Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

ஹான்கோலில் எழுதுவோம் வாருங்கள்!

ஹான்கோலில் எழுதுவோம் வாருங்கள்!

ஹான்கோலில் எழுதுவோம் வாருங்கள்!

கொரிய குடியரசிலிருந்து விழித்தெழு! எழுத்தாளர்

இந்த உலகின் எழுத்து முறைகள் ஒவ்வொன்றிற்கும் பொதுவாக மிகப் பழமையான சரித்திரம் ஒன்றுண்டு. ஆனால், ஓர் எழுத்து முறை ஐந்து நூற்றாண்டுகளுக்கு முன்னர்தான் உருவாக்கப்பட்டது, அதுவும் ஒரே காலைப்பொழுதில் கற்றுக்கொள்வதற்காக திட்டமிடப்பட்டது! அதுவே கொரிய எழுத்து தொகுதியான ஹான்கோல் ஆகும். அது வளர்ந்து உபயோகத்திற்கு வந்த கதை மிகவும் சுவாரஸ்யமானது.

ஹான்கோல் உருவாக்கப்படுவதற்கு முன்பு கொரிய மொழிக்கென்று தனிப்பட்ட எழுத்து வடிவம் கிடையாது. ஆயிரத்திற்கும் அதிக ஆண்டுகளாக, கல்வி கற்ற கொரியர்கள் சீன எழுத்து வடிவங்களை உபயோகித்து தங்கள் மொழியை எழுதினர். என்றாலும், மேம்பட்ட ஓர் எழுத்து முறையை உருவாக்க பல ஆண்டுகளாக பல்வேறு முயற்சிகள் செய்யப்பட்டன. ஆனால் அவை அனைத்தும் சீன எழுத்து வடிவத்தை சார்ந்திருந்ததால் நன்கு கல்வி கற்றவர்களால் மட்டுமே அவற்றை உபயோகிக்க முடிந்தது.

ஓர் அரசன் கட்டளையிட்ட எழுத்து தொகுதி

பொ.ச. 15-⁠ம் நூற்றாண்டில், கொரியாவின் யீ அரச வம்சத்தைச் சேர்ந்த அரசர் சீஜாங், எழுதவும் படிக்கவும் தெரியாத தனது குடிமக்களின் கஷ்டங்களைப் பற்றி சிந்திக்க ஆரம்பித்தார். பெரும்பாலானோரால் வாய் மூலமாக தவிர தங்கள் குறைகளை அதிகாரிகளிடம் முறையிடவே முடியாமலிருந்தது. பொதுமக்களின் குறைகளை கேட்பதில் எப்போதுமே ஆர்வம் காட்டியதாக கருதப்பட்ட அரசர் சீஜாங், இந்தப் பிரச்சினையால் பெரும் வருத்தத்தில் ஆழ்ந்தார்.

ஆகவே, கொரியாவின் பேச்சு மொழிக்கு பொருத்தமாக இருக்கும் அதேசமயம் கற்கவும் உபயோகிக்கவும் எளிமையாக இருக்கும் ஓர் எழுத்து தொகுதியை உருவாக்குவதை அரசர் சீஜாங் முன்னின்று வழிநடத்தினார். இத்திட்டம் முடிவடைந்ததாக 1446-⁠ல் அறிவிக்கப்பட்டது. தனது அறிவிப்பின் முன்னுரையில் அரசர் சீஜாங் இவ்வாறு கூறினார்: “சீன எழுத்துக்கள் அயல்நாட்டைச் சேர்ந்தவை என்பதால் கொரிய மொழியின் நுணுக்கமான அர்த்தங்களை அவற்றால் துல்லியமாக தெரிவிக்க முடியவில்லை. ஆகவே, பொதுமக்களில் அநேகர் தங்கள் எண்ணங்களையும் உணர்ச்சிகளையும் வெளிப்படுத்த முடியாமல் திண்டாடுகின்றனர். அவர்களுடைய கஷ்டங்களைக் கண்டு இரக்கப்பட்ட நான் 28 எழுத்துக்கள் கொண்ட ஓர் எழுத்து தொகுதியை உருவாக்கியிருக்கிறேன். இந்த எழுத்துக்களை கற்றுக்கொள்வது மிக எளிது. இவை அனைவருடைய வாழ்க்கை தரத்தையும் மேம்படுத்தும் என உள்ளப்பூர்வமாக நம்புகிறேன்.”

