Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

மனதைத் தொட்ட ஒரு புத்தகம்

மனதைத் தொட்ட ஒரு புத்தகம்

மனதைத் தொட்ட ஒரு புத்தகம்

இன்றைய இளவட்டங்கள் அநேகர் அவலட்சணமான நவீன பாணிகளைப் பின்பற்றுவதைப் பார்த்துப் பார்த்து பூத்துப்போன கண்களுக்கு, அடக்கமாக உடை உடுத்த முயல்கிற சிலரைப் பார்ப்பது புத்துணர்ச்சியளிக்கிறது. முன்பு சோவியத் யூனியனைச் சேர்ந்த குடியரசாக இருந்த கிர்கிஸ்தானில் உள்ள பாலிக்சி என்ற நகரில் வசிக்கும் சில இளைஞர்கள், இளைஞர் கேட்கும் கேள்விகள்​—⁠பலன்தரும் விடைகள் என்ற புத்தகத்தின் அட்டைப் படத்தில் காணப்படுவதைப் போலவே தாங்களும் உடையணிந்து ஒரு ‘குரூப் போட்டோ’ எடுக்க தீர்மானித்தார்கள். அதற்காக ஒரு பெண் புரொஃபஷனல் போட்டோகிராஃபரிடம் சென்று, அந்தப் புத்தகத்தின் அட்டைப் படத்தில் இருப்பதைப் போல ஒரு ‘குரூப் போட்டோ’ எடுக்க சொன்னார்கள். அந்த போட்டோவைத்தான் இங்கு பார்க்கிறீர்கள்.

போட்டோ எடுத்தப் பிறகு, அவர்கள் அப்புத்தகத்தை அந்தப் போட்டோகிராஃபரிடமே கொடுத்துவிட்டுச் சென்றார்கள். அந்தச் சமயத்தில் பைபிள் மீது அவளுக்கு நம்பிக்கை இல்லாததால், அந்தப் புத்தகத்தில் அவ்வளவாக ஆர்வம் காட்டவில்லை. ஆனால் சில நாட்கள் கழித்து அந்த போட்டோவை வாங்குவதற்காக அந்த இளைஞர்கள் வந்தபோது, வாழ்க்கையில் இதுபோன்ற ஒரு புத்தகத்தை தான் படித்ததே இல்லை என அவள் கூறினாள். பைபிளில் இந்தளவுக்கு நடைமுறையான அறிவுரைகள் இருப்பது தனக்கு அதுவரை தெரியாது என்றும், இன்னும் அதிகம் தெரிந்துகொள்ள விருப்பம் என்றும் அவள் கூறினாள். அதன் பிறகு, பைபிள் படிப்பை ஏற்றுக்கொண்டாள்.

நீங்களும் இப்புத்தகத்தைப் பற்றிய கூடுதல் தகவலைப் பெற்றுக்கொள்ளலாம், இன்றைய பிரச்சினைகளை சமாளிக்க இளைஞர்களுக்கு உதவுவதற்கென்றே இது விசேஷமாக தயாரிக்கப்பட்டுள்ளது. கீழே கொடுக்கப்பட்டுள்ள கூப்பனை பூர்த்தி செய்து இப்பத்திரிகையின் 5-⁠ம் பக்கத்திலுள்ள பொருத்தமான விலாசத்திற்கு அனுப்புங்கள். (g03 11/22)

இளைஞர் கேட்கும் கேள்விகள்​—⁠பலன்தரும் விடைகள் என்ற புத்தகத்தைப் பற்றிய கூடுதலான தகவலை எனக்கு அனுப்பவும்.

இலவசமாக பைபிளை கற்றுக்கொள்ள ஆசைப்படுகிறேன்.