Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

உங்களுக்குத் தெரியுமா?

உங்களுக்குத் தெரியுமா?

உங்களுக்குத் தெரியுமா?

(இந்த வினாடி வினாவுக்கான விடைகளை கொடுக்கப்பட்ட பைபிள் இடக்குறிப்புகளில் காணலாம்; எல்லா விடைகளும் பக்கம் 22-⁠ல் அச்சிடப்பட்டுள்ளன. கூடுதலான தகவல் பெற விரும்பினால், யெகோவாவின் சாட்சிகள் பிரசுரித்த “வேதாகமத்தின்பேரில் உட்பார்வை” [ஆங்கிலம்] என்ற பிரசுரத்தை ஆராய்ந்து பாருங்கள்.)

1.எப்பெரோனுக்கு அருகே இருந்த மக்பேலா குகையில் அடக்கம் செய்யப்பட்ட முதல் தம்பதியினர் யார் என பைபிள் குறிப்பிடுகிறது, வேறு யாரும்கூட அங்கே அடக்கம் பண்ணப்பட்டதாக தெரிகிறது? (ஆதியாகமம் 49:29-33; 50:13)

2.தாவீதின் குமாரர்களில் நிகரற்ற அழகுள்ளவரென அறியப்பட்டவர் யார்? (2 சாமுவேல் 14:25)

3.பிறப்பிலேயே எந்தக் குடியுரிமையை அப்போஸ்தலன் பவுல் பெற்றிருந்தார்? (அப்போஸ்தலர் 22:25-28)

4.தடைசெய்யப்பட்ட கனி சம்பந்தமாக ஆதாமுக்கு என்ன எச்சரிக்கை கொடுக்கப்பட்டிருந்தது? (ஆதியாகமம் 2:17)

5.மக்களின் வேண்டுகோளை ரெகொபெயாம் ராஜா நிராகரித்ததால், கலகம் செய்த வடக்கு கோத்திரங்களிடம் ராஜா யாரை அனுப்பினார், அந்த நபருக்கு என்ன ஏற்பட்டது? (2 நாளாகமம் 10:18)

6.“இரண்டு எஜமான்களுக்கு ஊழியஞ்செய்ய ஒருவனாலும் கூடாது” என இயேசு சொன்னதன் அர்த்தம் என்ன? (மத்தேயு 6:24)

7.இஸ்ரவேலர் சாப்பிடும்படி யெகோவா அளித்த மன்னாவில் சேகரிக்கப்படாமல் விடுபட்டவற்றிற்கு என்ன ஆனது? (யாத்திராகமம் 16:21)

8.இயேசுவைக் காட்டிக்கொடுத்தது யார்? (லூக்கா 6:16)

9.எது அம்மோனியர்களின் முக்கிய விக்கிரக தெய்வமாக இருந்தது? (செப்பனியா 1:5)

10.பைபிளில் அடையாள அர்த்தத்தில், மகா பலத்தை அல்லது வலிமையை பிரதிநிதித்துவம் செய்ய பெரும்பாலும் பயன்படுத்தப்பட்ட மனித உடலுறுப்பு எது? (எரேமியா 32:17)

11.வஸ்தியை நீக்கிவிட்டு அவளுக்கு பதிலாக மற்றொரு ஸ்திரீயை ராணியாக்கும்படி ராஜாவாகிய அகாஸ்வேருவிடம் சொன்னது யார்? (எஸ்தர் 1:13-20)

12.கசப்பாக இருந்த மாராவின் தண்ணீரை மோசே எப்படி மதுரமாக்கினார்? (யாத்திராகமம் 15:23-25)

13.விடுதலை பயணத்தின் ஆரம்பமாக இஸ்ரவேலர்கள் எங்கிருந்து புறப்பட்டு சென்றார்கள்? (யாத்திராகமம் 12:37)

14.ஆலயத்தை செப்பனிடும் பணியின் முன்னேற்றத்தைக் குறித்து யோசியாவிடம் அறிக்கை செய்ததும், அங்கு கண்டுபிடிக்கப்பட்ட ‘நியாயப்பிரமாண புஸ்தகத்திலிருந்து’ ராஜாவுக்கு வாசித்துக் காட்டியதும் யார்? (2 இராஜாக்கள் 22:8-10)

15.வெளிப்படுத்துதலில் பதிவுசெய்யப்பட்டுள்ளபடி, யோவான் கண்ட நான்கு குதிரைகளின் நிறங்கள் யாவை, அவை எதற்கு படமாக இருந்தன? (வெளிப்படுத்துதல் 6:2-8) (g03 10/08)

வினாடி வினாவுக்கான விடைகள்

1. ஆபிரகாமும் சாராளும்; அத்தோடு ஈசாக்கும் ரெபெக்காளும், லேயாளும் யாக்கோபும்

2. அப்சலோம்

3. ரோமன்

4. “அதை நீ புசிக்கும் நாளில் சாகவே சாவாய்”

5. அதோராம், பகுதி விசாரிப்புக்காரன். அவன் கல்லெறிந்து கொல்லப்பட்டான்

6. “தேவனுக்கும் உலகப்பொருளுக்கும் ஊழியஞ் செய்ய உங்களால் கூடாது”

7. ‘வெயில் ஏறஏற அது உருகிப்போனது’

8. யூதாஸ் காரியோத்து

9. மல்காம்

10. புயம்

11. மெமுகான், ஏழு மேதிய-பெர்சிய பிரபுக்களின் சார்பு பேச்சாளர்

12. ‘கர்த்தர் மோசேக்கு ஒரு மரத்தைக் காண்பித்தார்; அதை அவர் தண்ணீரில் போட்டார்’

13. ராமசேஸ்

14. சாப்பான், ராஜாவின் சம்பிரதி

15. வெள்ளை​—⁠நீதியான யுத்தம்; சிவப்பு​—⁠மனிதரின் யுத்தம்; கருப்பு​—⁠பஞ்சம்; மங்கினது​—⁠மரணம்