Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

உயிர் தோன்றிய விதம் பற்றிய கேள்வி

உயிர் தோன்றிய விதம் பற்றிய கேள்வி

உயிர் தோன்றிய விதம் பற்றிய கேள்வி

பிரான்சு நாட்டு பள்ளிகளிலும் மீடியாக்களிலும் பரிணாமக் கொள்கை முற்றிலும் உண்மை என கூறப்படுகிறது. இதன் விளைவாக, கடவுள் நம்பிக்கை இருந்தாலும் பரிணாமத்தின் மூலமாக மட்டுமே உயிர் தோன்றியிருக்க முடியும் என பொதுவாக மக்கள் நம்புகிறார்கள். ஆனாலும், உயிரினங்களின் சிக்கலான தன்மையைக் கண்டு பிரமிப்படையும் பலர் இந்தக் கொள்கையை சந்தேகிக்கிறார்கள். பிரான்சிலுள்ள யெகோவாவின் சாட்சிகளுடைய கிளை அலுவலகத்திற்கு ஒருவர் பின்வருமாறு கடிதம் எழுதியிருந்தார்:

“உயிர்​—⁠எப்படி தோன்றியது? பரிணாமத்தினாலா படைப்பினாலா? என்ற உங்களுடைய புத்தகம் சமீபத்தில் பழைய புத்தகக் கடையிலிருந்து எனக்கு கிடைத்தது. அலசி ஆராய வேண்டிய முக்கிய உண்மைகளை இந்தச் சிறிய புத்தகம் விவாதிப்பதாக எனக்கு தோன்றியதால் இதை ரொம்ப ஆர்வமாக படித்தேன். நான் ஒரு இயற்பியலாளர் என்பதால் பல ஆண்டுகளாகவே ‘டார்வின் கொள்கையிலும்’ இதர ‘பரிணாமக் கொள்கைகளிலும்’ உள்ள சிக்கல்களைப் பற்றி தெரிந்துகொள்ள வேண்டும் என்ற ஆர்வம் இருந்தது. உயிரற்றவையே உயிரினங்களாக உருமாறின அல்லது உயிரற்ற பொருட்களிலிருந்தே உயிர் தோன்றியது என அவை விளக்குகின்றன.”

“உங்களுடைய சிறிய புத்தகம்” என குறிப்பிட்ட அவர், அதை வாசித்த பின்பு, அதில் தான் கவனித்த விஷயங்களைப் பற்றி இவ்வாறு எழுதினார்: “உயிர்​—⁠எப்படி தோன்றியது? என்ற புத்தகம் மிக அருமையாக தயாரிக்கப்பட்டு, அத்தாட்சிகளோடு எழுதப்பட்டுள்ளது; இன்றைய அநேக விஞ்ஞானிகளால் பொதுவாக ஏற்றுக்கொள்ளப்படுகிற புனையப்பட்ட பரிணாமக் கொள்கையில் உள்ள பிரச்சினைகளையும் தீர்க்க முடியாத முரண்பாடுகளையும் இது நன்றாகவே தொகுத்தளிக்கிறது.” மேலுமான தகவலை அளிக்கும்படி கடிதத்தில் அவர் கேட்டிருந்தார்.

உயிர்​—⁠எப்படி தோன்றியது? பரிணாமத்தினாலா படைப்பினாலா? புத்தகத்தைப் பற்றி கூடுதலான தகவல் பெற விரும்பினால், கீழே கொடுக்கப்பட்டுள்ள கூப்பனை பூர்த்தி செய்து இப்பத்திரிகையில் 5-⁠ம் பக்கத்திலுள்ள பொருத்தமான விலாசத்திற்கு அனுப்புங்கள். (g03 8/08)

உயிர்​—⁠எப்படி தோன்றியது? பரிணாமத்தினாலா படைப்பினாலா? என்ற புத்தகத்தைப் பற்றிய கூடுதலான தகவலை எனக்கு அனுப்பவும்.

இலவசமாக பைபிளை கற்றுக்கொள்ள ஆசைப்படுகிறேன்.