Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

எமது வாசகரிடமிருந்து

எமது வாசகரிடமிருந்து

எமது வாசகரிடமிருந்து

எலக்ட்ரானிக் கேம்ஸ் எனக்கு 13 வயது. “எலக்ட்ரானிக் கேம்ஸ்​—⁠இருண்ட பக்கம் இருக்கிறதா?” (ஜனவரி 8, 2003) என்ற அட்டைப்பட கட்டுரைகளைப் பார்த்ததும், அது எனக்காக எழுதப்பட்டிருப்பது போலவே இருந்தது! ஏழாம் பக்கத்தில் விவரிக்கப்பட்டிருந்த ஒரு கேமுக்கு நானும் ஒருசமயம் அடிமையாக இருந்தேன். இந்தக் கட்டுரைகளுக்காக நன்றி தெரிவிக்க விரும்புகிறேன்; ஏனெனில் என்னுடைய வழிகளை மாற்றிக்கொள்வதற்கும் யெகோவாவை அதிகமாக நேசிப்பதற்கும் அவை உதவின.

ஜே. எல்., ஐக்கிய மாகாணங்கள் (g03 8/22)

எனக்கு சுமார் 15 வயது. எங்களுக்கு பிடித்தமான தற்போதைய விஷயத்தின் பேரில் ஒரு ரிப்போர்ட்டை நாங்கள் பள்ளியில் சமர்ப்பிக்க வேண்டியிருந்தது. இந்த விழித்தெழு! பத்திரிகை தக்க சமயத்தில் எனக்குக் கிடைத்தது. வகுப்பிலுள்ள எல்லாருக்குமே என்னுடைய ரிப்போர்ட் ரொம்ப பிடித்துவிட்டது. எனக்கு நல்ல மார்க்கும் கிடைத்தது! தயவுசெய்து இது போன்ற கட்டுரைகளை தொடர்ந்து எழுதுங்கள்.

ஜே. ஏ., ஜெர்மனி (g03 8/22)

உங்களுடைய பத்திரிகையில் வெளிவரும் தகவல்களுக்கு பாராட்டு தெரிவிக்க எப்போதும் விரும்பியதுண்டு. ஆனால் எல்க்ட்ரானிக் கேம்ஸ் பற்றிய கட்டுரைகளை வாசித்த உடனேயே இந்தக் கடிதத்தை எழுத தீர்மானித்தேன். எனக்கு 11 வயதில் மகளும் 3 வயதில் மகனும் இருக்கிறார்கள். ஆகவே, இந்தத் தகவல் எனக்கு ஏற்ற சமயத்தில் கிடைத்தது. இத்தகைய பிரசுரங்கள் மூலமாக நம் படைப்பாளரின் அன்பையும் அரவணைப்பையும் என்னால் தெளிவாக உணர முடிகிறது.

ஓ. வி., ஐக்கிய மாகாணங்கள் (g03 8/22)

கழிவுநீர் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தின் தலைமை ஆப்பரேட்டரான நான், “தண்ணீர் எங்கே போகிறது?” (நவம்பர் 8, 2002) என்ற கட்டுரையை ரொம்ப ஆர்வமாக படித்தேன். கழிவுநீர் சுத்திகரிப்பு, ஏராளமான மக்களை தொற்று நோய்களிலிருந்து பாதுகாக்கிறது. கடந்த காலங்களில் டைஃபாய்டு, காலரா, இன்னும் தண்ணீர் மூலமாக ஏற்படும் பல வியாதிகள் உலகெங்கும் கட்டுக்கடங்காமல் பரவியிருந்தன. ஆர்வத்திற்குரிய விஷயம் என்னவென்றால், கழிவுநீர் சுத்திகரிப்பு இன்று இயற்கை முறையில் செய்யப்படுகிறது. இம்முறைப்படி இரசாயனப் பொருட்கள் சிறிதளவு சேர்க்கப்படுகிறது அல்லது சேர்க்கப்படுவதே இல்லை. நான் வேலை செய்யும் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் சுத்தப்படுத்திய நீரிலுள்ள கிருமிகளை அழிக்க அல்ட்ரா வைலட் லைட் பயன்படுத்தப்படுகிறது. உயிரை பாதுகாக்கும் வண்ணம் கழிவுநீர் சுத்திகரிப்பு எப்படி செய்யப்படுகிறது என்பதைக் காட்டியதற்கு நன்றி.

