உங்களுக்குத் தெரியுமா?
உங்களுக்குத் தெரியுமா?
(இந்த வினாடிவினாவுக்கான விடைகளை கொடுக்கப்பட்ட பைபிள் இடக்குறிப்புகளில் காணலாம்; எல்லா விடைகளும் பக்கம் 22-ல் அச்சிடப்பட்டுள்ளன. கூடுதலான தகவலைப் பெற, யெகோவாவின் சாட்சிகள் பிரசுரித்த “வேதாகமத்தின்பேரில் உட்பார்வை” [ஆங்கிலம்] என்ற பிரசுரத்தை ஆராய்ந்து பாருங்கள்.)
1. ராஜா நேபுகாத்நேச்சார் கண்ட சொப்பனத்தில் வெட்டப்பட்ட மாபெரும் மரத்திற்கு என்ன கொடுக்கப்படும் என்று தூதன் கூறினான், அதன் அர்த்தம் என்ன? (தானியேல் 4:16)
2. அஸ்கலோனில் பின்னர் 30 பெலிஸ்தர்களை கொல்லுவதற்கு காரணத்தைக் கொடுத்த எதை சிம்சோன் தனது திருமண விருந்தில் பெலிஸ்தர்களிடம் சொன்னார்? (நியாயாதிபதிகள் 14:12-19)
3. மாறாத ஒரு சட்டத்தின் காரணமாக பாபிலோனின் எந்த ராஜா தானியேலை சிங்க கெபியிலே போட கட்டாயப்படுத்தப்பட்டார்? (தானியேல் 6:9)
4. ராஜஸ்திரீயாகிய வஸ்தியின் செளந்தரியத்தை அனைவருக்கும் காண்பிக்கும்படி அவளை அழைத்து வர அகாஸ்வேரு ராஜா எத்தனை பிரதானிகளை அனுப்பினார்? (எஸ்தர் 1:11)
5. “மாசில்லாத சுத்தமான” வணக்கத்தில் என்ன இரண்டு காரியங்களை கடவுள் விரும்புவதாக யாக்கோபு கூறுகிறார்? (யாக்கோபு 1:27)
6. ஒரு யூத அடிமை தன் எஜமானிடமிருந்து விடுதலை பெற விரும்பவில்லை என்றால் அந்த எஜமான் என்ன செய்ய வேண்டும்? (யாத்திராகமம் 21:6)
7. ரூபன் வம்சத்தைச் சேர்ந்த எலியாபின் எந்த இரண்டு குமாரர், மோசேக்கும் ஆரோனுக்கும் எதிராக செய்த கலகத்தில் கோராகை ஆதரித்தனர்? (எண்ணாகமம் 16:1-3)
8. சரீரத்தில் என்ன செய்யக்கூடாது என்று இஸ்ரவேலர்களுக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது? (லேவியராகமம் 19:28)
9. எசேக்கியா ராஜாவின் தாய் யார்? (2 இராஜாக்கள் 18:2; 2 நாளாகமம் 29:1)
10. சாலொமோன் கூறுகிறபடி “வானத்தின் கீழிருக்கிற ஒவ்வொரு காரியத்துக்கும்” என்ன உண்டு? (பிரசங்கி 3:1)
11. சுருளில் எழுதப்பட்டிருந்த சில கண்டன செய்திகளை கேட்ட யோயாக்கீம் ராஜா அதை சுட்டெரித்ததால் எரேமியா என்ன செய்யும்படி யெகோவா கட்டளையிட்டார்? (எரேமியா 36:27-32)
12. ஆசாரியனாகவும், திறமை வாய்ந்த வேதபாரகனாகவும் இருந்ததாக அறியப்பட்டது யார்? (நெகேமியா 8:9)
13. பஞ்சத்தின்போது உணவு வாங்கிவர மறுபடியும் எகிப்திற்கு போகும்படி யாக்கோபு கூறியபோது அவருடைய குமாரர் ஏன் மறுத்தனர்? (ஆதியாகமம் 43:1-5)
