வேஸ்ட் பேப்பர் கடையில் கண்டெடுத்தார்
வேஸ்ட் பேப்பர் கடையில் கண்டெடுத்தார்
இந்தியாவில், சென்னையைச் சேர்ந்த தமிழ் பேசும் வாலிபருக்கு, 1999, ஆகஸ்ட் 8, தேதியிட்ட விழித்தெழு! இதழ் அந்த இடத்தில்தான் கிடைத்தது. அந்தப் பத்திரிகையையும் அவர் பெற முடிந்த மற்ற பிரதிகளையும் ஆராய்ந்து பார்த்த பிறகு யெகோவாவின் சாட்சிகளுடைய இந்திய கிளை அலுவலகத்திற்கு எழுதிய கடிதத்தில் அவற்றைப் பற்றிய தன் கருத்தை கூறினார்.
“விழித்தெழு! மிக அழகாக, அறிவார்ந்ததாக, மிக மிக பயனுள்ளதாக இருக்கிறது. மிக நல்ல சேவையாக இவ்விஷயங்கள் விளங்குகிறது. வாழ்த்துக்கள்!” என அவர் எழுதினார்.
பிறகு அந்த இளைஞர் இவ்வாறு கோரினார்: “மிக அறிவுப்பூர்வமான விழித்தெழு!-வை, உலகெங்கும் பயணித்து செய்திகளை சொல்லும் விழித்தெழு!-வை என் வீட்டில் லைப்ரரி அமைத்து வைத்துக்கொள்ள விருப்பம். இதுவரை வந்த இதழ்களை படித்துவிட்டு, இனி வரும் இதழ்களைப் பெற விரும்புகிறேன்.”
ஒவ்வொரு விழித்தெழு! பத்திரிகையின் 4-வது பக்கத்திலும் விளக்கப்பட்டபடி அது அநேக விஷயங்களின் பேரில் அறிவொளியூட்டுகிறது. என்றாலும், அதன் நோக்கம் இவ்வாறு கூறுகிறது: “எல்லாவற்றையும்விட முக்கியமாக, பொல்லாப்பும் அக்கிரமமும் நிறைந்த இந்த உலகம் நீக்கப்பட்டு, சமாதானமும் பாதுகாப்புமுள்ள ஒரு புதிய உலகம் வரும் என்ற சிருஷ்டிகரின் வாக்குறுதியில் நம்பிக்கையை வளர்க்கிறது.”
கடவுள் நம்மிடமிருந்து எதைத் தேவைப்படுத்துகிறார்? என்ற 32 பக்க சிற்றேடு, கடவுளுடைய அந்த நோக்கத்தை சிறப்பித்து காட்டி அவருடைய அங்கீகாரத்தைப் பெற நாம் என்ன செய்ய வேண்டும் என்ற தகவலை பைபிளிலிருந்து அளிக்கிறது. கீழ்க்காணும் கூப்பனை பூர்த்திசெய்து அதிலுள்ள விலாசத்திற்கு அல்லது இந்தப் பத்திரிகையில் பக்கம் 5-ல் உள்ள பொருத்தமான விலாசத்திற்கு அனுப்பி இந்தச் சிற்றேட்டை பற்றிய கூடுதலான தகவலை பெற்றுக்கொள்ளலாம். (g02 3/22)
◻ கடவுள் நம்மிடமிருந்து எதைத் தேவைப்படுத்துகிறார்? என்ற சிற்றேட்டை பற்றிய கூடுதலான தகவலை எனக்கு அனுப்பவும்.
◻ இலவசமாக பைபிளை கற்றுக்கொள்ள ஆசைப்படுகிறேன்.