Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

“பரிசோதனை படுதோல்வி

“பரிசோதனை படுதோல்வி

“பரிசோதனை படுதோல்வி

படுவேகமாக சுருங்கி வரும் இன்றைய உலகளாவிய கிராமத்தில் ஏழை, பணக்காரர் என்ற பாகுபாடு அதிகரித்து வருவதாக சொல்லப்படுகிறது. உலக பொருளாதாரத்திற்கு வித்திடும் முயற்சிகளை பற்றி சர்வதேச ஆர்வலர் குழு ஒன்று இவ்வாறு கூறியது: “ஆரம்பித்து 50 வருடங்களுக்கு பிறகு இந்த பரிசோதனை தோல்வியை நோக்கி செல்கிறது. அனைவருக்கும் பொருளாதார ரீதியில் நன்மை அளிப்பதற்கு பதிலாக சுற்றுச்சூழல் பேரழிவு, ஒருபோதும் இல்லாதளவிற்கு சமுதாய சீர்​குலைவு, பெரும்பாலான நாடுகளின் பொருளாதார சீரழிவு, ஏழ்மை, பட்டினி, நிலத்தை இழத்தல், இடப்பெயர்ச்சி, சமூக பிரச்சினைகள் போன்றவற்றை அதிகரித்து இந்த கிரகத்தை அழிவின் விளிம்பிற்கே அழைத்து சென்றுள்ளது. இப்போது, இந்த பரிசோதனை படுதோல்வி அடைந்துவிட்டது என்றே சொல்லலாம்.”

எங்கே தவறு நடந்தது? மனிதர்கள் சுயநல நாட்டங்களிலேயே மூழ்கிப் போகையில் தீங்கு ஏற்பட அதிக வாய்ப்புள்ளது. “பொருளாதார சந்தைகள், மனிதர்கள் (உழைப்பு), இயற்கை (நிலம்) உட்பட அனைத்தையுமே வெறும் விற்பனை பொருட்களாக்கிவிடுகின்றன” என முதலீட்டாளரும் பொருளியலாளருமான ஜார்ஜ் சாராஸ் குறிப்பிடுகிறார். மனித அபூரணமும் ஒரு காரணமாகும். தத்துவஞானி கார்ல் பாப்பரின் கருத்துகளை எதிரொலிப்பவராக சாராஸ் இவ்வாறு கூறுகிறார்: “நமது புரிந்துகொள்ளுதல் நித்தமும் அபூரணமானதே. கடைமுடிவான சத்தியத்தை, சமுதாய நலனுக்கான பரிபூரண திட்டமைப்பை நம்மால் ஒருகாலும் அடையவே முடியாது.”

பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் நேற்று இன்று தோன்றியவை அல்ல. கிறிஸ்துவிற்கு எட்டு நூற்றாண்டுகள் முன்பு வாழ்ந்த ஒரு பைபிள் எழுத்தாளர், “தரித்திரரை ஒடுக்கி, எளியவர்களை நொறுக்”குகிறவர்களை பற்றி எழுதினார். (ஆமோஸ் 4:1) இதைப் போன்ற அநீதிகளை கண்ட அன்றைய அரசியல் மேதை ஒருவர், “மனுஷன் தனக்கே கேடுண்டாக வேறொரு மனுஷனை ஆளுகிற காலமுமுண்டு” என சுமார் 3,000 வருடங்களுக்கு முன்பு எழுதினார்.​—பிரசங்கி 8:9.

இதற்கு தீர்வு என்ன? ஆழமாக வேரூன்றியிருக்கும் இந்த பொருளாதார ஏற்றத்தாழ்வுகளை சர்வதேச ஒத்துழைப்பின் மூலம் மனித அமைப்புகளால் பிடுங்கி எறிய முடியுமா? சாராஸ் இவ்வாறு கூறுகிறார்: “தனி மனித சுதந்திரம், மனித உரிமைகள், சுற்றுச்சூழல் ஆகியவற்றை பாதுகாக்கவும் சமூக நீதியை நிலைநாட்டவும் போதுமான சர்வதேச அமைப்புகள் இல்லை; இப்படியிருக்க சமாதானத்தை பாதுகாப்பதை பற்றிய பேச்சிற்கே இடமில்லை. நம்மிடம் உள்ள பெரும்பான்மையான அமைப்புகளும் மாகாணங்களின் கூட்டணியே; இந்த மாகாணங்கள் எப்போதும் பொதுநலத்தைவிட சுயநலத்தையே முதலில் வைக்கின்றன. ஐக்கிய நாடுகள் சாசனத்தின் முன்னுரையில் உள்ள வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கு அதனிடம் சட்டப்பூர்வமான தகுதியில்லை.”

நாம் நம்பிக்கை இழக்க வேண்டுமா? வேண்டாம். நீதியான ஓர் உலக அரசாங்கம் வெகு விரைவில் வரவிருக்கிறது! இயேசு அதைப் பற்றித்தான் பிரசங்கித்தார். அதை “தேவனுடைய ராஜ்யம்” என அழைத்தார், அதற்காக ஜெபிக்கும்படி தமது சீஷர்களுக்கு கற்பித்தார். (லூக்கா 11:2; 21:31) கடவுளுடைய ராஜ்யம் பரலோகத்தில் ஸ்தாபிக்கப்பட்டுவிட்டது, சீக்கிரத்தில் இந்த பூமியிலுள்ள அனைத்து அநீதியையும் துடைத்தழித்துவிடும். (வெளிப்படுத்துதல் 11:15, 18) கடவுளுடைய ராஜ்யம், எவ்வாறு ஆட்சி செய்வது என்பதை பற்றிய தற்காலிக பரிசோதனையாக இருக்காது, மாறாக அது என்றென்றுமாக நிலைத்திருக்கும். (தானியேல் 2:44) ஏழ்மை, ஒடுக்குதல் போன்ற பிரச்சினைகளை அது முற்றிலுமாக நீக்கிவிடும். ஏழைகளுக்கும் ஒடுக்கப்படுபவர்களுக்கும் மட்டுமல்ல அனைவருக்குமே எப்பேர்ப்பட்ட அருமையான எதிர்பார்ப்பு!(g01 11/8)

[பக்கம் 19-ன் படம்]

உலக பொருளாதாரம் ஏழைகளின் பிரச்சினைகளை தீர்க்கவில்லை​—⁠இன்றும் கோடிக்கணக்கானோர் தண்ணீர், மின்சாரம் இன்றி அவதிப்படுகின்றனர்