Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

யுத்த ஆதரவாளரா, சமாதான தூதுவரா?

யுத்த ஆதரவாளரா, சமாதான தூதுவரா?

யுத்த ஆதரவாளரா, சமாதான தூதுவரா?

ஸ்வீடனிலிருந்து விழித்தெழு! எழுத்தாளர்

பல்வேறு துறைகளில் மனிதவர்க்கத்தின் மேம்பாட்டிற்காக பணியாற்றிய தனி நபர்களுக்கு அல்லது அமைப்புகளுக்கு ஒவ்வொரு வருடமும் நோபல் பரிசு வழங்கப்படுகிறது. இந்த வழக்கம் எப்போது ஆரம்பமானது, உலக சமாதானத்தை தேடுவதற்கும் அதற்கும் என்ன சம்பந்தம்?

அவருடைய பெயருக்கும் மனிதகுல மேம்பாட்டிற்கும் சம்பந்தமுள்ளது, ஆனாலும் யுத்தக் கருவிகளை விற்றே அவர் பெரும் பணக்காரரானார். யார் அவர்? அவர்தான் ஸ்வீடனைச் சேர்ந்த தொழிலதிபரும், வேதியியலாளருமான ஆல்ஃபிரெட் பெர்னர்ட் நோபல். மனிதகுல மேம்பாட்டிற்கு உழைத்ததாக பெயரெடுத்த நோபல் “மரண வியாபாரி” என்றும் அழைக்கப்பட்டிருக்கிறார். ஏன்? ஏனெனில், டைனமைட் என்ற வெடி மருந்தை நோபல் கண்டுபிடித்ததோடு, உயிர்களைக் குடிக்கும் வெடி மருந்துகளை தன் வாழ்நாள் முழுவதும் தயாரித்து விற்பனை செய்தே பெரும் செல்வந்தரானார்.

என்றாலும், 1896-⁠ல் நோபல் மரித்த பிறகு திடுக்கிட வைக்கும் ஒரு விஷயம் தெரிய வந்தது. அவருடைய உயிலில், 90 லட்சம் டாலரை ஒதுக்கி வைக்க வேண்டும் என்றும், ஒவ்வொரு வருடமும் அதிலிருந்து கிடைக்கும் வட்டியை, இயற்பியல், வேதியியல், மருத்துவம், இலக்கியம், சமாதானம் ஆகிய துறைகளில் குறிப்பிடத்தக்க சாதனை படைக்கும் தனி நபர்களுக்கு கொடுக்க வேண்டும் என்றும் எழுதப்பட்டிருந்தது.

ஆரம்பத்தில் அநேகருக்கு பெரும் குழப்பமாயிருந்தது. வெடி மருந்து வியாபாரியான ஒருவர், நன்மையான மேலும் சமாதானமான முயற்சிகளை ஆதரித்து பரிசு வழங்க ஏன் விரும்ப வேண்டும்? தன் வாழ்நாள் முழுவதும், பெரும் அழிவை ஏற்படுத்தும் வெடி மருந்துகளை தயாரிப்பதில் ஈடுபட்டதால் நோபலின் மனசாட்சி அவரை குத்தியிருக்க வேண்டும் என்று சிலர் நினைத்தனர். மற்றவர்களோ, ஆரம்பத்திலிருந்தே நோபல் சமாதானத்தை ஏற்படுத்தத்தான் உழைத்தார் என்று நம்பினர். உண்மையில், அதிக நாசத்தை ஏற்படுத்தும் ஆயுதங்களை தயாரித்தால் யுத்தம் நடக்க வாய்ப்புகள் குறையும் என அவர் நம்பியதாக தோன்றுகிறது. ஓர் எழுத்தாளரிடம் அவர் பின்வருமாறு கூறியதாக அறிக்கை செய்யப்பட்டுள்ளது: “உங்களுடைய சட்ட பேரவைகளைவிட என்னுடைய தொழிற்சாலைகளே யுத்தத்திற்கு சீக்கிரத்தில் முடிவுகட்டிவிடும் போலிருக்கிறதே. இரண்டு எதிரி படைகள் ஒரே நொடியில் ஒன்றையொன்று அழித்துவிட முடிந்த நாள் வருகையில் நாகரிகமான எல்லா தேசங்களும் பயத்தில் பின்வாங்கி தங்கள் படைகளை கலைத்துவிடலாம்.”

நோபல் முன்னறிவித்தது உண்மையில் நடந்ததா? நோபலின் மரணத்திற்கு பிறகு வந்த நூற்றாண்டில் என்ன பாடங்களை கற்றிருக்கிறோம்? (g02 5/8)

[பக்கம் 3-ன் சிறு குறிப்பு]

“ஒரே சமயத்தில் ஏராளமானோரை கொல்லும் பயங்கர சக்தி படைத்த ஒரு பொருளை அல்லது இயந்திரத்தைக் கண்டுபிடிக்க விரும்புகிறேன். அப்போதுதான் எக்காலத்திலும் யுத்தம் நடப்பதற்கு சாத்தியமிருக்காது”​—ஆல்ஃபிரெட் பெர்னர்ட் நோபல்

[பக்கம் 3-ன் படங்களுக்கான நன்றி]

பக்கம் 2: Missile: U.S. Navy photo; building rubble: UN PHOTO 158178/J. Isaac; பக்கம் 3: Nobel: © Nobelstiftelsen