Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

“அவரது அன்பு என் நெஞ்சை தொட்டது”

“அவரது அன்பு என் நெஞ்சை தொட்டது”

“அவரது அன்பு என் நெஞ்சை தொட்டது”

யுகோஸ்லாவியாவிலுள்ள யெகோவாவின் சாட்சிகளுடைய கிளை அலுவலகத்திற்கு முகவரியிடப்பட்ட ஒரு கடிதத்தில், நிஸ் என்ற நகரத்தைச் சேர்ந்த ஒருவர் இவ்வாறு எழுதினார்:

“முதலில் எனது நன்றியை உங்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறேன். தினமும் பைபிளிலிருந்து பல அதிகாரங்களை நான் வாசிக்கிறேன், அது எனக்கு அதிக இன்பத்தைத் தருகிறது. கடவுள் நம்மிடமிருந்து எதைத் தேவைப்படுத்துகிறார்? என்ற சிற்றேட்டையும் நான் இப்பொழுது வாசிக்கிறேன். பைபிளை புரிந்துகொள்வதற்கு பெரிதும் துணைபுரியும் இந்த மிகச் சிறந்த கருவிக்கு எனது நன்றி. இந்தச் சிற்றேட்டிலுள்ள அனைத்தும் மிக எளிமையாகவும் புரிந்துகொள்ளத்தக்க முறையிலும் விளக்கப்பட்டுள்ளன.

“முக்கியமாக, இயேசு கிறிஸ்துவைப் பற்றி சொல்லும் பாடம் என்னை மிகவும் கவர்ந்தது. முன்பின் தெரியாத மக்களுக்காக தம்முடைய பரிபூரண உயிரையே தந்த அவரது அன்பு என் நெஞ்சை தொட்டது. எல்லாரும் அவருடைய தியாகத்தைப் பற்றி முழுமையாக அறிந்துகொள்ள வேண்டும், அதற்கு நன்றியுள்ளவர்களாகவும் இருக்க வேண்டும்.”

கடவுள் நம்மிடமிருந்து எதைத் தேவைப்படுத்துகிறார்? என்ற 32-பக்க சிற்றேட்டிலிருந்து நீங்களும் பயனடைவீர்கள் என நம்புகிறோம். மனதைக் கவரும் அதிலுள்ள பாடங்களில் சில: “இயேசு கிறிஸ்து யார்?,” “கடவுள் யார்?,” “பூமிக்கான கடவுளுடைய நோக்கம் என்ன?,” “கடவுளுடைய ராஜ்யம் என்றால் என்ன?” இதைப் பற்றிய கூடுதலான விவரத்திற்கு, இதிலுள்ள கூப்பனை பூர்த்தி செய்து அதில் கொடுக்கப்பட்டுள்ள விலாசத்திற்கு அல்லது இந்தப் பத்திரிகையில் 5-⁠ம் பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள பொருத்தமான விலாசத்திற்கு அனுப்புங்கள். (g02 6/22)

கடவுள் நம்மிடமிருந்து எதைத் தேவைப்படுத்துகிறார்? என்ற சிற்றேட்டை பற்றி கூடுதலான தகவலை எனக்கு அனுப்பவும்.

◻ இலவசமாக பைபிளை கற்றுக்கொள்ள ஆசைப்படுகிறேன்.