Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

“விழித்தெழு! என் உயிரைக் காப்பாற்றியது!”

“விழித்தெழு! என் உயிரைக் காப்பாற்றியது!”

“விழித்தெழு! என் உயிரைக் காப்பாற்றியது!”

இத்தாலியிலிருந்து ஒரு பாராட்டுக் கடிதத்தை விழித்தெழு! பத்திரிகையை பிரசுரிப்பவர்கள் பெற்றார்கள். அதன் ஒரு பகுதி இவ்விதமாக வாசிக்கிறது:

“நான் கடந்த 40 வருடங்களாக விழித்தெழு! பத்திரிகையை வாசித்து வருகிறேன்; உபயோகமான பலதரப்பட்ட விஷயங்களை அது சொல்லும் விதத்தையும் ரசிக்கிறேன். சிறிது காலத்திற்கு முன், நான் வேலை செய்து கொண்டு இருக்கும் போது என் வயிற்றிலும் நெஞ்சிலும் தாங்க முடியாத வலி வந்தது. வீட்டிற்கு போய்விடலாம் என்று நினைத்தேன். ஆனால், திரும்பவும் அதேவிதமாக வலி வந்தபோது தான் என்ன நடக்கிறது என்று என்னால் ஊகிக்க முடிந்தது. மாரடைப்புக்கான அறிகுறிகளைப் பற்றி விழித்தெழு! பத்திரிகையில் வந்த ஒரு கட்டுரை என் நினைவிற்கு வந்தது. a மருத்துவமனைக்குச் செல்ல தீர்மானித்தேன். நான் பார்வையாளர்களின் அறையில் இருக்கும் போதே, என் தலையின் ஒரு பக்கம் மந்தமாகி நினைவிழந்து மயங்கி விழுந்தேன். அடுத்த நாள் அவசர சிகிச்சைப் பிரிவில் இருக்கும்போதுதான் எனக்கே இது தெரியவந்தது.

“இன்று நான் உயிரோடு இருப்பதே திறமையான மருத்துவர்களின் உடனடி கவனிப்பால் தான். நான் ஞானமாக உடனே மருத்துவமனையை நாடிச் செல்ல உங்கள் பத்திரிகையில் கொடுத்திருந்த தகவல்களே உதவின; அதற்காகவும் நான் நன்றிக்கடன்பட்டிருக்கிறேன். விழித்தெழு! என் உயிரைக் காப்பாற்றியது.” (g03 2/22)

[அடிக்குறிப்புகள்]

a எமது டிசம்பர் 8, 1996 இதழில் பக்கம் 6-ஐ காண்க.