Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

உங்கள் பிள்ளையால் எந்தளவு கற்றுக்கொள்ள முடியும்?

உங்கள் பிள்ளையால் எந்தளவு கற்றுக்கொள்ள முடியும்?

உங்கள் பிள்ளையால் எந்தளவு கற்றுக்கொள்ள முடியும்?

சிறு பிள்ளையின் கற்கும் திறமையைப் பற்றி பெரியவர்கள் பெரும்பாலும் அறியாமல் இருக்கிறார்கள். என்றாலும், பொதுவாக பெற்றோர்களைவிட சிறு பிள்ளைகள் ஒரு புது மொழியை படுவேகமாக கற்றுக்கொள்கிறார்கள். சில பிள்ளைகள் நான்கு வயதிற்குள் இரண்டு அல்லது அதற்கு அதிகமான மொழிகளைப் பேசுகிறார்கள். கடந்த ஆண்டில், அ.ஐ.மா., வாஷிங்டனிலுள்ள ஆபர்ன் என்ற இடத்தைச் சேர்ந்த ரான்டா என்ற பெண்மணி​—⁠சிறு பிள்ளையின் கற்கும் திறமையைப் பற்றி சந்தேகப்பட்டவர்​—⁠இவ்வாறு எழுதினார்: “என்னுடைய கருத்து முற்றிலும் தவறு என்பதை தாழ்மையுடன் ஒப்புக்கொள்கிறேன்.”

மார்ச் 1, 1989 தேதியிட்ட எமது கூட்டுப் பத்திரிகையாகிய காவற்கோபுர இதழில் வெளிவந்த ஓர் அனுபவத்தைப் படித்ததாக சொல்லி, ரான்டா இவ்வாறு எழுதினார்: “நாலரை வயது பையனின் தாய் சொன்ன ஒரு குறிப்பை 13-⁠ம் பக்கத்தில் பார்த்தேன்; என்னுடைய பைபிள் கதை புத்தகத்தை அந்தத் தாய் வாசித்துக் கொண்டிருந்தபோது சற்று நிறுத்துகையில், அவருடைய மகன் ஒன்றுவிடாமல் வார்த்தைக்கு வார்த்தை தொடர்ந்து அந்தக் கதையைச் சொன்னதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது; வாயில் நுழையாத இடங்களின் பெயர்களையும் ஆட்களின் பெயர்களையும், அப்புத்தகத்திலுள்ள முதல் 33 கதைகளையும் அவன் மனப்பாடம் செய்திருந்ததாகவும்கூட அந்தத் தாய் கூறியுள்ளார். அது சாத்தியமே இல்லை என அந்தச் சமயத்தில் நான் நினைத்தது தவறு என்பதை ஒத்துக்கொள்ளத்தான் வேண்டும். நான் இப்பொழுது நான்கு வயது மகளுக்குத் தாயாக இருக்கிறேன், அதே பைபிள் கதை புத்தகத்திலிருந்து அவள் நிறைய கதைகளை இப்பொழுது மனப்பாடமாக ஒப்பிக்கிறாள்.”

உங்களுடைய பிள்ளை கற்பதை உற்சாகப்படுத்த நீங்கள் என்ன செய்திருக்கிறீர்கள்? என்னுடைய பைபிள் கதை புத்தகத்தைப் பற்றிய கூடுதலான தகவலை நீங்கள் பெற்றுக்கொள்ளலாம்; 256 பக்கங்களில் 116 கதைகள் அடங்கிய இப்புத்தகம் பைபிளில் வரும் ஆட்களையும் சம்பவங்களையும் பற்றி கூறுகிறது. இங்கே கொடுக்கப்பட்டுள்ள கூப்பனை பூர்த்தி செய்து இந்தப் பத்திரிகையின் 5-⁠ம் பக்கத்தில் உள்ள பொருத்தமான விலாசத்திற்கு அனுப்புங்கள். (g04 2/8)

என்னுடைய பைபிள் கதை புத்தகம் என்ற புத்தகத்தைப் பற்றி எந்த நிபந்தனையுமின்றி கூடுதலான தகவல் பெற விரும்புகிறேன்.

□ இலவசமாக பைபிளை கற்றுக்கொள்ள ஆசைப்படுகிறேன்.