அன்பானவரிடமிருந்து ஒரு கடிதம்
அன்பானவரிடமிருந்து ஒரு கடிதம்
நியு யார்க்கிலுள்ள ஒரு வாசகர், யெகோவாவிடம் நெருங்கி வாருங்கள் என்ற புத்தகத்தை அன்பானவரிடமிருந்து வந்த ஒரு கடிதத்திற்கு ஒப்பிட்டு, இப்படியாக விளக்கினார்: “ஒவ்வொரு அதிகாரமும் இதயத்தை தூண்டுகிறது; உள்ளத்தை யெகோவாவின் அன்பினால் நிரப்புகிறது.” மேலும் அவர் எழுதினார்: “இந்தப் புத்தகத்தை இப்போது நான் வாசித்து முடித்து விட்டிருந்தாலும், மிகவும் அன்பான ஒருவரிடமிருந்து வந்த கடிதத்தை திரும்பத் திரும்ப வாசிப்பதை போலவே இந்தப் புத்தகத்தையும் திரும்பத் திரும்பப் படிப்பதற்கு என் மனம் பரபரக்கிறது.” இந்தப் புத்தகத்தைப் பற்றி மற்றவர்கள் என்ன சொல்கிறார்கள் என்று கேளுங்கள்.
கன்ஸெஸ் என்ற இடத்திலுள்ள ஒரு வாசகர் இவ்வாறு சொல்கிறார்: “என் பரலோக தந்தையிடம் நான் இன்னும் நெருங்கி செல்வதை உணர முடிகிறது. அன்பினால் என் இதயம் நிரம்பி வழிகிறது . . . ஒவ்வொரு நாள் காலையிலும் அதிகமதிகமாக இதைப் படிக்க மனம் துடிக்கிறது; மறுபடியும் மறுபடியுமாக நிறைய தடவை இதை வாசிக்கப் போகிறேன்.”
மேன் என்ற இடத்திலிருந்து ஒரு பெண் இப்படி எழுதினாள்: “யெகோவா உண்மையில் எப்படிப்பட்டவர் என்பதை நான் இன்னுமதிகமாக புரிந்துகொள்வதற்கு இந்தப் புத்தகம் பேருதவி அளித்திருக்கிறது. பக்கம் 74-ல் உள்ள ஒரு வரி ரொம்பவும் ஆறுதலாக இருந்தது: ‘இறந்தவர்களுக்கு, கடவுளுடைய ஞாபகத்தில் இருப்பதைவிட பாதுகாப்பான இடம் வேறில்லை.’” இதேபோல, அலாஸ்காவிலுள்ள இன்னொரு பெண் எழுதினாள்: “இது என் மனதை அத்தனை ஆழமாக தொட்டதால், பொலபொலவென கண்ணீரே வந்துவிட்டது.” மேலும் அவள் எழுதினாள்: “கண்டிப்பாக இந்தப் புத்தகத்தை நான் திரும்பத் திரும்ப படிக்கப் போகிறேன்.”
இந்தப் புத்தகத்தை படித்தால் நீங்களும் அப்படித்தான் உணருவீர்கள். முதல் மூன்று அதிகாரங்களுக்குப் பிறகு, இந்தப் புத்தகம் நான்கு பகுதிகளாக பிரிக்கப்பட்டிருக்கிறது; அவற்றின் தலைப்புகள்: “மகா வல்லமை படைத்தவர்,” “நீதியை நேசிப்பவர்,” “இருதயத்தில் ஞானமுள்ளவர்,” மற்றும் “தேவன் அன்பாகவே இருக்கிறார்.” அதன் கடைசி அதிகாரத்தின் தலைப்பு, “கடவுளிடம் நெருங்கி வாருங்கள் அவரும் உங்களிடம் நெருங்கி வருவார்.”
இந்த 320 பக்க புத்தகம் உங்களுக்கு வேண்டுமானால் கீழே கொடுக்கப்பட்டுள்ள கூப்பனை பூர்த்தி செய்து, இந்தப் பத்திரிகையில் 5-ம் பக்கத்தில் காணப்படும் பொருத்தமான விலாசத்திற்கு அனுப்பவும். (g03 7/22)
◻ யெகோவாவிடம் நெருங்கி வாருங்கள் என்ற புத்தகத்தைப் பற்றிய கூடுதலான தகவலை எனக்கு அனுப்பவும்.
◻ இலவசமாக பைபிளை கற்றுக்கொள்ள ஆசைப்படுகிறேன்.