Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

ஆசியாவில் உயர்ந்து வரும் வானளாவிய கட்டடங்கள்

ஆசியாவில் உயர்ந்து வரும் வானளாவிய கட்டடங்கள்

ஆசியாவில் உயர்ந்து வரும் வானளாவிய கட்டடங்கள்

“ஒரு காலத்தில் கம்பீரமாய் நின்ற 419 மீட்டர் உயர உலக வர்த்தக மைய கட்டடத்தைவிட உயரமான ஆறு கட்டடங்களை கட்டுவதற்கு தற்போது திட்டங்கள் போடப்பட்டு வருகின்றன. அவை அனைத்தும் ஆசியாவில்தான் கட்டப்படவுள்ளன” என்று த உவால் ஸ்ட்ரீட் ஜர்னல் செய்தித்தாள் குறிப்பிடுகிறது. “அங்கு மிகவும் உயரமான கட்டடங்களின் மீதான காதல் 20 வருடமாக தொடருகிறது” என்று ஜர்னல் மேலும் குறிப்பிடுகிறது.

இவ்வாறு கட்டப்படவுள்ள மிக உயரமான கட்டடங்கள், கொரியா, சீனா, தைவான் ஆகிய நாடுகளில் வானளாவ உயர்ந்து நிற்கும் கட்டடங்களுக்கு மகுடம் வைத்தாற்போல் விளங்கும். “வானைத் தொடும் ஆவல் மனித மனதில் ஆழமாக பதிந்துள்ளது” என சேஸார் பெலீ கூறுகிறார்; இவர், தற்போது உலகிலேயே மிக உயரமான கட்டடங்களான மலேசியாவிலுள்ள கோலாலம்பூரில் வீற்றிருக்கும் இரட்டை பட்ரோனஸ் கோபுரங்களைக் கட்டிய கலைஞர் ஆவார். “பாபேல் கோபுரத்தின் காலம் முதலே விண்ணைத் தொடும் சின்னத்தைக் கட்டும் இந்த ஆவல் மனிதரின் மனதில் குடிகொண்டுள்ளது” என்கிறார்.

எஞ்சினியர்கள் இன்னும் பலத்த பாதுகாப்பு நடவடிக்கைகளை கூட்டுகின்றனர். இவற்றில், ஒவ்வொரு 10 முதல் 12 மாடிகளிலும் திறந்த வெளி “அடைக்கல மாடிகள்” கட்டப்படும்; செங்குத்தான மையப் பகுதி உறுதியாக்கப்படும்; வெளிப்புற முக்கிய தூண்களையும் கட்டடத்தின் மையப்பகுதியையும் இணைக்குமாறோ, கட்டடத்தைச் சுற்றியோ உத்தரங்கள் போடப்படும்; தீப்பிடித்துவிட்டால் தப்புவதற்கு வசதியாக இன்னும் அநேக படிக்கட்டுகள் அமைக்கப்படும், கீழே போகப்போக அதிகம் பேர் இறங்குவதற்கு வசதியாக அவை அகலமாக இருக்கும்.

தற்போது, உலகிலுள்ள கிட்டத்தட்ட இரண்டு டஜன் குடியிருப்பு கட்டடங்கள் 300 மீட்டருக்கும் உயரமானவை; அவற்றில் பாதிக்கும் அதிகமானவை ஆசியாவில் உள்ளன. “இருந்தாலும், நடைமுறையில் 60 மாடிக்கு மேல் கட்டப்பட வேண்டிய அவசியமில்லை என நிபுணர்கள் ஒத்துக்கொள்கின்றனர்” என்பதாக ஜர்னல் செய்தித்தாள் கூறுகிறது. (g02 6/22)

[பக்கம் 18-ன் படம்]

452 மீட்டர் உயர பட்ரோனஸ் டவர்ஸ் உலகிலேயே மிக உயரமானவை

[பக்கம் 18-ன் அட்டவணை/படம்]

(முழு வடிவத்திலுள்ள படத்திற்கு புத்தகத்தைப் பார்க்கவும்)

அழகிற்காக கட்டப்பட்ட கூம்புகளும் கட்டடத்தின் உயரத்தில் கணக்கிடப்பட்டுள்ளன, ஆனால் ஆன்டெனாக்களின் உயரம் சேர்க்கப்படவில்லை.

143 மீட்டர் பொ.ச.மு. 2500 காஃப்ரே பிரமிட், கிஜா, எகிப்து

300 மீட்டர் 1889 ஈஃபில் டவர், பாரிஸ், பிரான்ஸ்

348 மீட்டர் 1997 டி & சி டவர், கவோசியுங், தைவான்

369 மீட்டர் 1989 பாங்க் ஆஃப் சைனா, ஹாங்காங், சீனா

381 மீட்டர் 1931 எம்பையர் ஸ்டேட் பில்டிங், நியூ யார்க், ஐக்கிய மாகாணங்கள்

442 மீட்டர் 1974 சீயர்ஸ் டவர், சிகாகோ, ஐக்கிய மாகாணங்கள்

452 மீட்டர் 1997 பட்ரோனஸ் டவர்ஸ், கோலாலம்பூர், மலேசியா

460 மீட்டர் (2007-⁠ல் கட்ட திட்டமிடப்பட்டுள்ளது) ஷாங்காய் உலக பொருளாதார மையம், ஷாங்காய், சீனா

508 மீட்டர் (2003-⁠ல் கட்டி முடிக்கப்படவுள்ளது) தைபீ பொருளாதார மையம், தைபீ, தைவான்

[படத்திற்கான நன்றி]

படங்கள் அனைத்தும்: Courtesy SkyscraperPage.com