Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

எமது வாசகரிடமிருந்து

எமது வாசகரிடமிருந்து

எமது வாசகரிடமிருந்து

சூதாட்டம் “சூதாட்டம் தீங்கற்ற பொழுதுபோக்கா?” (செப்டம்பர் 8, 2002) என்ற தொடரை இப்போதுதான் படித்து முடித்தேன். சரியான நேரத்தில் இந்தத் தகவலை கொடுப்பதற்கு உங்களைப் பயன்படுத்திய யெகோவாவுக்கு நன்றி செலுத்துகிறேன். சூதாட்டக்காரர்களின் நடத்தையில் தென்படும் அறிகுறிகள் பற்றிய பட்டியலை பார்த்ததும் என் கண்களையே என்னால் நம்பமுடியவில்லை. ஏனென்றால், அது அப்படியே என் கணவரைப் பற்றி விவரிப்பது போல இருந்தது! இந்தக் கெட்ட பழக்கம் மற்ற பெரிய பாவங்களை செய்ய வழிநடத்தியது வருந்தத்தக்கது. சூதாட்டம் ஒரு கொள்ளைநோய். இது ஒரு தீங்கற்ற பொழுதுபோக்கில்லை என்பதை அனைவரும் நினைவில் வைத்திருப்பார்கள் என்று நம்புகிறேன்.

எம். ஜி., ஐக்கிய மாகாணங்கள் (g03 3/22)

இளைஞர் கேட்கின்றனர் “இளைஞர் கேட்கின்றனர் . . . மிகவும் கவரத்தக்க நபராக இருக்க நான் என்ன செய்யலாம்?” (செப்டம்பர் 8, 2002) என்ற கட்டுரைக்கு என் இதயங்கனிந்த நன்றி. எனக்கு 22 வயது; இந்தக் கட்டுரை என்னுடைய உள்ளான பண்புகளை முன்னேற்றுவிக்க உற்சாகமளித்தது. இப்போது சாந்த குணத்தை காட்ட பழகிக்கொள்வதே என்னுடைய முதல் இலட்சியம். எல்லாவற்றிற்கும் மேலாக, யெகோவாவின் கண்களில் அழகானவளாக வேண்டும். தயவுசெய்து இப்படிப்பட்ட நல்ல கட்டுரைகளை தொடர்ந்து பிரசுரியுங்கள்.

ஏ. ஹெச்., ஜப்பான் (g03 3/8)

இந்தக் கட்டுரை என் இதயத்தை தொட்டது. எனக்கு வயது 18, என்னுடைய ஆவிக்குரிய குணங்களை வளர்த்துக்கொள்ள உழைப்பது எவ்வளவு முக்கியம் என்பதை சிலசமயம் மறந்துவிடுகிறேன். இந்த நிமிஷத்திலிருந்து யெகோவாவின் உதவியோடு ஆவியின் கனியை வளர்த்துக்கொள்ள உறுதியாக தீர்மானித்துள்ளேன்.​—⁠கலாத்தியர் 5:22, 23.

எம். ஆர். ஏ., பிரேசில் (g03 3/8)

கடந்த இரண்டு வருடங்களாக, நான் அழகாய் இருப்பதாக மற்றவர்கள் நினைக்கிறார்களா என்று அடிக்கடி யோசித்ததுண்டு. நான் அவ்வளவு அழகாக இல்லை என்றும்கூட சிலசமயம் நினைத்திருக்கிறேன். இந்தக் கட்டுரையை படித்த பிறகு, கடவுளுடைய உண்மையுள்ள ஊழியராக நான் அவருடைய பார்வையில் அழகானவளாக இருக்கமுடியும், அதுவே அதி முக்கியம் என்பதை உணர்ந்து போற்ற முடிந்தது.

ஐ. பி., ஐக்கிய மாகாணங்கள் (g03 3/8)

போஸ்ட்பார்ட்டம் டிப்ரஷன் “போஸ்ட்பார்ட்டம் டிப்ரஷனை சமாளித்தேன்” (செப்டம்பர் 8, 2002) என்ற கட்டுரையில் உள்ள தகவல் எந்தவிதமான டிப்ரஷனுக்கும் பொருந்தும் என கண்டேன். நான் தொடர்ந்து மன அழுத்தத்தை எதிர்த்து போராடிக் கொண்டிருக்கிறேன். நான் தனியாக இல்லை என்றும் கடவுளுடைய ராஜ்யத்தின் கீழ் மற்ற எல்லா நோய்களையும் போல டிப்ரஷனும் ஒரு முடிவுக்கு வரும் என்றும் அறிவதே தெம்பூட்டுகிறது.

சி. ஹெச்., ஐக்கிய மாகாணங்கள் (g03 3/22)

பத்து மாதத்திற்கு முன் ஒரு பெண் குழந்தையை பெற்றெடுத்த பின்பு நான் போஸ்ட்பார்ட்டம் ஸைக்கோசிஸால் கஷ்டப்பட ஆரம்பித்தேன். என் குழந்தைக்கு எதையுமே செய்ய நான் விரும்பவில்லை. மருத்துவ சிகிச்சையும் சபை மற்றும் குடும்பத்தினரின் அன்பான ஆதரவும் எனக்கு பெரிதும் உதவின. இந்தக் கட்டுரை மற்ற பெண்களுக்கும் அவர்களுடைய குடும்பத்தினருக்கும் இந்த நோயைப் பற்றி புரிந்துகொள்ள உதவும் என்று நம்புகிறேன். இதன் ஒரு பிரதியை என்னுடைய மருத்துவருக்கு கொடுக்க திட்டமிட்டுள்ளேன்.

எஸ். ஸெட்., தென் ஆப்பிரிக்கா (g03 3/22)

தலைமுடி “உங்கள் தலைமுடியைப் பற்றி கவலையா?” (செப்டம்பர் 8, 2002) என்ற கட்டுரைக்கு என்னுடைய இருதயப்பூர்வமான நன்றியை செலுத்த விரும்புகிறேன். 36 வயது நிரம்பிய நான், கொஞ்சம் முடி உதிர்வதையும் அடர்த்தி குறைவதையும் நினைத்துக் கொஞ்ச காலமாகவே கவலைப்படுகிறேன். இயற்கையாகவே தினமும் கொஞ்சம் முடி உதிரும் என்பதை புரிந்துகொள்ள இந்த கட்டுரைகள் உதவின. இப்பொழுது நான் நிம்மதியாக இருக்கிறேன். இப்படிப்பட்ட கட்டுரைகளை வெளியிடுவதை நிறுத்திவிடாதீர்கள்!

வி. ஜி., ஸ்லோவாகியா (g03 3/22)

இந்தக் கட்டுரை சரியான நேரத்தில் எனக்கு கிடைத்தது. என் முடி உதிர்வதை நினைத்து அதிக சோகமாய் இருந்தேன். “உங்கள் தலைமுடியை நினைத்து நீங்கள் கவலைப்படும் அளவிற்கு மற்றவர்கள் பொதுவாக கவலைப்பட மாட்டார்கள்” என்று இந்த கட்டுரை விளக்கிய விதம் என்னை மிகவும் ஆறுதல்படுத்தியது. மேலுமாக தலைமுடி சம்பந்தமாக எந்தப் பிரச்சினையுமே இல்லாவிட்டாலும்கூட ஒவ்வொரு நாளும் ஏறக்குறைய 70 முதல் 100 முடிகள் தானாகவே உதிர்கின்றன என்பதை தெரிந்துகொண்டதும் நிம்மதியடைந்தேன்!

ஈ. எல்., ஐக்கிய மாகாணங்கள் (g03 3/22)