Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

எமது வாசகரிடமிருந்து

எமது வாசகரிடமிருந்து

எமது வாசகரிடமிருந்து

பச்சைகுத்துதல் “இளைஞர் கேட்கின்றனர் . . . நான் பச்சைகுத்திக் கொள்ளலாமா?” (அக்டோபர் 8, 2003) என்ற கட்டுரைக்கு மிக்க நன்றி. பச்சைகுத்திக் கொள்வதை உண்மையிலேயே ஃபாஷன் என்று நினைத்தேன். எனவே தற்காலிகமாக பச்சைகுத்திக் கொள்வதற்கு ஆசைப்பட்டேன். ஆனால் கடவுளை அவமதிக்கும் இவ்வித குறிகளை “தற்காலிகமாகக்கூட” நம் உடம்பில் குத்திக்கொள்ள விரும்ப மாட்டோம் என்ற வாக்கியத்தை படித்தபோது அது எவ்வளவு சீரியஸான விஷயம் என புரிந்தது. பச்சைகுத்திக் கொள்வது மற்றவர்களை இடறலடைய செய்யும் என்பதையும், மற்றவர்கள் என்னை ஒரு கலகக்காரனாக பார்க்கும்படி செய்யும் என்பதையும் படித்த பிறகு பச்சைகுத்திக் கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தையே விட்டுவிட்டேன்.

ஏ. கே., ஜப்பான் (g04 7/8)

பச்சைகுத்திக் கொள்வதற்கு நான் ரொம்ப ஆசைப்பட்டேன். ஆனால் இந்தக் கட்டுரை, பச்சைகுத்திக் கொண்டு தற்போதைக்கு நான் சந்தோஷப்பட்டாலும் பிற்பாடு வருத்தப்படக் கூடும் என்பதை உணர்த்தியது. நான் நினைத்தே பார்க்காத உடல்நல ஆபத்துகளை நீங்கள் குறிப்பிட்டிருந்தீர்கள். இப்படிப்பட்ட தூண்டுவிக்கும் கட்டுரைக்கு நன்றி தெரிவிக்கிறேன்.

டி. டி., பிரான்சு (g04 7/8)

விஞ்ஞானியின் கதை “அறிவியல் என் மதமாக இருந்தது” (அக்டோபர் 8, 2003) என்ற அருமையான கட்டுரையை வெளியிட்டதற்கு நன்றி. உண்மைகளை ஒத்துக்கொள்ள கென்னத் டானாக்கா பயப்படவே இல்லை. அதுமட்டுமல்ல, பல வருடங்களாக அவர் நம்பி வந்தவை தவறென்பதை தாழ்மையுடன் ஒப்புக்கொண்டார். சரியான மனப்பான்மை அவருக்கு இருக்கிறது.

எஸ். ஏ., ரஷ்யா (g04 7/8)

மனச்சோர்வு என்னை படாதபாடு படுத்தியது. சாக வேண்டும் என்ற எண்ணம்தான் எப்போதும் இருந்தது. பிறகு கென்னத் டானாக்காவின் கட்டுரையில் இந்தக் கேள்வியை படித்தேன்: “எல்லாமே கடைசியில் ஒன்றுமில்லாதபடி ஆகப் போகிறதென்றால், இப்போது உயிர் வாழ்வதில் என்ன அர்த்தம் இருக்க முடியும்?” இந்தக் கேள்வி என் மனதை தொட்டது. “தொடர்ந்து உயிர் வாழு!” என்று கடவுளே சொன்ன மாதிரி இருந்தது.

சி. ஐ., ஜப்பான் (g04 7/8)

மொசைக்குகள் “மொசைக்குகள்​—⁠கல் ஓவியங்கள்” (நவம்பர் 8, 2003) என்ற கட்டுரைக்கு நன்றி சொல்ல விரும்புகிறேன். இந்தக் கட்டுரையில் என் வீட்டுக்கு அருகில் உள்ள ஸ்டேட் பார்க்கில் வைக்கப்பட்டிருக்கும் ஒரு மொசைக்கின் படம் இருந்தது. அந்த பார்க்குக்கு பக்கத்தில்தான் பத்து வருஷத்துக்கும் மேலாக குடியிருக்கிறேன். ஆனால் ஒரு முறைகூட அந்த மொசைக்குகளை பார்த்ததேயில்லை. எனவே அவற்றை பார்க்க சென்றபோது அவற்றின் அழகை கண்டு வியந்து போனேன். இப்போதெல்லாம் மொசைக்குகளை ரசிக்க ஆரம்பித்துவிட்டேன்.

