Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

கேட்டாள் இரைச்சல் கண்டாள் வழி

கேட்டாள் இரைச்சல் கண்டாள் வழி

கேட்டாள் இரைச்சல் கண்டாள் வழி

“நான் பொம்மை தயாரிக்கும் கம்பெனியில் வேலை செய்கிறேன். அங்கு ஒரே விதமான வேலையை தினம் தினம் செய்ய வேண்டியிருப்பதால் வேலையாட்கள் பாட்டுக் கேட்க அனுமதி உண்டு. எனக்கு பக்கத்தில் வேலை செய்பவள் சரியான பாட்டுப் பைத்தியம், அதுவும் தரங்கெட்ட பாட்டுகளென்றால் அவளுக்கு உயிர். என்னுடைய செக்‍ஷனில் வேலை செய்கிற இன்னும் இரண்டு பெண்களும் அதே மாதிரியான இசை ரசிகைகள். எனக்கோ அந்தக் கர்ணகடூரத்தை தினமும் எட்டு மணிநேரம் சகிப்பது பெரும் தலைவலியாக இருந்தது.

“இங்கு வேலை செய்வதால் எனக்கு என்னென்ன லாபம் என்று யோசித்துப் பார்த்தேன். என்னோட சூப்பர்வைஸர், மாவட்ட மாநாடுகளுக்கும் யெகோவாவின் சாட்சிகளுடைய முழுநேர ஊழியர்களுக்கு நடத்தப்படும் விசேஷ கூட்டங்களுக்கும் செல்ல எனக்கு எப்போதுமே அனுமதி கொடுப்பவர். இன்னொரு ப்ளஸ் பாயின்ட், வேலை செய்கிற இடம் பக்கத்திலேயே இருந்தது, அதோடு வேலை நேரமும் ஊழியத்தில் நேரம் செலவிடுவதற்கு வசதியாக இருந்தது.

“தயவுசெய்து வேற பாட்டு போட்டு கேட்க முடியுமா, இல்லேன்னா சத்தத்தையாவது கொஞ்சம் குறைச்சா நல்லாயிருக்கும் என்று அந்தப் பெண்களிடம் போய் பவ்வியமாக கேட்டேன். அவர்களோ உடனடியாக சூப்பர்வைஸரிடம் கோள்மூட்டிவிட்டார்கள். சூப்பர்வைஸர் என்னை அவரது ஆபீஸ் ரூமுக்கு அழைத்தார். ‘இதப் பாரு ஷாரன், இந்தக் கம்பெனியையே ஒட்டு மொத்தமாக உன் மதத்துக்கு மாத்திடலாம்னு நினைக்காதே. இங்க வேலை பார்க்கிறவங்க அவங்கவங்க இஷ்டத்துக்கு எத வேணுமானாலும் கேட்கலாம்’ என்றார் அவர்.

“அப்படியென்றால் என்னுடைய டேப்ரிக்கார்டரையும் ஹெட்போன்களையும் நான் எடுத்து வந்து பயன்படுத்தலாமா என்று அவரிடம் அனுமதி கேட்டேன். அவரும் சம்மதித்தார். காவற்கோபுரம் பத்திரிகையின் ஆடியோ கேஸட்டுகளை எடுத்துச் சென்றேன். தரங்கெட்ட பாட்டுகளை கேட்டாக வேண்டிய நிலை இனியும் இல்லை. தவிர, ஆவிக்குரிய விதத்தில் திடமாக இருக்கவும் நம் கேஸட்டுகள் எனக்கு கைகொடுக்கின்றன.”​—ஷாரன் க்வான் சொன்னது. (g02 12/08)