“பாரடைஸ் கனவுகள்”
“பாரடைஸ் கனவுகள்”
சென்ற வருடம் பாப்புவா நியூ கினியிலுள்ள யெகோவாவின் சாட்சிகளுடைய கிளை அலுவலகத்திற்கு ஒரு கடிதம் வந்தது. கடிதம் எழுதியவர் விழித்தெழு! வாசகர். இவர் மோரோபே மாவட்டத்திலுள்ள லேயே என்ற ஊரில் வசிப்பவர். அவரது கடிதத்திலிருந்து இதோ சில வரிகள்:
“ஐந்து வருடங்களுக்கு முன்பு (போர்ட் மோர்ஸ்பியில் இருந்தபோது) நான் ஒரு ஞானமான தீர்மானத்தை எடுத்தேன் என்பதை உங்களிடம் சொல்லியே தீர வேண்டும். உங்கள் அமைப்பு வெளியிடும் விழித்தெழு! பத்திரிகையை தவறாமல் படிக்க வேண்டும் என்பதுதான் அந்த தீர்மானம். 1997-ம் வருடத்திலிருந்து ஒரு இதழைக்கூட தவறவிடாமல் எல்லாவற்றையும் படித்துவிட்டேன். என் வீட்டில் எங்கும் விழுத்தெழு! மயம்.
“நான் நிறைய விஷயங்களை கற்றுக்கொண்டேன். என்னுடைய சொல்வளம், பொது அறிவு, இலக்கண அறிவு, படைத்தவரைப் பற்றிய புரிந்துகொள்ளுதல் எல்லாம் பெருகியிருக்கிறது. இப்போதெல்லாம் நான் ரொம்ப பொறுத்துப் போகிறேன், மற்றவர்களை அன்பாக நடத்துகிறேன், முன்பைவிட கருத்தாக செயல்படுகிறேன், மரஞ்செடிகொடிகளையும் மிருகங்களையும்கூட அதிகமாக மதிக்க ஆரம்பித்திருக்கிறேன். இன்னும் நிறைய பேர் விழுத்தெழு! பத்திரிகையையும் உங்களுடைய மற்ற பிரசுரங்களையும் படிக்க வேண்டும் என்று சிபாரிசு செய்கிறேன்.”
முடிவாக அவர் இப்படி எழுதியிருந்தார்: “இந்த உலகில் உள்ள எல்லாருமே யெகோவாவின் சாட்சிகளாக மாறினால், நம்முடைய பாரடைஸ் கனவுகள் கண்டிப்பாக ஒரே ஜாமத்தில் நனவாகிவிடும் என நினைக்கிறேன். உங்கள் அருமையான சேவை தொடர வாழ்த்துக்கள்!”
கடவுளுடைய அரசாங்கம் சீக்கிரத்தில் இன்றைய உலக நிலைமைகளை அடியோடு மாற்றி புது உலகம் மலர வழிசெய்யும் என பைபிள் உறுதியளிக்கிறது. யெகோவாவின் சாட்சிகளுடைய பிரசுரங்கள் இந்த வாக்குறுதியை சிறப்பித்துக் காட்டுகின்றன. கடவுளுடைய அரசாங்கம் மனித பிரச்சினைகள் அனைத்திற்கும் பரிகாரம் என்பதை நித்திய ஜீவனுக்கு வழிநடத்துகிற அறிவு என்ற புத்தகம் காட்டுகிறது.
இந்த 192 பக்க புத்தகத்தை நீங்களே படித்துப் பார்க்க வேண்டுமா? இங்கே கொடுக்கப்பட்டுள்ள கூப்பனை பூர்த்தி செய்து, இந்தப் பத்திரிகையில் 5-ம் பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள பொருத்தமான விலாசத்திற்கு அனுப்புங்கள். (g02 12/08)
◻நித்திய ஜீவனுக்கு வழிநடத்துகிற அறிவு என்ற புத்தகத்தைப் பற்றிய கூடுதலான தகவலை எனக்கு அனுப்பவும்.
◻இலவசமாக பைபிளை கற்றுக்கொள்ள ஆசைப்படுகிறேன்.