Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

கடவுள் நேசிக்கிறார் என்பதை அறிந்துகொண்டார்கள்

கடவுள் நேசிக்கிறார் என்பதை அறிந்துகொண்டார்கள்

கடவுள் நேசிக்கிறார் என்பதை அறிந்துகொண்டார்கள்

யாராவது தங்களை நெஞ்சார நேசிக்கிறார்களா, ஏன் கடவுளேகூட நேசிக்கிறாரா என்பதை நம்புவது சிலருக்கு கடினமாக இருக்கிறது. யெகோவாவிடம் நெருங்கி வாருங்கள் என்ற புத்தகத்தை வாசித்த பிறகு, கடவுள் உண்மையிலேயே தங்களை நேசிக்கிறார் என்ற உறுதி கிடைத்ததற்காக பாராட்டு தெரிவித்து அநேகர் கடிதம் எழுதினார்கள். “நான் நிறைய தவறுகள் செய்திருக்கிறேன், இருந்தாலும் அவர் என் மீது எவ்வளவு அன்பு வைத்திருக்கிறார் என்பதை புரிந்துகொண்டபோது பூரித்துப்போனேன்” என அ.ஐ.மா., இல்லினாய்ஸிலுள்ள டிக்கேடர் என்ற இடத்தில் வசிக்கும் ஒரு பெண்மணி எழுதினார்.

“‘யெகோவா நீதியுள்ள தகப்பனாக, நியாயத்திற்காக உறுதியாக இருக்கும் அதேசமயத்தில், தமது உதவியையும் மன்னிப்பையும் பெற வேண்டிய தேவையில் உள்ள பூமிக்குரிய பிள்ளைகளிடம் கனிவான இரக்கத்தை காட்டுகிறார்’ என்ற [117-⁠ம் பக்கத்திலுள்ள] வரிகளைப் படித்தபோது ஆனந்தக் கண்ணீர் விட்டேன்” என்றும் அவர் எழுதினார்.

கலிபோர்னியாவில் ரிப்பான் என்ற நகரத்தில் வசிக்கும் ஒருவர் இவ்வாறு எழுதினார்: “யெகோவா உண்மையிலேயே என்னை நேசிக்கிறார் என்பதை காண்பித்ததற்காக உங்களுக்கு நன்றி. அவர் உண்மையிலேயே என் மீது அக்கறை காட்டுகிறார் என்பது புரிந்தது. துண்டுக் காகிதத்தில் எழுதப்பட்ட ஏதோவொரு நம்பர் மட்டுமே அல்ல நான்.” நியு ஹாம்ப்ஷயர் என்ற இடத்தைச் சேர்ந்த ஒரு பெண் இவ்வாறு கூறினார்: “சிலசமயங்களில், இந்தப் புத்தகத்தை கீழே வைப்பதற்கே எனக்கு மனம் வருவதில்லை.” காரணத்தை அவர் விளக்கினார்: “யெகோவா என்னை நேசிக்கிறார் என்பதை நம்புவது உண்மையிலேயே எனக்கு ரொம்ப கஷ்டமாக இருந்தது.” ஆகவே இப்புத்தகம் அவருக்கு ஏற்ற புத்தகமாக அமைந்தது.

இந்தப் புத்தகத்தை வாசித்து நீங்களும் பயனடைவீர்கள் என நாங்கள் நம்புகிறோம். மூன்று அறிமுக அதிகாரங்களுக்குப் பிறகு, இப்புத்தகம் பின்வரும் நான்கு பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது: ‘மகா வல்லமை படைத்தவர்,’ ‘நீதியை நேசிப்பவர்,’ “இருதயத்தில் ஞானமுள்ளவர்,” “தேவன் அன்பாகவே இருக்கிறார்.” ஒவ்வொரு பகுதியும் கடவுளுடைய பிரதான பண்பின் மீது கவனத்தை ஒருமுகப்படுத்துகிறது. மனதைக் கவரும் இப்புத்தகம், “கடவுளிடம் நெருங்கி வாருங்கள், அவரும் உங்களிடம் நெருங்கி வருவார்” என்ற அதிகாரத்துடன் முடிவடைகிறது.

320 பக்கங்கள் கொண்ட இப்புத்தகத்தைப் பற்றி கூடுதலான தகவல் பெற விரும்பினால், கீழே கொடுக்கப்பட்டுள்ள கூப்பனை பூர்த்தி செய்து இப்பத்திரிகையில் 5-⁠ம் பக்கத்திலுள்ள பொருத்தமான விலாசத்திற்கு அனுப்புங்கள். (g03 12/08)

யெகோவாவிடம் நெருங்கி வாருங்கள் என்ற புத்தகத்தைப் பற்றிய கூடுதலான தகவலை எந்தவித நிபந்தனையுமின்றி எனக்கு அனுப்புவீர்களா?

இலவசமாக பைபிளை கற்றுக்கொள்ள ஆசைப்படுகிறேன்.