Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

உங்களுக்குத் தெரியுமா?

உங்களுக்குத் தெரியுமா?

உங்களுக்குத் தெரியுமா?

(இந்த வினாடி வினாவுக்கான விடைகளை கொடுக்கப்பட்ட பைபிள் வசனங்களில் காணலாம்; எல்லா விடைகளும் இந்தப் பக்கத்தின் கீழே அச்சிடப்பட்டுள்ளன. கூடுதலான தகவல் பெற விரும்பினால், யெகோவாவின் சாட்சிகளால் பிரசுரிக்கப்பட்ட “வேதாகமத்தின் பேரில் உட்பார்வை” [ஆங்கிலம்] என்ற பிரசுரத்தை ஆராய்ந்து பாருங்கள்.)

1. ஆசரிப்புக் கூடாரத்தின் அஸ்திவாரத்திற்கு பயன்படுத்தப்பட்ட பாதங்கள் எதனால் செய்யப்பட்டவை? (யாத்திராகமம் 26:19-32)

2. பேதுரு தம்மை எத்தனை முறை மறுதலிப்பார் என்று இயேசு முன்னுரைத்தார்? (மத்தேயு 26:75)

3. அற்புதங்களை நடப்பிக்கும் ஆவியின் வரங்கள் மறைந்த பிறகு கிறிஸ்தவ சபை எந்த மூன்று பண்புகளால் அறியப்பட்டது? (1 கொரிந்தியர் 13:13)

4. விக்கிரகங்களை வழிபடுவது ஏன் முட்டாள்தனம்? (சங்கீதம் 115:4-8)

5. உடை உடுத்துவது சம்பந்தமாக கிறிஸ்தவ பெண்களுக்கு பவுல் கொடுத்த அறிவுரை என்ன? (1 தீமோத்தேயு 2:9, 10)

6. அப்போஸ்தலர்களில் ‘சிறியவராக’ பவுல் ஏன் தன்னை கருதினார்? (1 கொரிந்தியர் 15:9)

7. ஆயிரம் பெலிஸ்திய ஆண்களை கொலை செய்ய சிம்சோன் பயன்படுத்திய ஆயுதம் எது? (நியாயாதிபதிகள் 15:15)

8. மத்திய கிழக்கில் பல நூற்றாண்டுகளாக உணவாக பயன்படுத்தப்பட்ட பூச்சி எது? (லேவியராகமம் 11:22)

9. தொடர்ந்து இரண்டு நாட்களாக இயேசுவை முழுக்காட்டுபவனாகிய யோவான் என்னவென்று அறிவித்தார்? (யோவான் 1:29, 35, 36)

10. உடலில் உள்ளுக்குள் இருப்பதால், ஆழ்ந்த யோசனைகளையும் உணர்ச்சிகளையும் குறிப்பிடுவதற்கு பைபிள் பயன்படுத்தும் உடலுறுப்புகள் யாவை? (வெளிப்படுத்துதல் 2:23)

11. யோவானுக்கு வெளிப்படுத்தின விசேஷத்தில், யெகோவாவின் சிங்காசனத்தைச் சுற்றிலும் அமர்ந்திருப்பதாக காணப்படுகிறவர்கள் யார்? (வெளிப்படுத்துதல் 4:4)

12. ‘பூமியிலுள்ள சகல விதைகளிலும் சிறிதாயிருக்கிறது’ என இயேசு சொன்ன விதை எது? (மாற்கு 4:31)

13. பவுல் தனது இரண்டாவது மிஷனரி பயணத்தின் சமயத்தில் அத்தேனே பட்டணத்திற்குச் சென்றபோது, “அதிசீக்கிரமாகத் தன்னிடத்திற்கு வரும்படி” அழைத்த இரு நபர்கள் யார்? (அப்போஸ்தலர் 17:15)

14. கடவுளுடைய முக்கிய எதிரி யார்? (யோபு 1:6)

15. குடித்திருப்பதாய் உத்தமி அன்னாளை தவறுதலாக கண்டித்தது யார்? (1 சாமுவேல் 1:12-16)

16. தாவீதுக்கு விரோதமாக கலகம் செய்து, யூதா மனுஷர் தவிர இஸ்ரவேலின் மனுஷர் அனைவரையும் அவருக்கு எதிராக கலகம் செய்யத் தூண்டிய “பேலியாளின் மனுஷன்” யார்? (2 சாமுவேல் 20:1, 2)

17. அற்புதமாக வழங்கப்பட்ட மன்னாவிற்குப் பதிலாக, எகிப்தில் சாப்பிட்ட என்னென்ன உணவுப் பொருட்களுக்காக இஸ்ரவேலர் ஏங்கினர்? (எண்ணாகமம் 11:5) (g04 6/8)

வினாடி வினாவுக்கான விடைகள்

1. வெள்ளி

2. மூன்று

3. விசுவாசம், நம்பிக்கை, அன்பு

4. அவை உயிரற்றவை, மனிதனால் உண்டுபண்ணப்பட்டவை

5. தகுதியான வஸ்திரத்தினாலும், தெளிந்த புத்தியினாலும், “தேவபக்தியுள்ளவர்களென்று சொல்லிக்கொள்ளுகிற ஸ்திரீகளுக்கு ஏற்றபடியே” அலங்கரிக்க வேண்டும்

6. “தேவனுடைய சபையை துன்பப்படுத்தினதினாலே”

7. ‘கழுதையின் பச்சைத் தாடையெலும்பு’

8. வெட்டுக்கிளி

9. “இதோ, தேவ ஆட்டுக்குட்டி”

10. உள்ளிந்திரியங்கள்

11. பரலோக ஸ்தானத்தில் இயேசுவின் அடிச்சுவடுகளைப் பின்பற்றும் அபிஷேகம் பண்ணப்பட்டவர்களைப் பிரதிநிதித்துவம் செய்கிற இருபத்து நான்கு மூப்பர்களை யோவான் காண்கிறார்

12. “கடுகு விதை”

13. சீலா, தீமோத்தேயு

14. சாத்தான்

15. பிரதான ஆசாரியனாகிய ஏலி

16. சேபா

17. மீன்கள், வெள்ளரிக்காய், தர்ப்பூசணி, கீரைகள், வெங்காயங்கள், வெள்ளைப் பூண்டுகள்