Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

“தக்க சமயத்தில் கிடைத்தது”

“தக்க சமயத்தில் கிடைத்தது”

“தக்க சமயத்தில் கிடைத்தது”

ஆபாகாலீகீ நகரத்தைச் சேர்ந்த ஒருவர் நைஜீரியாவில் உள்ள யெகோவாவின் சாட்சிகளுடைய கிளை அலுவலகத்திற்கு இப்படித்தான் கடிதம் எழுதியிருந்தார். சமீபத்தில் தனக்கு கிடைத்த நீங்கள் நேசிக்கிற ஒருவர் மரிக்கையில் என்ற சிற்றேட்டைப் பற்றி அக்கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார். அவர் இவ்வாறு சொன்னார்:

“ஜூன் 18, 2000-⁠ல், பிரசவத்திற்குப் பின் என்னுடைய அருமை மனைவி டோச்சி இறந்துவிட்டாள். ஒரு மாதத்திற்குப் பிறகும் இந்த அதிர்ச்சியிலிருந்து மீள முடியாமல் தவித்தேன். நான் பிரமைபிடித்தவன் போல இருந்தேன்; எனக்கு வாழ்க்கையே சூனியமானது போல இருந்தது. என்னால் அதை நம்பவே முடியவில்லை. என்னுடைய வாழ்க்கையில் எனக்கு ஏற்பட்ட சம்பவங்களிலேயே மிகவும் சோகமான சம்பவம் அது. பிற்பாடு ஜூலையில் யெகோவாவின் சாட்சிகளில் ஒருவர் நீங்கள் நேசிக்கிற ஒருவர் மரிக்கையில் என்ற பிரசுரத்தை எனக்கு கொடுத்தார். அந்தச் சிற்றேடு எனக்கு அருமருந்தாக இருந்தது, அதிலுள்ள அறிவுரைகளைப் பயன்படுத்தி, சின்னாபின்னமாகிப் போயிருந்த என் வாழ்க்கையை சீராக்கி, இப்பொழுது படிப்படியாக புதுவாழ்வு பெற்று வருகிறேன். அது உண்மையிலேயே எனக்குள் நம்பிக்கையை துளிர்க்க செய்திருக்கிறது, இருண்ட சுரங்கப்பாதையின் முடிவில் வெளிச்சம் இருப்பதை எனக்கு உணர்த்தியது.”

நீங்களோ அல்லது உங்களுக்கு தெரிந்தவரோ இந்த 32-பக்க சிற்றேட்டை வாசித்து ஆறுதல் அடையலாம். கீழ்க்காணும் கூப்பனை பூர்த்திசெய்து அதிலுள்ள விலாசத்திற்கு அல்லது இந்தப் பத்திரிகையில் பக்கம் 5-⁠ல் உள்ள பொருத்தமான விலாசத்திற்கு அனுப்பி இந்தச் சிற்றேட்டை பற்றிய கூடுதலான தகவலை நீங்கள் பெற்றுக்கொள்ளலாம். (g02 7/8)

நீங்கள் நேசிக்கிற ஒருவர் மரிக்கையில் என்ற சிற்றேட்டை பற்றிய கூடுதலான தகவலை எனக்கு அனுப்பவும்.

◻ இலவசமாக பைபிளை கற்றுக்கொள்ள ஆசைப்படுகிறேன்.