Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

வெற்றிகரமான மண வாழ்க்கைக்கு . . .

வெற்றிகரமான மண வாழ்க்கைக்கு . . .

வெற்றிகரமான மண வாழ்க்கைக்கு . . .

“கொஞ்சம் பொய்: இதுவே வெற்றிகரமான காதலுக்கு ஒரு திறவுகோல்” என லா பிரெஸ் குறிப்பிட்டது. பொய் சொல்வது நற்குணமென்று குறிப்பிட்ட ஓர் ஆராய்ச்சியைப் பற்றி இந்தச் செய்தித்தாள் அறிவித்தது. சமூக மற்றும் தனிப்பட்ட உறவுகள் பற்றிய இதழ் (ஆங்கிலம்) இந்த ஆராய்ச்சியை பிரசுரித்திருந்தது. அ.ஐ.மா.-வில் சிகாகோவிலுள்ள டி போல் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த டிம் கோல் என்ற பேராசிரியர் இவ்வாறு கூறுகிறார்: “கொஞ்சம் ஏமாற்றினால் [அல்லது பொய் சொன்னால்] பரவாயில்லை, [காதல்] உறவை சேதப்படுத்தாமல் கட்டிக் காக்கலாம்.”

ஆனால், ஏமாற்றினால்தான் மண வாழ்க்கை வெற்றி பெறுமா? “பொய்யைக் களைந்து, அவனவன் பிறனுடனே மெய்யைப் பேசக்கடவன்” என கிறிஸ்தவர்களுக்கு பைபிள் புத்திமதி கூறுகிறது. (எபேசியர் 4:25) இந்த அறிவுரை பிரயோஜனமாக இருக்குமா? ‘தம்பதிகள் பிரிவதற்கு பல காரணங்கள் இருந்தாலும் மிக முக்கியமான காரணம் என்ன?’ என்ற கேள்விக்குப் பதிலளிக்கையில், மணவிலக்கு வழக்கறிஞர் ஒருவர் இவ்வாறு பதிலளித்தார்: “எதையும் மறைக்காமல் ஒருவருக்கொருவர் மனம்விட்டு பேச, தங்களுடைய உணர்ச்சிகளையும் எண்ணங்களையும் வெளிப்படுத்த, அதோடு ஒருவரையொருவர் மிகச் சிறந்த நண்பராக நடத்த திறமை இல்லாதிருப்பதே.”

அப்படியானால், மகிழ்ச்சியான மண வாழ்க்கையின் இரகசியம் என்ன? குடும்ப மகிழ்ச்சியின் இரகசியம் என்ற புத்தகத்தில் 3-⁠ம் அதிகாரத்தின் தலைப்பு: “நிலைத்துநிற்கும் திருமணத்திற்கு இரண்டு திறவுகோல்கள்.” தம்பதியினரை சேர்ந்து வாழச் செய்து, அளவிலா மகிழ்ச்சிக்கு அவர்களை வழிநடத்துகிற இரண்டு முக்கிய அம்சங்களைப் பற்றி அது ஆராய்கிறது. இந்தப் புத்தகத்தைப் பற்றி கூடுதலான தகவல் பெற விரும்பினால், கீழே கொடுக்கப்பட்டுள்ள கூப்பனை பூர்த்தி செய்து இப்பத்திரிகையில் 5-⁠ம் பக்கத்திலுள்ள பொருத்தமான விலாசத்திற்கு அனுப்புங்கள். (g03 10/08)

குடும்ப மகிழ்ச்சியின் இரகசியம் என்ற புத்தகத்தைப் பற்றிய கூடுதலான தகவலை எனக்கு அனுப்பவும்.

இலவசமாக பைபிளை கற்றுக்கொள்ள ஆசைப்படுகிறேன்.