்லும் பாடம் என்ன?” (ஏப்ரல் 8, 2001) என்ற தொடர்கட்டுரை சம்பந்தமாக இதை எழுதுகிறேன். நான் இதுவரை வாசித்திருக்கும் அபாரமான கட்டுரைகளில் இவையும் அடங்கும். முழு பத்திரிகையையும் வாசித்து முடிக்கும்வரை அதை கீழே வைக்க எனக்கு மனம் வரவில்லை. உங்கள் பத்திரிகைக்காக நீங்கள் செய்யும் ஆராய்ச்சி எப்பேர்ப்பட்டது! அதில் அளிக்கப்பட்டிருக்கும் தகவலின் அளவிற்கும் தரத்திற்கும் எல்லையே இல்லை; இவையெல்லாம் என்னை எப்போதுமே மலைக்க வைக்கின்றன.

எம். சி., ஐக்கிய மாகாணங்கள் (g01 11/22)

ஏற்க மறுத்த காதல் “இளைஞர் கேட்கின்றனர் . . . மனசுக்குப் பிடிக்காதவருடைய காதலை ஏற்க மறுப்பது எப்படி?” (ஏப்ரல் 8, 2001) என்ற கட்டுரையை வாசித்தபோது, சொந்த அனுபவத்தால் ஏற்பட்ட வேதனையை உணர்ந்தேன். என் உணர்வுகளை அசட்டை செய்ததால் எங்கள் திருமணம் சீர்குலைந்தது. அந்தக் கட்டுரை சொன்ன விதமாகவே, “பரிதாப உணர்வை அடித்தளமாக வைத்து உங்கள் குடும்ப வாழ்க்கையை கட்டினால் அது ஆட்டம்கண்டுவிடும்.”

ஏ. எம்., ஐக்கிய மாகாணங்கள் (g01 11/22)

தன்னுடன் காதலீடுபாடு கொள்ளும்படி ஓர் இளைஞன் என்னிடம் கேட்டான்; ஆனால் எங்கள் இலட்சியங்கள் ஒத்துவராததால் நான் மறுத்துவிட்டேன். ஆனாலும் எவ்வளவாய் என்னை காதலிக்கிறான் என அவன் மறுபடியும் தெரிவித்தான். அவன் காதலை ஏற்க மறுத்தால் நான் தனிமையில் விடப்படுவேனோ என நினைத்து மிகவும் குழம்பிப்போனேன்! என்றாலும், இந்தக் கட்டுரையை வாசித்தபோது, பொங்கிய அந்த உணர்ச்சிகள் அடங்கின. நான் எடுத்த தீர்மானமே சரியானது என்று எனக்குத் தெரிந்தது.

எஸ். என்., ஜப்பான் (g01 11/22)

இந்தக் கட்டுரை எனக்கு கிடைப்பதற்கு மூன்று நாட்களுக்கு முன்பு ஓர் இளைஞன் என்னிடம், “உங்களப்பத்தி அதிகம் தெரிஞ்சிக்க ஆசைப்படறேன்” என்று சொன்னான். எனக்கு ஒரே குழப்பம். அவன்பால் ஈர்க்கப்பட்டேன்; ஆனால் நான் காதலீடுபாடு கொள்ளும் வயதை எட்டவில்லை என்றும் எனக்குத் தெரிந்திருந்தது. இப்போதோ, இந்தக் கட்டுரையை வாசித்த பிறகும், “இளைஞர் கேட்கின்றனர் . . . எனக்கு காதலிக்க வயசு பத்தாது என்று பெற்றோர் நினைத்தால்?” (பிப்ரவரி 8, 2001) என்ற கட்டுரையை மறுபடியும் வாசித்த பிறகும், நான் என்ன செய்ய வேண்டும் என்று எனக்குத் தெரிந்துவிட்டது.

ஆர். எஸ்., ஐக்கிய மாகாணங்கள் (g01 11/22)

எனக்கு திருமண நிச்சயம் ஆனபோது நான் சரியான தீர்மானம் செய்வதாக நினைத்தேன். என் தெரிவு சரியில்லாததுபோல் தோன்றுவதாக என் பெற்றோரும் முதிர்ச்சிவாய்ந்த கிறிஸ்தவ நண்பர்களும் எனக்கு ஆலோசனை சொன்னார்கள்; நானோ அவர்கள் சொல்லைக் கேட்கவில்லை. ஒரு மாதம் முடிந்து சில நாட்களுக்குப் பிறகு அந்த உறவை துண்டித்துவிட்டேன். விஷயம் அந்தளவுக்கு செல்லுவதற்கு முன்பே வேண்டாம் என்று சொல்லும் தைரியம் எனக்கு இருந்திருந்தால், எனக்கும் என்னைத் திருமணம் செய்துகொள்ள இருந்தவருக்கும் இத்தனை தொல்லைகள் ஏற்பட்டிருக்காது.

வீ. டீ., இத்தாலி (g01 11/22)

திருட்டுத்தனமாக வெளியே போவது “இளைஞர் கேட்கின்றனர். . திருட்டுத்தனமாக இரவில் வெளியே போவது தப்பா?” (மார்ச் 8, 2001) என்ற கட்டுரைக்கு நன்றி. சில இளம் கிறிஸ்தவர்கள் பேதைகளாக இருப்பதைக் காண்பது எனக்கு விசனமாக இருக்கிறது. ஓர் இளம் பெண் பார்ட்டியில் கலந்துகொள்வதற்காக திருட்டுத்தனமாக வெளியே கிளம்பி, கற்பழிக்கப்பட்டாள். யாருமே அவளுக்கு உதவி செய்ய வரவில்லை. தயவுசெய்து நம் இளைஞர்களை தொடர்ந்து எச்சரியுங்கள்!

ஜே. என்., ஐக்கிய மாகாணங்கள் (g01 11/8)