Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

‘மணிக்கற்கள் கொட்டிக் கிடக்கின்றன’

‘மணிக்கற்கள் கொட்டிக் கிடக்கின்றன’

‘மணிக்கற்கள் கொட்டிக் கிடக்கின்றன’

நீங்கள் நேசிக்கிற ஒருவர் மரிக்கையில் என்ற சிற்றேட்டைப் பற்றி அ.ஐ.மா.-வில் இல்லினாய்ஸைச் சேர்ந்த பராமரிப்பு இல்லத்தின் இயக்குநர் ஒருவர் இப்படித்தான் வர்ணித்தார். வயதானவர்கள் மத்தியில் தற்கொலை வீதம் மிக அதிகமாய் இருப்பதை யெகோவாவின் சாட்சிகளில் ஒருவர் விழித்தெழு! பத்திரிகையைப் படித்து தெரிந்துகொண்டதால், இந்தப் பத்திரிகையையும் மேற்கூறப்பட்ட சிற்றேட்டையும் அவர் இந்த இயக்குநருக்கு அனுப்பியிருந்தார். இந்தப் பிரசுரங்கள் கைக்கு கிடைத்தவுடன், அந்தப் பராமரிப்பு இல்லத்தின் இயக்குநர் உடனே பதில் எழுதினார்.

நீங்கள் நேசிக்கிற ஒருவர் மரிக்கையில் என்ற சிற்றேட்டில் மணிக்கற்கள் கொட்டிக் கிடக்கின்றன என அந்த இயக்குநர் குறிப்பிட்ட பிறகு, அவர் இவ்வாறு எழுதினார்: “ஆறுதலுக்காக ஏங்கும் குடும்பங்களுக்கு நடைமுறை ஞானமும் பைபிள் வசனங்களும் விளக்கங்களும் அடங்கிய இந்தப் பிரசுரம் கிடைத்தால் நான் அதிக சந்தோஷப்படுவேன்.”

அந்த சாட்சி அந்த இயக்குநருக்கு உடனடியாக போன் செய்து அவரை நேரில் சந்திப்பதற்கு ‘அப்பாய்ண்ட்மென்ட்’ வாங்கினார். அந்தச் சிற்றேட்டில் 20 பிரதிகளை தருமாறு அந்த இயக்குநர் கேட்டார், இந்தப் பிரதிகள் காலியான பிறகு மீண்டும் அவற்றைப் பெறுவதற்கு இரண்டு அல்லது மூன்று மாதங்களுக்கு ஒருமுறை இந்தப் பராமரிப்பு இல்லத்துடன் தொடர்புகொள்ளும்படியும் கேட்டுக்கொண்டார்.

நீங்களோ உங்களுக்குத் தெரிந்தவரோகூட இந்த 32-பக்க சிற்றேட்டை வாசித்து ஆறுதல் பெறலாம். கூடுதலான தகவல் பெற வேண்டுமென்றால் இங்கே கொடுக்கப்பட்டுள்ள கூப்பனை பூர்த்தி செய்து இந்தப் பத்திரிகையின் 5-⁠ம் பக்கத்தில் உள்ள பொருத்தமான விலாசத்திற்கு அனுப்புங்கள். (g04 3/8)

நீங்கள் நேசிக்கிற ஒருவர் மரிக்கையில் என்ற சிற்றேட்டைப் பற்றி எந்த நிபந்தனையுமின்றி கூடுதலான தகவல் பெற விரும்புகிறேன்.

இலவசமாக பைபிளை கற்றுக்கொள்ள ஆசைப்படுகிறேன்.