பத்திரிகை துறையின் பங்கு
பத்திரிகை துறையின் பங்கு
“பாதிக்கப்பட்டோருக்கு ஆறுதலளித்து மந்தமாக இருப்போரை தூண்டியெழுப்புவதே அமெரிக்காவில் பத்திரிகை துறையின் பங்கு என ஸ்கிரிப்ஸ் செய்தித்தாள் நிர்வாகத்தின் ஸ்தாபகராகிய எட்வர்டு வில்லிஸ் ஸ்கிரிப்ஸ் ஒருமுறை கூறியதாக” முன்னாள் வெள்ளை மாளிகை பத்திரிகை செயலர் மைக் மிக்கரி குறிப்பிட்டார். அவர் மேலும் சொன்னதாவது: “நீங்கள் அறியாமையில் விடுகிறவர்களை ஆறுதல்படுத்தவோ தூண்டியெழுப்பவோ முடியாது.”
“இந்த உலகில் நடப்பதை புரிந்துகொள்வதற்கு நம்மிடம் சரியான வழிமுறை இல்லை, ஏனென்றால் நமது [ஐ.மா.] செய்தித் துறை நம்மை சுற்றியுள்ள உலக செய்திகளை அறிக்கை செய்வதில்லை என [மிக்கரி] குறிப்பிட்டார்.” “அமெரிக்க குடிமக்கள் இந்த உலக செய்தியை அறிந்துகொள்ள விரும்புகிறதில்லை” என ஐ.மா. செய்தித் துறை நினைப்பதே வருந்தத்தக்க விஷயம்.—கிராபிக் ஆர்ட்ஸ் மன்த்லி.
விழித்தெழு! பத்திரிகைக்கு உலகம் முழுவதிலும் எழுத்தாளர்கள் இருக்கிறார்கள், நடப்பு செய்திகளையும் அறிவியல் மற்றும் சமூக விஷயங்களையும் வாசகருக்கு தெரிவிப்பதே இப்பத்திரிகையின் இலட்சியம். அன்பான படைப்பாளர் மீது இது நம்பிக்கையை வளர்க்கிறது. இது 87 மொழிகளில் பிரசுரிக்கப்படுகிறது, இவற்றில் 61 மொழிகளில் ஒரேசமயத்தில் வெளிவருகிறது. ஒவ்வொரு இதழிலும் 2.1 கோடிக்கும் அதிகமான பிரதிகள் வெளிவருகின்றன! விழித்தெழு! வாசித்து விழிப்புடன் இருங்கள்! (g02 11/08)
[பக்கம் 31-ன் படம்]
எல்லா வித அடிமைத்தனமும் ஒழிகையில்!
[பக்கம் 31-ன் படம்]
அறிவியலும் மதமும் ஒத்துப்போகுமா?
[பக்கம் 31-ன் படம்]
சூதாட்டம்—தீங்கற்ற பொழுதுபோக்கா?
[பக்கம் 31-ன் படம்]
அடிக்கப்படும் பெண்களுக்கு ஆதரவு
[பக்கம் 31-ன் படம்]
உலக சமாதானம் வெறும் கனவா?