வருத்தகரமாக, ஹான்கோலை கற்றுக்கொள்வது மிக எளிதாயிருந்த ஒரே காரணத்தால் சில வல்லுனர்கள் அதை எதிர்த்தனர்! அவர்கள் அதை, “பெண்களின் எழுத்துக்கள்” என அர்த்தப்படும் ஆன்கோல் என்று ஏளனமாக அழைத்தனர். அக்காலத்தில், பள்ளியில் வாசிக்க பெண்களுக்கு கற்றுக்கொடுக்கப்படவில்லை என்பதால் பெண்களாலும் கற்க முடிந்த ஒரு முறையை அவர்கள் வெறுத்தனர். ஹான்கோலுக்கு எதிரான இந்தத் தப்பெண்ணம், மேல் தட்டு கொரியர்கள் மத்தியில் சில காலம் நீடித்தது. உண்மையில், 400-⁠க்கும் அதிக வருடங்களுக்கு பிறகே அதிகாரப்பூர்வ ஆவணங்களில் ஹான்கோலை உபயோகிக்கலாம் என கொரிய அரசாங்கம் அறிவித்தது.

ஹான்கோலும் பைபிளும்

ஹான்கோலின் சரித்திரத்தில் பைபிள் முக்கிய பங்கு வகித்தது. சீன எழுத்துக்களை உபயோகித்து தயாரிக்கப்பட்ட அநேக கொரிய மத பிரசுரங்கள் கொரியாவிற்குள் கொண்டு வரப்பட்டன; ஆனால் சீன பைபிள்கள் கிடைத்தபோதிலும் மிஷனரிகள் அவற்றைக் கொண்டு வரவில்லை. என்றாலும், 1887-⁠ல் கிறிஸ்தவ கிரேக்க வேதாகமம் (புதிய ஏற்பாடு) கொரிய மொழியில் மொழிபெயர்க்கப்பட்டு சீனாவிலுள்ள முக்டன் என்ற இடத்தில் ஹான்கோலில் வெளியிடப்பட்டது. a

இப்போது கொரிய மொழியிலேயே ஒரு பைபிள் கிடைத்தது; சீன எழுத்து வடிவங்களை கற்க வாய்ப்பே இல்லாதிருந்த பெண்கள், பிள்ளைகள் என அநேகமாக எல்லாராலுமே அதை வாசிக்க முடிந்தது. இன்று, பரிசுத்த வேதாகமத்தின் புதிய உலக மொழிபெயர்ப்பு உட்பட நவீன ஹான்கோலில் குறைந்தது எட்டு பைபிள் மொழிபெயர்ப்புகள் உள்ளன.

கற்பது எளிது

“புத்திசாலிகள் அதை ஒரே காலைப்பொழுதில் கற்றுவிடலாம், மந்த புத்தியுள்ளவர்கள்கூட அதை பத்து நாட்களில் கற்றுவிடலாம்” என கொரிய எழுத்து தொகுதியை உருவாக்க உதவிய ஒரு வல்லுனர் ஹான்கோலைப் பற்றி கூறினார். உண்மையில், ஆரம்பத்தில் ஹான்கோலை எதிர்த்தவர்கள் அதை ஆகிம்கோயல், அதாவது “காலை எழுத்துக்கள்” என்றே இளக்காரமாக அழைத்தனர். ஹான்கோலை ஒரே காலைப்பொழுதில் கற்றுவிடலாம் என்பதால் அது மிகவும் எளிமையானது என அவர்கள் நினைத்தனர்!

