Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

எமது வாசகரிடமிருந்து

எமது வாசகரிடமிருந்து

எமது வாசகரிடமிருந்து

அந்தரங்கம் “அந்தரங்கத்திற்கு ஆபத்தா?” (பிப்ரவரி 8, 2003) என்ற அட்டைப் படத் தலைப்பு என் கவனத்தை ஈர்த்தது, ஏனென்றால் இந்தப் பொருளில் வெளிவந்த ‘பெஸ்ட் செல்லிங்’ புத்தகத்தின் ஆசிரியரே நான்தான். உங்களுடைய எழுத்தாளர் சூப்பராக எழுதியிருந்தார். இதோ, கூடுதலான ஓர் ஆலோசனை: அடையாள அட்டையை யாரும் கேட்டால் உங்களுடைய பாஸ்போர்ட்டை நீங்கள் காட்டலாம், அதில் உங்களுடைய வீட்டு விலாசமோ சோஷியல் செக்யூரிட்டி நம்பரோ இருக்காது.

ஜே. எல்., ஸ்பெயின் (g03 9/22)

ஏமாற்றுதல் எனக்கு 11 வயது. “இளைஞர் கேட்கின்றனர் . . . ஏமாற்றுவதில் என்ன தப்பு?” (பிப்ரவரி 8, 2003) என்ற கட்டுரையை வாசித்து மகிழ்ந்தேன். எப்பொழுதும் நல்ல மார்க்குகள் வாங்குவதில்லையென்றாலும், நான் பெற்ற மார்க்குகள் எல்லாம் நேர்மையாக பரீட்சை எழுதிப் பெற்றவை என்பதை அறிந்திருக்கிறேன். சொல்லப்போனால், என்னுடன் படிக்கிற மாணவர்கள் சிலர் காப்பியடித்து எழுதியும் என்னைவிட குறைவாகவே மார்க் வாங்கியிருக்கிறார்கள்! அத்துடன் என் மனசாட்சி சுத்தமாக இருக்கிறது, அதுதான் ரொம்ப முக்கியம்.

இஸட். டி., ஆஸ்திரியா (g03 9/22)

காப்பியடிக்கும் கண்ணியில் நான் வீழ்ந்துவிட்டேன், ஒருவேளை இதை ரொம்ப சீரியஸாக எடுத்துக்கொள்ளாததால் அப்படி ஆகியிருக்கலாம். எபிரெயர் 13:18 போன்ற வசனங்களை ஞாபகப்படுத்திப் பார்ப்பதற்கு இந்தக் கட்டுரை எனக்கு உதவும், பின்னால் எப்பொழுதாவது காப்பியடிக்கும் ஆசை வரும்போது இது எனக்கு கைகொடுக்கும்.

என். ஐ., இத்தாலி (g03 9/22)

நான் பத்தாம் வகுப்பு படிக்கிறேன். பரீட்சையில் சிலசமயங்களில் காப்பியடிக்க முயற்சி செய்திருக்கிறேன், இது திருடுவதற்கு சமம் என ஒருபோதும் நினைக்கவே இல்லை! ஆனால் இந்தக் கட்டுரையின் உதவியால், என்னுடைய மனசாட்சியை சுத்தமாக வைத்துக்கொள்ள இனிமேல் முயற்சி செய்வேன்.

கே. ஜி., எஸ்டோனியா (g03 9/22)

தாய்மையை பாதுகாத்தல் “உங்கள் தாய்மையை பாதுகாத்திடுவீர்!” (பிப்ரவரி 8, 2003) என்ற கட்டுரைக்கு நன்றி! கருத்தரிப்பதில் உட்பட்டுள்ள விஷயங்களை இந்தக் கட்டுரை தெளிவாக படம்பிடித்துக் காட்டியது. எனக்கு 32 வயது, உண்மையிலேயே இந்தக் கட்டுரை எனக்குத் தேவைப்பட்டது. பாதுகாப்பான கருத்தரிப்புக்கு என்ன செய்ய வேண்டும் என்பதையும் இந்த அருமையான அன்பளிப்புக்கு போற்றுதல் காண்பிக்க என்ன செய்ய வேண்டும் என்பதையும் இப்பொழுது நான் புரிந்துகொண்டேன்.

பி. சி., இத்தாலி (g03 9/08)

ஒரு பெண் 26 முதல் 28 வாரங்களில் குரூப் ‘பி’ ஸ்ட்ரெப்டோகாகஸ் பரிசோதனை செய்யலாம் என இந்தக் கட்டுரை குறிப்பிடுகிறது. இரத்தப் பரிசோதனை செய்வதற்கு தற்பொழுது பரிந்துரை செய்யப்படுவது 35-⁠க்கும் 37-⁠க்கும் இடைப்பட்ட வாரங்கள்தான், 26-⁠க்கும் 28-⁠க்கும் இடைப்பட்ட வாரங்கள் அல்ல. 26 முதல் 28 வாரங்களில் தங்களுக்கு ஏன் இரத்தப் பரிசோதனை செய்யப்படவில்லை என இந்தக் கட்டுரையை வாசிக்கும் வாசகர்கள் மருத்துவர்களிடம் கேட்கக்கூடும். இதனால் விழித்தெழு! நம்பகமான பத்திரிகை அல்ல என அவர்களுடைய மருத்துவர்கள் முடிவு செய்து விடக்கூடும்.

எல். எஸ்., ஐக்கிய மாகாணங்கள் (g03 9/08)

“விழித்தெழு!” பதில்: 80-⁠க்கும் மேற்பட்ட மொழிகளில் மொழிபெயர்த்து வெளியிடுவதற்காக எங்களுடைய இதழ்கள் பல மாதங்களுக்கு முன்பே தயாரிக்கப்படுகின்றன. பாதுகாப்பான தாய்மை என்ற கட்டுரை எழுதப்படும் சமயத்தில், 26-⁠க்கும் 28-⁠க்கும் இடைப்பட்ட வாரங்களே இரத்தப் பரிசோதனை செய்வதற்கு சரியான காலப்பகுதி என அநேகரால் ஏற்றுக்கொள்ளப்பட்டிருந்தது. ஆனால் ஆகஸ்ட் 2002-⁠ல், அமெரிக்காவின் குழந்தைகள் மருத்துவ கழகம் புது தகவலை வெளியிட்டிருந்தது, இது ஐ.மா. நோய்க் கட்டுப்பாட்டு மையங்களால் கொடுக்கப்பட்டது. தற்பொழுது, இந்த வாசகர் சரியாக கூறுகிறபடி, இரத்தப் பரிசோதனை செய்வதற்கு பரிந்துரை செய்யப்படுவது 35-⁠க்கும் 37-⁠க்கும் இடைப்பட்ட வாரங்களே.

ஈரலிலும் கொட்டை பருப்புகளிலும் இரும்புச்சத்து மற்றும் ஃபோலிக் அமிலம் இருப்பதாக 20-⁠ம் பக்கத்தில் உள்ள அடிக்குறிப்பு தெரிவிக்கிறது. ஆனால், ஈரலில் வைட்டமின் ஏ நிறைய இருக்கிறது, உங்களுடைய கட்டுரை குறிப்பிடுகிறபடி, இது குழந்தைக்கு ஆபத்தாக இருக்கலாம்.

பி. ஜெ., பிரிட்டன் (g03 9/08)