14. எந்த விதத்தில் ஆதாம் “தேவசாயலாக” சிருஷ்டிக்கப்பட்டான்? (ஆதியாகமம் 5:1)
15. “நியாயப்பிரமாணத்தில் கற்பித்திருக்கிற விசேஷித்தவைக”ளை அசட்டை செய்த பரிசேயர்களின் நுணுக்கமான தசமபாகத்தைப் பற்றி பேசுகையில் அதிக நறுமணம் மிகுந்த எந்த மூலிகையை இயேசு குறிப்பிட்டார்? (மத்தேயு 23:23)
16. ரேகாபியருடைய கீழ்ப்படிதலை எரேமியா எவ்வாறு பரிசோதித்தார்? (எரேமியா 35:3-7)
17. யோசேப்பு காட்டு மிருகத்தால் கொல்லப்பட்டான் என்று நினைக்க வைப்பதற்காக அவனுடைய பத்து சகோதரர்களும் யாக்கோபை எவ்வாறு ஏமாற்றினார்கள்? (ஆதியாகமம் 37:31-33)
18. சிலர் அவனைவிட உருவத்தில் பெரியவர்களாக இருந்திருக்கலாம்; ஆனாலும் பைபிளில் சொல்லப்பட்ட மிகவும் பிரசித்தி பெற்ற அந்த ராட்சதன் யார்? (1 சாமுவேல் 17:4)
19. மோசே, எந்த மலையின் மேலிருந்து வாக்குப்பண்ணப்பட்ட தேசத்தைப் பார்த்த பிறகு அங்கேயே இறந்தார்? (உபாகமம் 32:49, 50)
20. ஆசரிப்பு கூடாரமும், பின்னர் கட்டப்பட்ட ஆலயங்களும் எந்தத் திசையை நோக்கியிருந்தன? (எண்ணாகமம் 3:38) (g02 10/8)
வினாடி வினாவுக்கான விடைகள்
1. “மிருக இருதயம்.” நேபுகாத்நேச்சார் புத்தியை இழந்து மிருகத்தைப்போல நடந்துகொள்வான் என்று அர்த்தம்
2. ஒரு விடுகதையை
3. தரியு
4. ஏழு
5. “திக்கற்ற பிள்ளைகளும் விதவைகளும் படுகிற உபத்திரவத்திலே அவர்களை விசாரிக்கிறதும், உலகத்தால் கறைபடாதபடிக்குத் தன்னைக் காத்துக்கொள்ளுகிறது[ம்]”
6. அவனை கதவு அல்லது கதவுநிலை அருகே வைத்து “அவன் காதைக் கம்பியினாலே குத்த” வேண்டும்
7. தாத்தானும், அபிராமும்
8. அடையாள எழுத்துகளை குத்திக்கொள்ளக்கூடாது
9. அபியாள் அல்லது சுருக்கமாக ஆபி
10. “ஒரு காலமுண்டு”
11. புதிய, இன்னும் பெரிய சுருளை எழுதும்படி சொன்னார்
12. எஸ்றா
13. இளைய மகன் பென்யமீன் அவர்களோடு வந்தால் மட்டுமே அவர்கள் திரும்பி வரலாம் என எகிப்தின் ஆட்சியாளர் கூறியிருந்தார்
14. தெய்வீக குணங்கள், ஒழுக்க தராதரங்கள் போன்ற பூமியிலுள்ள மற்ற எந்த சிருஷ்டிகளிடமும் இல்லாத மிக உயர்ந்த மானசீக திறமைகள் அவனிடம் இருந்தன
15. ஒற்தலாம் (புதினா, பொது மொழிபெயர்ப்பு)
16. அவர்கள் முன்பாக திராட்சரசம் வைத்து அதைக் குடிக்கும்படி கூறினார்; அது, அவர்கள் முற்பிதாவின் கட்டளைக்கு முரணானது
17. அவர்கள் யோசேப்பின் நீண்ட, பல வருண அங்கியை வெள்ளாட்டு இரத்தத்திலே தோய்த்து யாக்கோபிடம் காண்பித்தார்கள்
18. கோலியாத்
19. நேபோ
20. கிழக்கு