Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

“இந்த முறை என்னிடம் இது பேசியது”

“இந்த முறை என்னிடம் இது பேசியது”

“இந்த முறை என்னிடம் இது பேசியது”

யெகோவாவின் சாட்சிகளால் 1994-⁠ல் பிரசுரிக்கப்பட்ட சிற்றேடு, பிரியமான ஒருவரை மரணத்தில் இழப்பதால் ஏற்படும் ஆழ்ந்த சோகத்தை சமாளிப்பதைப் பற்றி கலந்தாலோசித்தது. இது அநேகருக்கு ஆறுதல் அளித்து வருகிறது.

சமீபத்தில், அ.ஐ.மா., பென்சில்வேனியாவிலிருந்து ஒரு வாசகரின் பாராட்டுக் கடிதத்தை பெற்றோம். அது இவ்விதமாக வாசிக்கிறது: “இந்த சிற்றேடு முதன்முதல் என் கையில் கிடைத்தபோது, ‘இது ரொம்ப அருமையான புத்தகம்’ என்று மட்டுமே நினைத்தேன். ஆனாலும், இரண்டு வாரத்திற்கு முன்பு என் மகளை இழக்கும் வரை இதன் உண்மையான மதிப்பை உணரவில்லை. நான் மீளாத் துயரத்தில் மூழ்கிவிட்டேன், இதிலிருந்து மீள வழியுண்டா என உதவிக்காக காத்திருந்தேன். அப்போதுதான் இந்த சிற்றேட்டை கையிலெடுத்து நிஜமாகவே வாசித்தேன். இந்த முறை என்னிடம் இது பேசியது. என் சோகத்திற்கு அர்த்தம் தந்தது. ஆறுதல் சொல்லி என்னை அணைத்தது.”

நீங்கள் நேசிக்கிற ஒருவர் மரிக்கையில் என்ற சிற்றேடு பின்வரும் கேள்விகளுக்கு பதிலளிக்கிறது: என் துக்கத்தை சமாளித்து வாழ்வது எப்படி? மற்றவர்கள் எவ்வாறு உதவலாம்? மரித்தவர்களுக்கு என்ன நம்பிக்கை இருக்கிறது?

நீங்களோ அல்லது உங்களுக்குத் தெரிந்த மற்றவர்களோ இந்த 32-பக்க சிற்றேட்டை படிப்பதன் மூலம் ஆறுதல் அடையலாம். இந்தச் சிற்றேட்டைப் பற்றிய கூடுதலான தகவலை பெறுவதற்கு இங்கே கொடுக்கப்பட்டுள்ள கூப்பனை பூர்த்தி செய்து, இந்தப் பத்திரிகையில் 5-⁠ம் பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள பொருத்தமான விலாசத்திற்கு அனுப்புங்கள். (g03 2/22)

நீங்கள் நேசிக்கிற ஒருவர் மரிக்கையில் என்ற சிற்றேட்டைப் பற்றிய கூடுதலான தகவலை எனக்கு அனுப்பவும்.

□இலவசமாக பைபிளை கற்றுக்கொள்ள ஆசைப்படுகிறேன்.