Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

பகுத்தறியும் தாய்

பகுத்தறியும் தாய்

பகுத்தறியும் தாய்

பிள்ளைகளின் தேவைகளை பகுத்தறிந்து பூர்த்தி செய்யும் ஒரு தாய் அவர்களுக்கு சத்துள்ள உணவை கொடுக்க தளராமல் உழைக்கிறாள். அதுபோலவே பிள்ளைகளின் ஆவிக்குரிய தேவைகளை பூர்த்தி செய்வதிலும் தளராமல் பாடுபடுகிறாள்.

பிரேசிலை சேர்ந்த ஒரு பெண்மணி, தன் நாட்டிலுள்ள யெகோவாவின் சாட்சிகளுடைய கிளை அலுவலகத்திற்கு சமீபத்தில் ஒரு கடிதம் எழுதியிருந்தார். கடவுள் நம்மிடமிருந்து எதைத் தேவைப்படுத்துகிறார்? என்ற சிற்றேட்டை பாராட்டி அதில் எழுதியிருந்தார். அவருடைய கடிதம் இவ்வாறு வாசிக்கிறது: “இந்த சிற்றேடு என்னை மிகவும் கவர்ந்தது. கடவுள் வெறுக்கிற பழக்கங்கள் என்ற பாடத்தை பார்த்தவுடனேயே அதிலுள்ள முக்கியமான குறிப்புகளை என்னுடைய மூன்று பிள்ளைகளுக்கும் சொல்ல வேண்டும் என்ற எண்ணம்தான் மனதில் தோன்றியது. 10 வயதிலும் 11 வயதிலும் இரண்டு மகள்கள் இருக்கிறார்கள். மகனுக்கு 5 வயது. . . . என்னுடைய பிள்ளைகளுக்கு கடவுளுடைய வழிகளை சொல்லித் தருவதற்கு இது போன்ற ஒரு பிரசுரம் ரொம்பவே முக்கியம்!”

கூடுதலான பைபிள் பிரசுரங்களுக்காகவும் அந்தப் பெண் கேட்டு எழுதியிருந்தாள். நீங்களும்கூட ஆவிக்குரிய உணவை தேடிக்கொண்டிருந்தால், உங்களுக்காகவும் உங்கள் குடும்பத்தாருக்காகவும் கடவுள் நம்மிடமிருந்து எதைத் தேவைப்படுத்துகிறார்? என்ற சிற்றேட்டைப் பற்றி அதிகமான தகவல்களை பெற்றுக்கொள்ளலாம். இதற்காக தயவுசெய்து பின்வரும் கூப்பனை பூர்த்தி செய்து பக்கம் 5-⁠ல் உள்ள பொருத்தமான விலாசத்திற்கு அனுப்புங்கள். (g04 7/8)

□ எந்த நிபந்தனையுமின்றி, கடவுள் நம்மிடமிருந்து எதைத் தேவைப்படுத்துகிறார்? என்ற சிற்றேட்டை பெற விரும்புகிறேன்.

□ இலவசமாக பைபிளை கற்றுக்கொள்ள ஆசைப்படுகிறேன்.