Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

தாவரங்கள் மருந்துபொருட்கள் பொதிந்தவை

தாவரங்கள் மருந்துபொருட்கள் பொதிந்தவை

தாவரங்கள்—மருந்துபொருட்கள் பொதிந்தவை

மக்கள் இன்று பயன்படுத்தும் எல்லா நவீன மருந்துகளிலும் கால்வாசி​—⁠முழுமையாகவோ பகுதியாகவோ​—⁠தாவர ரசாயனங்களிலிருந்தே முதன்முதலில் தயாரிக்கப்பட்டதாக வல்லுநர்கள் சொல்கின்றனர். பல்வேறு மூலிகை மருந்துகளை விளம்பரப்படுத்துபவர்கள் இந்த உண்மையைத்தான் அடிக்கடி சுட்டிக்காட்டுகிறார்கள்.

மருந்துசெடிகளின் பேரில் செய்யப்படும் பெரும்பாலான ஆராய்ச்சிகளில், மருத்துவக் குணமுள்ள பொருட்களை பிரித்தெடுப்பதற்கே கவனம் செலுத்தப்படுகிறது. அப்படிப்பட்ட பொருட்களுக்கு சிறந்த உதாரணம் ஆஸ்பிரின்; இது வெள்ளை காற்றாடி (white willow) மரத்தின் பட்டையில் காணப்படும் சாலிஸினிலிருந்து தயாரிக்கப்படுகிறது.

மருத்துவக் குணமுள்ள பொருட்களை செடியிலிருந்து பிரித்தெடுத்த பிறகு, அவற்றை போதுமான அளவிலும், துல்லியமான அளவிலும் சாப்பிடலாம். ஒரு புத்தகம் இவ்வாறு குறிப்பிடுகிறது: “ஆஸ்பிரினையோ டிஜிடாலிஸையோ மாத்திரை வடிவில் உட்கொண்டால் விரும்பிய பலனை சுலபமாக பெற்றுவிடலாம்; ஏனென்றால் அவற்றை இயற்கை வடிவில், அதாவது காற்றாடி மரப்பட்டையாக அல்லது நிலப்புகையிலையாக (foxglove) உட்கொள்வதாக இருந்தால் பல மடங்கு அதிக அளவில் உட்கொள்ள வேண்டும்; அப்போதுதான் அதேயளவு பயனை முழுமையாக பெற முடியும்.”

மறுபட்சத்தில், மருத்துவக் குணமுள்ள பொருட்களை செடியிலிருந்து பிரித்தெடுப்பதில் சில குறைகளும் உண்டு. உதாரணத்திற்கு, அந்தச் செடியிலுள்ள மற்ற பொருட்கள் தரும் ஊட்டச்சத்துக்களும் மருத்துவ நன்மைகளும் நமக்குக் கிடைக்காமல் போய்விடும். அதுமட்டுமல்ல, நோயுண்டாக்கும் உயிரிகள் சில, அவற்றை அழிப்பதற்குரிய மருந்துகளை எதிர்க்கும் சக்தியை பெற்றிருக்கின்றன.

மருத்துவக் குணமுள்ள பொருட்களை செடியிலிருந்து பிரித்தெடுப்பதில் குறைகள் உண்டு என்பதற்கு க்வினைன் (quinine) ஓர் உதாரணம்; அது சின்கோனா மரப்பட்டையிலிருந்து தயாரிக்கப்படுகிறது. இந்தக் க்வினைன், மலேரியாவை உண்டாக்கும் ஒட்டுண்ணிகளை பெருமளவில் சாகடிப்பது உண்மைதான்; ஆனால் அந்த ஒட்டுண்ணிகள் ஒருபுறம் சாகும்போது, சாகாத ஒட்டுண்ணிகள் இன்னொரு புறம் படுவேகமாக பெருகுகின்றன. “இப்படி மருந்துகளை எதிர்க்கும் சக்தியை உயிரிகள் பெற்றுவருவது இப்போது மருத்துவத் துறைக்கு பெரிய சவாலளிக்கிறது” என ஒரு புத்தகம் விளக்குகிறது. (g03 12/22)

[பக்கம் 27-ன் படங்கள்]

இந்த வெள்ளை காற்றாடி மரத்திலிருந்து ஆஸ்பிரின் தயாரிக்கப்படுகிறது

[படத்திற்கான நன்றி]

USDA-NRCS PLANTS Database/Herman, D.E. et al. 1996. North Dakota tree handbook

[பக்கம் 27-ன் படங்கள்]

சின்கோனா மரம், இதிலிருந்து க்வினைன் தயாரிக்கப்படுகிறது

[படத்திற்கான நன்றி]

Courtesy of Satoru Yoshimoto