Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

‘அதனால் தான் உயிர் பிழைத்தேன்!’

‘அதனால் தான் உயிர் பிழைத்தேன்!’

‘அதனால் தான் உயிர் பிழைத்தேன்!’

“அந்த அறிகுறிகளை நான் சீரியஸாகவே எடுத்துக்கொள்ளவில்லை” என விளக்கினார் கிளாஸ்; சில வாரங்களாக இவருக்கு மூச்சிரைப்பு இருந்தது. ஆனால் அவரை வேறு விதமாகவும் யோசிக்க வைத்த ஒன்று நிகழ்ந்தது.

“பழைய காவற்கோபுரம், விழித்தெழு! பத்திரிகைகளை என்னுடைய படுக்கைக்குப் பக்கத்திலுள்ள மேஜையில் வைத்திருக்கிறேன். ஒருநாள் சாயங்காலம் மார்ச் 22, 2001 விழித்தெழு! (ஆங்கிலம்) பத்திரிகையை எதேச்சையாக கையில் எடுத்து, ‘இரத்த சுழற்சி மண்டலத்தின் அதிசயம்’ என்ற கட்டுரையை அங்குமிங்குமாக புரட்டிக் கொண்டிருந்தேன். அந்தக் கட்டுரையை வாசித்தபோது, எனக்கு இருக்கும் அறிகுறிகளும் இருதய ரத்தக்குழாய் அடைப்புக்கு விவரிக்கப்பட்டிருந்த அறிகுறிகளும் ஒரே மாதிரி இருந்ததை உடனடியாக உணர்ந்துகொண்டேன்” என கிளாஸ் கூறினார்.

முடிந்தவரை சீக்கிரத்திலேயே, உள்ளூர் கிளினிக்கில் கிளாஸ் பரிசோதனை செய்து பார்த்தார், இதய தமனிகள் பழுதடைந்திருப்பதை பரிசோதனைகள் வெளிப்படுத்தின. தாமதிக்காமல் உடனே சிகிச்சை ஆரம்பிக்கப்பட்டது. கிளாஸ் ரொம்ப கொடுத்து வைத்தவர் என்றும், அவருக்கு இருந்த நிலைமைக்கு சிகிச்சை செய்யாமல் அப்படியே விட்டிருந்தால் மாரடைப்பு வந்து கிட்டத்தட்ட உயிரையே இழந்திருப்பார் என்றும் அந்த மருத்துவர் அவரிடம் கூறினார். “விழித்தெழு!-வினால் தான் உயிர் பிழைத்தேன்!” என இந்தப் பத்திரிகையை பிரசுரிப்போருக்கு கிளாஸ் எழுதினார்.

மனித உடல் செயல்படும் விதம் போன்ற படைப்பின் அதிசயங்களைப் பற்றி சொல்வதோடு மட்டுமின்றி அநேக விஷயங்களைப் பற்றி விழித்தெழு! சொல்கிறது. இந்தப் பத்திரிகையின் 4-⁠ம் பக்கத்தில் விழித்தெழு! பிரசுரிக்கப்படுவதன் நோக்கம் கொடுக்கப்பட்டுள்ளது: “எல்லாவற்றையும்விட முக்கியமாக, . . . சமாதானமும் பாதுகாப்புமுள்ள ஒரு புதிய உலகம் வரும் என்ற சிருஷ்டிகரின் வாக்குறுதியில் நம்பிக்கையை வளர்க்கிறது.”

இந்த நோக்கத்திற்கு இசைவாக, வாழ்க்கையின் நோக்கமென்ன? அதை நீங்கள் எப்படிக் கண்டுபிடிக்கலாம்? என்று தலைப்பிடப்பட்ட சிற்றேடு தயாரிக்கப்பட்டுள்ளது. இந்தச் சிற்றேட்டை பற்றி கூடுதலான தகவலை பெற்றுக்கொள்ள விரும்பினால், கீழ்க்காணும் கூப்பனை பூர்த்திசெய்து அதிலுள்ள விலாசத்திற்கு அல்லது இப்பத்திரிகையில் பக்கம் 5-⁠ல் உள்ள பொருத்தமான விலாசத்திற்கு அனுப்புங்கள். (g02 10/22)

◻ வாழ்க்கையின் நோக்கமென்ன? அதை நீங்கள் எப்படிக் கண்டுபிடிக்கலாம்? என்ற சிற்றேட்டை பற்றி கூடுதலான தகவலை எனக்கு அனுப்பவும்.

இலவசமாக பைபிளை கற்றுக்கொள்ள ஆசைப்படுகிறேன்.