எப்படியிருந்தாலும், ஹான்கோலை கற்பது மிக சுலபம் என்பதால் எழுத்தறிவின்மை கொரியாவிலிருந்து மறைந்துபோனது என்றே சொல்லலாம். உண்மையில், பள்ளியில் சேரும் சமயத்திற்குள்ளாக பெரும்பாலான பிள்ளைகள் அதில் தேர்ச்சி பெற்றுவிடுகின்றனர். அதுமட்டுமா, கொரிய பள்ளிகளில் எழுத்துக்கூட்டல் போட்டிகளே கிடையாது! ஏன்? ஏனெனில் ஹான்கோல், கொரிய பேச்சின் ஒலிகளை அப்படியே பிரதிபலிப்பதால் அவற்றை கேட்டவுடன் எந்தத் தவறும் இல்லாமல் எழுதுவது மிக எளிது.

ஹான்கோலை உபயோகித்து கொரிய மொழி அல்லாத மற்ற மொழி வார்த்தைகளைக்கூட எழுதலாம். முயன்று பார்க்க ஆசையா? பின்வரும் விளக்க அட்டவணைகள் எல்லா விவரங்களையும் அளிக்கவில்லை என்றாலும் உங்கள் பெயரையாவது ஹான்கோலில் எழுத அவை உங்களுக்கு உதவும். அதன் மூலம், ஒரே காலைப்பொழுதில் கற்க முடிந்த எழுத்து தொகுதி எவ்வளவு திறமைவாய்ந்தது என்பதை நீங்களே அனுபவித்து மகிழலாம்! (g02 5/8)

[அடிக்குறிப்பு]

a கொரிய மொழியில் முழு பைபிள் 1911-⁠ல் முதன்முதலாக வெளியிடப்பட்டது.

[பக்கம் 11-ன் பெட்டி]

ஹான்கோலின் உயிர், மெய் எழுத்துக்கள்

மெய்:

(க்)

(ன்)

(ட்)

(ர், ல்)

(ம்)

(ப்)

(ஸ்)

ㅜ *

(ச், ஜ்)

(ச்ச)

(க்க)

(ட்ட)

(ப்ப)

(ஹெச்)

உயிர்:

(ஆ)

(யா)

(ஆ)

(ய்யா)

(ஓ)

(யோ)

(யூ)

(ய்யூ)

(யு)

(“மஷீன்” என்பதில் ‘இ’ போல)

கூட்டு உயிரெழுத்திற்கு ஓர் உதாரணம்

(ஆ) + ㅣ (இ)= ㅔ (ஈ)

*ㅇ என்ற மெய்யெழுத்து ஒலியில்லாதது; முடிவில் வருகையில் மட்டுமே “ங்” என உச்சரிக்கப்படும்.

உதடுகளை சுருக்கி வைத்துக்கொண்டு ஆ, ய்யா, யு என்ற உயிரெழுத்துக்களை உச்சரிக்க வேண்டும்; ஓ, யோ, யூ ஆகியவை வாயை திறக்காத புன்முறுவலோடு சொல்லப்படும். ச்ச, க்க, ட்ட, ப்ப என்ற மெய்யெழுத்துக்கள் ஹெச் ஒலியோடு சேர்ந்து வரும்.

[பக்கம் 11-ன் பெட்டி]