இ. டி., ஐக்கிய மாகாணங்கள் (g04 7/22)

1993-⁠ல் யெகோவாவின் சாட்சிகளுடைய மாநாட்டில் கலந்துகொள்வதற்காக ரஷ்யாவிற்கு சென்றிருந்த சமயத்திலிருந்து மொசைக்குகளைப் பற்றி அதிகம் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் எனக்கு ஏற்பட்டது. ஏனென்றால் செயின்ட் பீட்டர்ஸ்பர்கிலும் மாஸ்கோவிலும் ரசிப்பதற்கு நிறைய அழகழகான மொசைக்குகள் இருந்தன. இந்த அழகான மொசைக்குகளை உருவாக்க பல வருடங்கள் உழைத்த ஓவியர்களுக்கும் அதைப் பற்றிய தகவலை வெளியிட்ட உங்களுக்கும் எங்களுடைய நன்றியை தெரிவிக்கிறோம்.

பி. இஸட்., ஜெர்மனி (g04 7/22)

மாறுபட்ட வாழ்க்கை பாணிகள் வாழ்க்கை பூரா தவறான பாலியல் உணர்ச்சிகள் என் மனதை அலைக்கழித்தன. என்னுடைய நிலைமைக்கு ஒத்த ஒரு நிலையை உங்களுடைய கட்டுரை விளக்கியது. சிறுவயது முதல் ஆபாச படங்களை பார்த்ததும், பாலியல் துஷ்பிரயோகத்திற்கு ஆளானதும், என் வாழ்க்கையையே நாசமாக்கின. இந்தக் கட்டுரை என்னை பற்றியே நான் நன்றாக புரிந்து கொள்வதற்கு உதவி செய்தது. மிக்க நன்றி.

ஜே.பி.எம்., ஐக்கிய மாகாணங்கள் (g04 7/22)

பாலியல் ஆசைகளைப் பற்றிய கட்டுரையில் ஜீன்ஸ், ஹார்மோன்கள், வளர்ப்பு முறை, இன்னும் அநேக காரியங்கள் அவற்றை எவ்வாறு பாதிக்கின்றன என்பதை பற்றி குறிப்பிட்டிருந்தால்தான் ஞானமாக இருந்திருக்கும். ஓரினப்புணர்ச்சி தூண்டுதல்களுடன் போராடுபவர்கள், கிறிஸ்தவ சபையிலிருந்து உதவி பெற முடியும் என்பதை ஒத்துக்கொள்கிறேன்.

டி. எல்., பிரிட்டன் (g04 7/22)

“விழித்தெழு!” பதில்: பாலியல் உணர்ச்சிகளோடு போராடிக்கொண்டிருக்கும் ஒவ்வொருவரின் வேதனையையும் எங்களால் புரிந்துகொள்ள முடிகிறது. எங்களுடைய கட்டுரை ஒப்புக்கொள்கிறபடி இவ்வித பிரச்சினைகளுக்கான காரணங்கள் சிக்கலானவையாக இருக்கக்கூடும். ஆனாலும் ஒருவர் வேண்டுமென்றே பாலியல் உணர்ச்சிகளை வளர்க்காமல் அல்லது அப்படிப்பட்ட உணர்ச்சிகளின்படி செயல்படாமல் இருக்கும்வரை அவர் யெகோவாவின் கண்களில் சுத்தமானவராக இருக்க முடியும். ஒழுக்கமாக வாழ மனிதர்கள் எடுக்கும் முயற்சிகளில் யெகோவா சந்தோஷப்படுகிறார் என்பதில் நிச்சயமாயிருங்கள்.​—⁠நீதிமொழிகள் 27:11.