ஈ. பி., ஐக்கிய மாகாணங்கள் (g03 7/22)

சாவின் பாதை “சாவின் பாதையிலிருந்து சமாதான பாதைக்கு” (ஜனவரி 8, 2003) என்ற கட்டுரையில் கொடுக்கப்பட்டிருந்த டோஷியாகி நிவா என்பவரின் அனுபவம் என மனதை நெகிழ வைத்தது. இரண்டாம் உலகப் போர் முடிந்து சில வருடங்களுக்குப் பின்பு நான் பிலிப்பைன்ஸ் நாட்டில் பிறந்தேன். போரைப் பற்றிய சம்பவங்களை என் குடும்பத்தார் என்னிடம் சொல்லியிருக்கிறார்கள்; அவற்றில் பெரும்பாலானவை போர்வீரர்களின் மூர்க்க செயல்களைப் பற்றியவை. நான் சிறுமியாக இருந்தபோது, “இதை அவர்களால் எப்படி செய்ய முடிந்தது?” என்று நான் கேட்டதுண்டு. இந்தக் கேள்விக்கான பதிலை தெரிந்துகொள்ள சகோதரர் நிவாவின் அனுபவம் எனக்கு பெரிதும் உதவியது. இது போன்ற கட்டுரைகளை பிரசுரிப்பதற்கு நன்றி. ஒருவரின் வாழ்க்கைப் பாதையே மாறியிருப்பது யெகோவாவின் மகத்தான வல்லமைக்கு மற்றொரு அத்தாட்சி.

ஏ. சி., ஐக்கிய மாகாணங்கள் (g03 8/08)

சகாக்களின் அழுத்தம் இந்த அருமையான பத்திரிகைகளுக்கென ஒரு குடும்பமாக பாராட்டுக் கடிதம் எழுத வேண்டுமென நாங்கள் எப்போதும் விரும்பியதுண்டு. “இளைஞர் கேட்கின்றனர் . . . சகாக்களின் அழுத்தத்தை நான் எப்படி சமாளிக்க முடியும்?” (ஜனவரி 8, 2003) கட்டுரையை வாசித்த பின்பு, கடைசியாக இதற்கு நன்றி தெரிவித்து எழுத தீர்மானித்தோம். தாவீதுக்கு யெகோவா பெரிதும் நம்பகமானவராக இருந்தார் என்றால் அவர் எந்தளவுக்கு யெகோவாவை அறிந்திருப்பார் என்பதைக் காண இந்தக் கட்டுரை உதவியது. தாவீதின் வெற்றிக்குக் காரணம், அவர் தன் சொந்த கருத்துக்களையோ பிறருடைய கருத்துக்களையோ சார்ந்திருக்கவில்லை. வாஸ்தவம் தான், யெகோவா நம் பக்கம் இருந்தால், நாம் ஏன் சகாக்களுக்கு பயப்பட வேண்டும்?

எஃப். எச்., எஸ்டோனியா (g03 8/22)

விழித்தெழு! பத்திரிகையை இரண்டு வருடங்களாக நான் படித்து வருகிறேன். ஆனால் இதுவரை நான் படித்த கட்டுரைகளைவிட இது என் மனதை ரொம்பவே தொட்டுவிட்டது, உற்சாகத்தையும் அளித்தது. இது எனக்காகவே எழுதப்பட்டிருப்பது போல் உணர்ந்தேன். காலத்துக்கேற்ற இந்தத் தகவலுக்கு மிக்க நன்றி.

டி. சி., ஐக்கிய மாகாணங்கள் (g03 8/22)