Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

பிள்ளைகளை எப்படி சிட்சிக்க வேண்டும்?

பிள்ளைகளை எப்படி சிட்சிக்க வேண்டும்?

பிள்ளைகளை எப்படி சிட்சிக்க வேண்டும்?

“பிள்ளைகள் என்ன செய்தாலும் அவர்களை மெச்சுவதால் பிரச்சினைகள் ஏற்படுகின்றன” என்பதாக கனடாவின் நேஷனல் போஸ்ட் செய்தித்தாள் சொல்கிறது. இவ்வாறு செய்வதால் தங்கள் பிள்ளைகளுக்கு சுயமரியாதை வளருவதாக சில பெற்றோர் நம்புகின்றனர். எனினும், “உண்மையான சாதனையின் அடிப்படையில் கிடைக்கும் உயர்ந்த சுயமரியாதை பொருத்தமானதே; மற்றபடி பிள்ளைகளுக்கு சுயகட்டுப்பாட்டை கற்றுக்கொடுப்பதில் பெற்றோர் கவனம் செலுத்த வேண்டும்” என்கிறார் உளவியல் நிபுணர் ராய் பாவ்மைஸ்டர்.

பிள்ளை தவறான அடியெடுத்து வைக்கையில் சிட்சிக்க பயப்படும் பெற்றோர் அந்த பிள்ளைக்கு கெடுதலையே செய்கிறார். சொல்லப்போனால், சிட்சிப்பதும் ஒரு போதனா முறையே. தவறு செய்யும் ஒரு பிள்ளை அதே தவறை மீண்டும் மீண்டும் செய்யாதிருக்க அது கற்றுக்கொடுக்கிறது. கடுமையான, செய்த தவறுக்கு மிஞ்சிய சிட்சையை கொடுத்துவிடாதபடி பெற்றோர் பார்த்துக்கொள்ள வேண்டும். (எரேமியா 46:28) சிட்சை மட்டுக்கு மீறிப் போகாதிருப்பதை அவர்கள் நிச்சயப்படுத்திக்கொள்ள வேண்டும். பைபிள் இவ்வாறு சொல்கிறது: “பிதாக்களே, உங்கள் பிள்ளைகள் திடனற்றுப்போகாதபடி, அவர்களுக்குக் கோபமூட்டாதிருங்கள்.”​—கொலோசெயர் 3:⁠21.

சிட்சையை பைபிள் எப்போதும் அன்போடும் சாந்தத்தோடுமே சம்பந்தப்படுத்தி பேசுகிறது, கோபத்தோடும் முரட்டுத்தனத்தோடும் அல்ல. திறம்பட்ட ஆலோசகர் “எல்லாரிடத்திலும் சாந்தமுள்ளவனும், . . . தீமையைச் சகிக்கிறவனுமாயிருக்க வேண்டும். எதிர்பேசுகிறவர்கள் சத்தியத்தை அறியும்படி . . . சாந்தமாய் அவர்களுக்கு உபதேசிக்க வேண்டும்.” (2 தீமோத்தேயு 2:24-26) ஆகவே, பெற்றோர் கொடுக்கும் சிட்சை வெறுமனே பெற்றோருடைய உணர்ச்சிகளுக்கு வடிகாலாக இருக்கக்கூடாது. ஒரு பிள்ளைக்கு கேடு விளைவிக்கும் விதமாக சிட்சிப்பதை பைபிள் எவ்விதத்திலும் ஆதரிப்பதில்லை.

குடும்ப மகிழ்ச்சியின் இரகசியம் என்ற 192 பக்க பிரசுரத்தால் உலகெங்கும் கோடிக்கணக்கானோர் பயன் அடைந்திருக்கின்றனர். அறிவுரை மிக்க அதன் அதிகாரங்களில் இரண்டு: “சிசுப்பருவத்திலிருந்தே உங்கள் பிள்ளையை பயிற்றுவியுங்கள்” மற்றும் “உங்கள் பருவவயது பிள்ளை செழித்தோங்க உதவிசெய்யுங்கள்.” இப்புத்தகத்தைப் பற்றிய கூடுதலான தகவலை நீங்கள் பெற விரும்பினால், கீழுள்ள கூப்பனை பூர்த்தி செய்து, கூப்பனிலோ இந்த பத்திரிகையின் 5-⁠ம் பக்கத்திலோ கொடுக்கப்பட்டுள்ள பொருத்தமான விலாசத்துக்கு அனுப்புங்கள். பிரச்சினைகளை தீர்த்து படைப்பாளர் விரும்பிய விதமாகவே குடும்ப வாழ்க்கையை இன்பமானதாக்குவதற்கு உதவும் திட்டவட்டமான ஆலோசனைகளை பெறுவீர்கள்.(g01 11/8)

குடும்ப மகிழ்ச்சியின் இரகசியம் என்ற புத்தகத்தைப் பற்றி கூடுதலான தகவலை எனக்கு அனுப்புங்கள்.

◻ இலவசமாக பைபிளை கற்றுக்கொள்ள ஆசைப்படுகிறேன்.