Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

‘இந்த உலகத்தின் காட்சி கடந்துபோகிறதே’

‘இந்த உலகத்தின் காட்சி கடந்துபோகிறதே’

சொற்பொழிவை கேட்க வாரீர்!

‘இந்த உலகத்தின் காட்சி கடந்துபோகிறதே’

இவை கொந்தளிப்பான காலங்கள். உலகை உலுக்கும் சம்பவங்கள் கண்மூடி திறப்பதற்குள் அடுத்தடுத்து வேகமாக நிகழ்வது போல தெரிகிறது. உங்களை சுற்றிலுமுள்ள நிலைமைகள் மிகவும் வேகமாக மாறுவது போல் உணருகிறீர்களா? நீங்கள் திணறடிக்கப்பட்டவர்களாய், குழப்பமடைந்தவர்களாய் எப்பொழுதாவது உணருகிறீர்களா?

மனித விவகாரங்களைப் பற்றி பைபிள் பகுத்துணர்வுடன் பார்வையிடுவதை பின்வரும் பதிவில் காணலாம்: ‘இந்த உலகத்தின் காட்சி கடந்துபோகிறதே.’ (1 கொரிந்தியர் 7:31, NW) இந்த வார்த்தைகளை வடித்த அப்போஸ்தலன் பவுல், உலக சம்பவங்களை அரங்கத்தின் மேடையில் மாறும் காட்சிகளுக்கு ஒப்பிட்டார். சரித்திரம் முழுவதிலும், உலக தலைவர்களும் புதுப்புது பாணிகளைப் புகுத்துபவர்களும் உலக மேடையில் தோன்றி மறைந்துவிட்டார்கள், புதியவர்கள் பழையவர்களின் இடத்தை மீண்டும் மீண்டும் பிடித்துக் கொள்கின்றனர். ஆனால் நம்முடைய நாளில்​—முக்கியமாக சரித்திரத்தில் திருப்புமுனையாக விளங்கும் ஆண்டாகிய 1914 முதல்​—இது சூடுபிடித்திருப்பது போல தோன்றுகிறது.

ஆனால் உலகில் நிலவும் இத்தகைய இடர்ப்பாடுகளும்​—வெகு சமீபத்தில் நடந்தவையும்​—மனிதகுலத்திற்கு நற்செய்தியாகவும் இருப்பது உங்களுக்குத் தெரியுமா? ஆம், உலக காட்சி வெகு விரைவில் மேம்பட்ட நிலைமைக்கு மாறும் என்பதற்கு இவை அத்தாட்சி அளிக்கின்றன. நம்முடைய காலங்களில் நிலவும் கடும் வேதனைகளைப் பற்றி வெகு காலத்திற்கு முன்னரே பைபிள் முன்னறிவித்தது. இந்தக் கொந்தளிப்புகள் அனைத்தும் மனித சமுதாயத்தை பாதிக்கும் மிகப் பெரிய மாற்றத்திற்கு ஆரம்பமாகவே இருக்கின்றன என்பதையும் அது விளக்குகிறது. வரக்கூடிய இந்த மிகப் பெரிய எழுச்சி, அச்சுறுத்துவதாக தொனித்தாலும், நல்லிருதயம் படைத்தோருக்கு செய்திகளிலேயே மிகச் சிறந்த செய்தி. இவ்வுலகின் காட்சி மனித குடும்பத்தின் சமாதானத்திற்கும் மகிழ்ச்சிக்குமுரிய ஒன்றாக மாறும்.

இந்த மாற்றங்களைப் பற்றியும் அவற்றை பைபிள் எப்படி விளக்குகிறது என்பதைப் பற்றியும் நீங்கள் அதிகம் அறிந்துகொள்ள விரும்புகிறீர்களா? யெகோவாவின் சாட்சிகளால் நடத்தப்படும் மாவட்ட மாநாடுகளில், ‘இந்த உலகத்தின் காட்சி கடந்துபோகிறதே’ என்ற தலைப்பில் ஆற்றப்படும் சொற்பொழிவை கேட்க வரும்படி உங்களை மனதார வரவேற்கிறோம். உலகெங்கிலும் நூற்றுக்கணக்கான இடங்களில் இந்த மாநாடுகள் நடத்தப்படும். உங்களுக்கு மிக அருகில் நடைபெறும் மாநாட்டைப் பற்றி தெரிந்துகொள்வதற்கு, தயவுசெய்து உங்களுடைய பகுதியில் வாழும் யெகோவாவின் சாட்சிகளை அணுகுங்கள் அல்லது இந்தப் பத்திரிகையில் 5-⁠ம் பக்கத்திலுள்ள பொருத்தமான விலாசத்தில் தொடர்புகொள்ளுங்கள். (g02 5/22)

[பக்கம் 32-ன் படம்]

அணுகுண்டு ஹிரோஷிமாவை நாசம் செய்கிறது, 1945

[படத்திற்கான நன்றி]

USAF photo

[பக்கம் 32-ன் படம்]

பெர்லின் சுவர் தகர்க்கப்படுகிறது, 1989

[படத்திற்கான நன்றி]

AP Photo/Lionel Cironneau

[பக்கம் 32-ன் படம்]

நியூ யார்க்கிலுள்ள உலக வர்த்தக மையத்தை பயங்கரவாதிகள் தாக்குகின்றனர், 2001