Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

ஒரு மத சமுதாயத்தவரைப் பற்றிய அறிக்கை

ஒரு மத சமுதாயத்தவரைப் பற்றிய அறிக்கை

ஒரு மத சமுதாயத்தவரைப் பற்றிய அறிக்கை

உயர்நிலைப் பள்ளியொன்றில், விளையாட்டு, அரசியல், கலாச்சார அல்லது மத சமுதாயம் ஒன்றைப் பற்றிய ஆய்வு அறிக்கையை சமர்ப்பிக்கும்படி ஆஸ்திரேலியாவிலுள்ள சிட்னியைச் சேர்ந்த 15 வயது பிலிப்புக்கு புவியியல் பாடம் சம்பந்தமாக ஒரு புராஜெக்ட் கொடுக்கப்பட்டது. தானும் தனது குடும்பத்தினரும் அங்கத்தினர்களாக இருக்கும் யெகோவாவின் சாட்சிகளுடைய உள்ளூர் சபையைப் பற்றி அறிக்கை செய்வதற்கு பிலிப் தீர்மானித்தான். தாங்கள் தேர்ந்தெடுக்கும் “சமுதாயத்தவருடைய முக்கிய பண்புகளைப்” பற்றிய விவரத்தை அறிக்கை செய்வதற்கு அந்த சமுதாயத்தவரில் 20 பேரிடம் பேசும்படி மாணவர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டது.

தனது சுற்றாய்வின் முடிவுகளைத் தொகுத்தப் பிறகு, பிலிப் இவ்வாறு தன் அறிக்கையில் எழுதினான்: “யெகோவாவின் சாட்சிகளுடைய [உள்ளூர்] சபை ஒரு மத அமைப்பு; முக்கியமாக, பைபிளிலிருந்து கற்றுக்கொள்வதற்காக அந்த அமைப்பைச் சேர்ந்தவர்கள் ஒன்றாக கூடிவருகிறார்கள். இந்தக் கூட்டங்களில், பைபிளிலிருந்து சில பகுதிகள் வாசிக்கப்படுகின்றன, பின்பு அவற்றிற்கு விளக்கம் அளிக்கப்படுகின்றன. பைபிளைப் பற்றி மற்றவர்களுக்கு மிகச் சிறந்த விதத்தில் போதிப்பதற்கும் இந்தக் கூட்டங்களில் எங்களுக்கு கற்பிக்கப்படுகிறது. வீடுகளில்தான் ஜனங்கள் ஓய்வாக இருப்பார்கள் என்பதால், வீட்டுக்கு வீடு சென்று அவர்களை சந்திப்பதன் மூலம் இந்தப் போதிக்கும் வேலை செய்யப்படுகிறது. இம்மதத்தைச் சேர்ந்த அங்கத்தினர்கள் அனைவரும் தங்களுடைய சூழ்நிலைகளுக்கேற்ப பல்வேறு அளவுகளில் இந்த வேலையில் தவறாமல் ஈடுபடுகிறார்கள். பைபிளைப் பற்றி தாங்களும் கற்றுக்கொள்கிறார்கள், மற்றவர்களுக்கும் போதிக்கிறார்கள். தகவல்கள் நிறைந்த, ‘அப்-டு-டேட்’ செய்திகள் அடங்கிய காவற்கோபுரம், விழித்தெழு! இதழ்களையும் இந்த மத சமுதாயத்தவர்கள் விநியோகிக்கிறார்கள்; அறிவியல், வரலாறு, உலக மற்றும் உள்ளூர் பிரச்சினைகள் ஆகியவற்றைப் பற்றி ஆர்வமூட்டும் கட்டுரைகள் பல அவற்றில் உள்ளன. உலகில் நடைபெறும் பயங்கர அட்டூழியங்கள், உதாரணமாக செப்டம்பர் 11-⁠ல் நடைபெற்ற சம்பவம் போன்றவற்றைக் கண்டு மன வேதனைப்படும் மக்களுக்கு ஆறுதல் அளிப்பதற்கும் நாங்கள் முயற்சி செய்கிறோம். திருமணம், குடும்ப வாழ்க்கை, இளமைப் பருவம் போன்ற விஷயங்களில் பயனுள்ள பிரசுரங்களையும் நாங்கள் பிரசுரிக்கிறோம்.”

பிலிப்புவின் ஆய்வு அறிக்கையின் தரத்திற்காகவும் அது அளிக்கப்பட்ட விதத்திற்காகவும் அதற்கு உயர்ந்த மதிப்பெண் வழங்கப்பட்டது. யெகோவாவின் சாட்சிகளால் செய்யப்படும் வேலையைப் பற்றி நீங்கள் கூடுதலாக அறிந்துகொள்ள விரும்பினால், அடுத்த முறை உங்களை சந்திக்கும்போது அவர்களிடம் பேசுங்கள் அல்லது 5-⁠ம் பக்கத்தில் பட்டியலிடப்பட்டுள்ள விலாசங்களில் உங்களுக்கு அருகிலிருக்கும் விலாசத்திற்குத் தொடர்புகொள்ளுங்கள். (g03 8/22)

[பக்கம் 14-ன் படம்]

பிலிப்

[பக்கம் 14-ன் படம்]

இத்தாலி

[பக்கம் 14-ன் படம்]

ஆஸ்திரேலியா

[பக்கம் 14-ன் படம்]

பிரேஸில்

[பக்கம் 14-ன் படம்]

நெதர்லாந்து