Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

உங்களுக்குத் தெரியுமா?

உங்களுக்குத் தெரியுமா?

உங்களுக்குத் தெரியுமா?

(இந்த வினாடி வினாவுக்கான விடைகளை கொடுக்கப்பட்ட பைபிள் இடக்குறிப்புகளில் காணலாம்; எல்லா விடைகளும் பக்கம் 13-⁠ல் அச்சிடப்பட்டுள்ளன. கூடுதலான தகவல் பெற விரும்பினால், யெகோவாவின் சாட்சிகள் பிரசுரித்த “வேதாகமத்தின்பேரில் உட்பார்வை” [ஆங்கிலம்] என்ற பிரசுரத்தை ஆராய்ந்து பாருங்கள்.)

1. எந்த இடத்தில், மோசேயும் ஆரோனும் யெகோவாவை பரிசுத்தப்படுத்த தவறியதால் வாக்குப்பண்ணப்பட்ட தேசத்திற்குள் நுழையும் சிலாக்கியத்தை இழந்தார்கள்? (எண்ணாகமம் 20:12, 13)

2. யோபுவின் ஆடுகளையும் கழுதைகளையும் ஓட்டிச் சென்று வேலையாட்களை கொலை செய்த கும்பல் எது? (யோபு 1:14, 15)

3. பாபிலோனில் இருக்கையில், தானியேலின் மூன்று கூட்டாளிகளில் யாருக்கு மேஷாக் என்று பெயரிடப்பட்டது? (தானியேல் 1:7)

4. ஆவியின் கனியில் அன்புக்கு அடுத்ததாக வருவது எது? (கலாத்தியர் 5:22)

5. மகா பாபிலோனுக்கு வரப்போகிற அழிவை குறிக்கும் வண்ணம் பலமுள்ள தூதனொருவன் “பெரிய ஏந்திரக்கல்லையொத்த ஒரு கல்லை” எங்கே எறிந்தான்? (வெளிப்படுத்துதல் 18:21)

6. எலிசா கேட்டதாக பொய் சொல்லி என்ன பரிசை கேயாசி நாகமானிடமிருந்து பெற்றான்? (2 இராஜாக்கள் 5:22)

7. எமோரியரின் எந்த அரசன், அவனுடைய தேசத்திலிருந்து குடிப்பதற்குக்கூட தண்ணீரை எடுக்க மாட்டோம் என்று இஸ்ரவேலர்கள் வாக்கு கொடுத்தும் தன்னுடைய தேசத்தின் வழியாக கடந்து செல்ல அவர்களை அனுமதிக்கவில்லை? (எண்ணாகமம் 21:21-23)

8. சாராளை அடக்கம்பண்ண மக்பேலா என்ற குகையை ஆபிரகாமுக்கு விற்றது யார்? (ஆதியாகமம் 23:8-10)

9. நீதிமொழிகள் 29:25-⁠ன்படி “மனுஷனுக்குப் பயப்படும் பயம்” எதை வருவிக்கும், அதை எவ்வாறு தவிர்க்கலாம்?

10. கடவுளுடைய ஆவியின் கனியில் மூன்றாவதாக இடம் பெற்றுள்ளது எது? (கலாத்தியர் 5:22)

11. யெகோவாவை பிரியப்படுத்தவும், இஸ்ரவேலரில் 24,000 பேரைக் கொன்ற வாதையை நிறுத்தவும், பினெகாஸ் என்ன நடவடிக்கை எடுத்தான்? (எண்ணாகமம் 25:6-14)

12. அளவுகுடம், கலம், மரக்கால், எப்பா, ஆழாக்கு, ஓமர் மற்றும் படி இவை எல்லாம் எதை குறிக்கின்றன? (யாத்திராகமம் 16:32)

13. எருசலேமிலிருந்த அப்போஸ்தலரும் மூப்பர்களும், அந்தியோகியா, சீரியா மற்றும் சிலிசியாவில் இருக்கும் சகோதரர்களுக்கு “அவசியமான இவைகளையல்லாமல்” என்ற என்ன பட்டியலை கொடுத்தார்கள்? (அப்போஸ்தலர் 15:28, 29)

14. சேபா நாட்டு ராணி எதற்காக எருசலேமுக்கு சென்றாள்? (1 இராஜாக்கள் 10:4)

15. இஸ்ரவேலர்களுக்கு யெகோவா கொடுத்த பரிசுத்தமான சபைகூடுதல்களின் ஒரு விசேஷ அம்சம் என்ன? (லேவியராகமம் 23:7)

16. நான்கு சுவிசேஷங்களில் மிகவும் சிறியது எது?

17. இயேசுவை கைது செய்யும்படி வந்த கூட்டத்தாரில் யாருடைய வலது காதை பேதுரு பட்டயத்தால் வெட்டினார்? (யோவான் 18:10)

18. முதன் முதலாக என்ன மூன்று மொழிகளில் பைபிள் எழுதப்பட்டது? (எஸ்றா 4:7; வெளிப்படுத்துதல் 9:11)

19. நாடோடிகளாகவும் இடையர்களாகவும் நாட்டுப்புறக் கூடாரங்களில் வசித்ததாகவும் கருதப்பட்டது யார்? (எரேமியா 3:2)

20. அறுவடை செய்யும்போது வயலின் ஓரத்திலிருப்பதை அறுக்கக்கூடாது என்பதாக இஸ்ரவேலர்களிடம் ஏன் சொல்லப்பட்டது? (லேவியராகமம் 19:9, 10) (g03 2/08)

வினாடி வினாவுக்கான விடைகள்

1.மேரிபாவின் தண்ணீர்

2.சபேயர்

3.மீஷாவேல்

4.சந்தோஷம்

5.சமுத்திரத்தினுள்

6.“ஒரு தாலந்து வெள்ளியையும் இரண்டு மாற்று வஸ்திரங்களையும்”

7.சீகோன்

8.ஏத்தியனாகிய எப்பெரோன்

9.கண்ணியை. யெகோவாவை நம்புவதன் மூலம்

10.சமாதானம்

11.சிமியோனியரின் பிரபுவாகிய சிம்ரியையும், வேசித்தனம் செய்வதற்காக தன் கூடாரத்திற்கு அழைத்து வந்த மீதியானிய ஸ்திரீயாகிய கஸ்பியையும் ஈட்டியால் குத்திப்போட்டான்

12.அளவை

13.‘விக்கிரகங்களுக்குப் படைத்தவைக்கும், இரத்தத்திற்கும், நெருக்குண்டு செத்ததிற்கும், வேசித்தனத்திற்கும், விலகியிருக்க வேண்டும்’

14.“சாலொமோனுடைய சகல ஞானத்தையும்” காண

15.சாதாரணமான யாதொரு வேலையும் செய்யக்கூடாது

16.மாற்கு

17.பிரதான ஆசாரியனுடைய வேலைக்காரனாகிய மல்குஸ்

18.எபிரெய, சீரிய (அரமேய) மற்றும் கிரேக்க மொழிகள்

19.அரேபியர்கள்

20.“எளியவனுக்கும், பரதேசிக்கும்” கொஞ்சம் பயிரை விட்டுவிடுவதற்காக