Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

இடைக்காலத்து கோட்டை ஒன்றில் கடவுளுடைய பெயர்

இடைக்காலத்து கோட்டை ஒன்றில் கடவுளுடைய பெயர்

இடைக்காலத்து கோட்டை ஒன்றில் கடவுளுடைய பெயர்

ஸ்லோவாகியாவிலிருந்து விழித்தெழு! எழுத்தாளர்

ஸ்லோவாகியா என்பது ஐரோப்பாவின் மத்தியிலுள்ள ஒரு சிறிய நாடு, ஆனால் இயற்கை எழில் கொஞ்சும் நாடு. கண்ணைக் கவரும் நாட்டுப்புறத்தில், சரித்திரப் புகழ்மிக்க பழங்கால கோட்டைகள் நினைவுச் சின்னங்களாக ஆங்காங்கே கொலுவீற்றிருக்கின்றன. அவற்றில் மிகவும் குறிப்பிடத்தக்க கோட்டைதான் அராவா கோட்டை; அருகிலுள்ள கிராமத்தை நோக்கியிருக்கும் 112 மீட்டர் உயரமுடைய செங்குத்தான சுண்ணாம்புக்கல் பாறையின் உச்சியில் இது கட்டப்பட்டுள்ளது.

அராவா கோட்டையைப் பற்றிய முதல் வரலாற்று பதிவுகள் 1267-⁠ம் ஆண்டைச் சேர்ந்தவை. அது முதல் இக்கோட்டை பல முறை கைமாறி வந்திருக்கிறது. 1556-⁠ல், இந்தக் கோட்டை செல்வமிக்க டுர்ஸா குடும்பத்தின் கைவசம் வந்தது. அதை சீரமைத்து விஸ்தரித்ததோடு, அதில் ‘சேப்பல்’ ஒன்றையும் அந்தக் குடும்பம் கட்டியது.

அராவா கோட்டையும் காட்சிக்கு வைக்கப்படும் அதிலுள்ள கலைப்பொருட்களும் ஒவ்வொரு ஆண்டும் பல நாடுகளிலிருந்து வருகை தரும் ஆயிரக்கணக்கான மக்களைக் கவருகின்றன. அதன் பிராகாரத்தில், ஒரு மணற்பாறையின்மீது செதுக்கப்பட்டுள்ள டுர்ஸா குடும்ப சின்னத்தில் விசேஷமான ஒன்றை பார்வையாளர்கள் பார்க்கலாம்; அதில் பைபிளிலுள்ள யெகோவா என்ற கடவுளுடைய பெயர் லத்தீனில் பொறிக்கப்பட்டுள்ளது. (g03 12/08)