Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

உங்களுக்குத் தெரியுமா?

உங்களுக்குத் தெரியுமா?

உங்களுக்குத் தெரியுமா?

(இந்த வினாடிவினாவுக்கான விடைகளை கொடுக்கப்பட்ட பைபிள் இடக்குறிப்புகளில் காணலாம்; எல்லா விடைகளும் பக்கம் 24-⁠ல் அச்சிடப்பட்டுள்ளன. கூடுதலான தகவல் பெற விரும்பினால், யெகோவாவின் சாட்சிகள் பிரசுரித்த “வேதாகமத்தின்பேரில் உட்பார்வை” [ஆங்கிலம்] என்ற பிரசுரத்தை ஆராய்ந்து பாருங்கள்.)

1. யெகோவாவின் நாளில் பொன், வெள்ளி விக்கிரகங்களை வௌவால்களிடம் எறிந்துவிடுவார்கள் என ஏசாயா ஏன் கூறுகிறார்? (ஏசாயா 2:20, NW)

2. வயலின் ஓரத்திலிருப்பதை முழுமையாக அறுக்காமல் விட்டு விடும்படி இஸ்ரவேலரிடம் ஏன் சொல்லப்பட்டது? (லேவியராகமம் 19:9)

3. ஒருவன் தனது அடிமையின் கண் பாதிக்கப்படும்படி அல்லது பல் உதிரும்படி அடித்தால் மோசேயின் நியாயப்பிரமாணத்தின்படி அவன் என்ன செய்ய வேண்டும்? (யாத்திராகமம் 21:26, 27)

4. கொலை செய்தவன் எப்போது மட்டுமே அடைக்கலப் பட்டணத்தைவிட்டு வெளியே வரலாம்? (எண்ணாகமம் 35:25)

5. கொர்நேலியு கடவுளிடம் ஜெபம் செய்ததிலிருந்து பேதுரு அவரை வந்து சந்திக்கும் வரை எவ்வளவு காலம் எடுத்தது? (அப்போஸ்தலர் 10:30-33)

6. “பிரிவினைகளையும் இடறல்களையும் உண்டாக்குகிறவர்களைக் குறித்து” என்ன நடவடிக்கை எடுக்கும்படி பவுல் கூறினார்? (ரோமர் 16:17)

7. யோபுவின் உத்தமத்தன்மையை தகர்க்கும் முயற்சியில் சாத்தான் அவருடைய ஆரோக்கியத்தை எவ்வாறு கெடுத்தான்? (யோபு 2:7)

8. இஸ்ரவேலர், முதன்முதலாக மன்னாவை சாப்பிட்டபோதும் ஓய்வுநாள் சட்டம் முதன்முதலாக செயல்பட ஆரம்பித்தபோதும் எங்கிருந்தனர்? (யாத்திராகமம் 16:1)

9. மோவாபிய ராஜாவான எக்லோனை ஏகூத் எவ்வாறு கொன்றார்? (நியாயாதிபதிகள் 3:16)

10. யோவான் செய்திகளை அனுப்பிய ஏழு சபைகளும் எந்த ரோம மாகாணத்தில் இருந்தன? (வெளிப்படுத்துதல் 1:4)

11. பெரும்பாலும் இயேசு எந்த விலங்கோடு இணைத்து பேசப்படுகிறார், ஏன்? (யோவான் 1:29)

12. நிலத்திலிருந்து வேறுபடுத்தி, பூமியிலுள்ள தண்ணீர் அனைத்தையும் சேர்த்து குறிப்பிட என்ன பதம் உபயோகிக்கப்படுகிறது? (ஆபகூக் 2:14)

13. பேழையில் தண்ணீர் புகாதிருக்க நோவா எதை உபயோகித்தார்? (ஆதியாகமம் 6:14)

14. கிறிஸ்து அரியணையில் அமர்ந்தவுடன் பரலோகத்தில் என்ன நடந்தது? (வெளிப்படுத்துதல் 12:7)

15. கடைசி பஸ்கா ஆசரிப்புக்கு ஏற்பாடு செய்யும்படி எந்த இரண்டு சீஷர்களை இயேசு அனுப்பினார்? (லூக்கா 22:7-13)

16. இயேசு எந்த விலங்கின் மீதமர்ந்து எருசலேமுக்குள் கெம்பீரமாக நுழைவார் என முன்னுரைக்கப்பட்டது? (சகரியா 9:9)

17. எந்தப் பூச்சியைப் பார்த்துக் கற்றுக்கொள்ளும்படி சோம்பேறிகளுக்கு அறிவுரை சொல்லப்படுகிறது? (நீதிமொழிகள் 6:6)

18. இயேசுவை பாதுகாக்கும் முயற்சியில் பேதுரு பட்டயத்தை உபயோகித்ததால் என்ன நடந்தது? (யோவான் 18:10)

19. சடங்காச்சார ரீதியில் அசுத்தமாகாதிருக்க எந்தப் பூச்சியை வடிகட்டுவதில் பரிசேயர்கள் மிகவும் கவனமாயிருந்தனர்? (மத்தேயு 23:24)

20. யெகோவாவிற்கும் மேலாக தன் குமாரர்களை மதித்தவர் என அறியப்பட்டவர் யார்? (1 சாமுவேல் 2:22, 29) (g02 4/8)

வினாடி வினாவுக்கான விடைகள்

1. மதிப்பும், முக்கியத்துவமும் அல்ல இருட்டும் அசுத்தமும் நிறைந்த இடமே அந்த விக்கிரகங்களுக்கு ஏற்றது

2. எளியவனும் பரதேசியும் பொறுக்கிக்கொள்ள கொஞ்சம் மீதம் இருப்பதற்காக

3. அடிமையை விடுவிக்க வேண்டும்

4. பிரதான ஆசாரியன் மரித்த பிறகு

5. நான்கு நாட்கள்

6. எச்சரிக்கையாயிருந்து அவர்களை விட்டு விலக வேண்டும்

7. யோபுவின் சரீரம் முழுவதிலும் கொடிய பருக்களால் வாதித்தான்

8. சீன் வனாந்தரத்தில்

9. இருபுறமும் கருக்குள்ள கத்தியால்

10. ஆசியா

11. ஆட்டுக்குட்டி. இயேசு, பலிக்குரிய பாகத்தை வகித்ததால்

12. கடல்

13. கீல்

14. சாத்தானை பரலோகத்திலிருந்து வெளியே தள்ளுவதில் விளைவடைந்த யுத்தம்

15. பேதுருவையும் யோவானையும்

16. ஒரு கழுதை

17. எறும்பு

18. பிரதான ஆசாரியனின் வேலைக்காரனான மல்குஸின் வலது காதை வெட்டினார்

19. கொசு

20. பிரதான ஆசாரியன் ஏலி