கொரிய வார்த்தைகளை எழுதுதல்

கொரிய அசைகள் அனைத்திலும் இரண்டு அல்லது மூன்று பகுதிகள் உள்ளன: ஆரம்ப ஒலி, மத்திப ஒலி (ஒன்று அல்லது பல உயிரெழுத்துக்கள்), மேலும் முடிவான ஒலி. வார்த்தைகளில் ஒன்று அல்லது அதிகமான அசைகள் இருக்கும். கீழே காண்பித்துள்ளபடி ஒவ்வொரு அசையும் ஒரு கற்பனையான பெட்டிக்குள் எழுதப்படும். ஆரம்ப ஒலி (மெய்யெழுத்து அல்லது ஒலியற்ற “ㅇ”) மேலே அல்லது மேல் இடது பக்கம் எழுதப்படும். மத்திப உயிரெழுத்து செங்குத்தானது என்றால் ஆரம்ப ஒலியின் வலது பக்கம் எழுதப்படும், கிடைமட்டமானது என்றால் அதற்கு கீழே எழுதப்படும். அழுத்தம் சேர்ப்பதற்காக எழுத்துக்கள் இரட்டிப்பாக்கப்படலாம், கூட்டு உயிரெழுத்துக்கள் இணைக்கப்பட்டு ஒன்றின் அருகில் ஒன்றாக எழுதப்படலாம். அசையின் முடிவில் மெய்யெழுத்து வந்தால் அது எப்போதும் கீழேதான் எழுதப்படும். இந்த விதத்தில் ஆயிரக்கணக்கான அசைகளை ஹான்கோலில் குறிப்பிடலாம்.

உதாரணங்கள்:

ㅅ (ஸ்) + ㅗ (ஓ) = 사랑 (ஸோ) பசு

ㅅ (ஸ்) + ㅏ (ஆ) + ㅇ (ங்) = 사랑 (ஸாங்) பரிசு

ㄱ (க்) + ㅗ (ஓ) + ㅁ (ம்) = 사랑 (கோம்) கரடி

ㅁ (ம்) + ㅗ (ஓ) + ㄱ (க்) = 사랑 (மோக்) கழுத்து

ㅅ (ஸ்) + ㅏ (ஆ),

ㄹ (ர்) + ㅏ (ஆ) + ㅇ (ங்) = 사랑 (ஸா-ராங்) அன்பு

[பக்கம் 12-ன் பெட்டி/படம்]

(முழு வடிவத்திலுள்ள படத்திற்கு புத்தகத்தைப் பார்க்கவும்)

கொரிய எழுத்து தொகுதி

அரசர் சீஜாங் காலத்தில் ஹான்கோல் எழுத்து தொகுதியில் 28 எழுத்துக்கள் இருந்தன, அவற்றுள் 24 இப்போது உபயோகத்தில் உள்ளன. இவற்றில் 14 மெய்யெழுத்துக்களும், 10 உயிர் எழுத்துக்களுமாகும். அடிப்படையான ஐந்து மெய்யெழுத்துக்களும் அவற்றை ஒலிக்க உபயோகிக்கும் வாய் மற்றும் தொண்டையின் பகுதிகளை குறிக்கின்றன: ㄱ (க்), வளைந்த நாக்கு அண்ணத்தின் பிற்பகுதியைத் தொடும்; ㄴ (ன்), நுனி நாக்கு சுருண்டு அண்ணத்தின் முற்பகுதியைத் தொடும்; ㅁ (ம்), வாய், முன்னாலிருந்து பார்க்கையில்; ㅅ (ஸ்), பற்கள்; ㅇ (ங்), திறந்த தொண்டை. வாயை ஏறக்குறைய அதே நிலையில் வைத்து உச்சரிக்கும் இதோடு சம்பந்தப்பட்ட மற்ற மெய்யெழுத்துக்களை குறிக்க இந்த அடிப்படை மெய்யெழுத்துக்களோடு கோடுகள் சேர்க்கப்படும்.

உயிரெழுத்துக்கள் வட்ட வடிவ வானத்தை ஒரு புள்ளியாக (•), b தட்டையான நிலத்தை கிடைமட்டமான கோடாக (ㅡ), நிற்கும் மனிதனை செங்குத்தான கோடாக (ㅣ) அடையாளப்படுத்துகின்றன. இவை, நாக்கை முன்னால், நடுவில், பின்னால் வைத்து உண்டாக்கும் உயிரெழுத்து ஒலிகளை குறிக்கின்றன.

b நவீன ஹான்கோலில் இந்த எழுத்து உபயோகிக்கப்படுவதில்லை.

[படம்]

[பக்கம் 11-ன் படம்]

அரசர் சீஜாங்