சொற்பொழிவை கேட்க வாரீர்! “இன்று தேவனை மகிமைப்படுத்துகிறவர்கள் யார்?”
சொற்பொழிவை கேட்க வாரீர்! “இன்று தேவனை மகிமைப்படுத்துகிறவர்கள் யார்?”
இறைவனை மகிமைப்படுத்துவது என்ற எண்ணமே மதப்பற்றுள்ளோருக்கு வினோதமாக தோன்றலாம். இந்த சர்வலோகத்திலும் கடவுளே மிக உயர்ந்த பேரரசர் அல்லவா? அப்படியிருக்க, சாதாரண மனிதர்கள் அவரை மகிமைப்படுத்த முடியுமா? நிச்சயம் முடியும்; ஏனென்றால், “தேவனுக்குப் பயந்து, அவரை மகிமைப்படுத்துங்கள்” என பைபிள் நமக்கு அறிவுரை கூறுகிறது. (வெளிப்படுத்துதல் 14:7) இதை செய்வதற்கு ஒரு வழி ‘தேவனுடைய வார்த்தையைக் கேட்டு, அதைக் காத்துக்கொள்வதாகும்.’ (லூக்கா 11:28) உண்மையில், நாம் பைபிளைப் படித்து அதன் நியமங்களின்படி வாழும்போது, அதன் ஆசிரியராகிய யெகோவா தேவனுக்கு கனத்தையும் மகிமையையும் சேர்க்க முடியும்.
ஆனால் இவ்விதமாக இன்று தேவனை மகிமைப்படுத்துகிறவர்கள் யார்? தாங்கள் மதப்பற்றுள்ளவர்கள் என கோடிக்கணக்கானோர் கூறிக்கொள்கிறார்கள்; ஆனால் அது மட்டுமே தேவனை மகிமைப்படுத்துமா? நம்முடைய வணக்க முறை தேவனை சந்தோஷப்படுத்துகிறது என்றும், அதனால் அவரை மகிமைப்படுத்துகிறது என்றும் நாம் எவ்வாறு உறுதியாக இருக்கலாம்? இந்தக் கேள்விகளுக்குரிய பதிலை, “இன்று தேவனை மகிமைப்படுத்துகிறவர்கள் யார்?” என்ற உள்ளத்தை தட்டி எழுப்பும் சொற்பொழிவில் கேட்கலாம். இந்தப் பொதுப் பேச்சு யெகோவாவின் சாட்சிகளால் நடத்தப்படும் மாவட்ட மாநாடுகளில் கொடுக்கப்படும்; இந்த மாதத்திலிருந்து இவை ஆரம்பமாகும். உலகெங்கிலும் நூற்றுக்கணக்கான இடங்களில் இந்த மாநாடுகள் நடத்தப்படும். உங்களுக்கு மிக அருகில் நடைபெறும் மாநாட்டைப் பற்றி தெரிந்துகொள்வதற்கு, தயவுசெய்து உங்களுடைய பகுதியில் வாழும் யெகோவாவின் சாட்சிகளை அணுகுங்கள் அல்லது இந்தப் பத்திரிகையில் 5-ம் பக்கத்தில் காணப்படும் பொருத்தமான விலாசத்திற்கு தொடர்புகொள்ளுங்கள். (g03 5/22)