Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

ஸ்டில்ட் பனையை எப்போதாவது பார்த்திருக்கிறீர்களா?

ஸ்டில்ட் பனையை எப்போதாவது பார்த்திருக்கிறீர்களா?

ஸ்டில்ட் பனையை எப்போதாவது பார்த்திருக்கிறீர்களா?

பெருவிலிருந்து விழித்தெழு! எழுத்தாளர்

ஸ்டில்ட் பனையை உலகின் சில பகுதிகளில் எங்கு திரும்பினாலும் பார்க்கலாம். அது விசித்திரமான தோற்றம் உடையது. அதன் ஆணிவேர் குறிப்பிட்ட அளவு வரை வளர்ந்து நின்று விடுகிறது, ஆனால் அதன் மற்ற பகுதிகள் தொடர்ந்து வளர்கின்றன. ஆகவே தண்டிலிருந்து இன்னுமதிக வேர்கள் முளைக்கின்றன; அவை தரையை தொட்டு ஸ்டில்டுகள் போல், அதாவது தாங்கி நிற்கும் கம்புகள் போல் காட்சியளிக்கின்றன.

ஸ்டில்ட் பனைகள் ஆர்வத்தை தூண்டுகிற மரங்கள் மட்டுமல்ல. அவற்றின் பெரிய வேர்கள் குட்டிக்குட்டி மிருகங்களுக்கு இடமளிக்கின்றன. மனிதர்களுக்குக்கூட இந்த மரங்கள் பயனளிக்கின்றன. சில நாடுகளில் உள்ள மக்கள் இந்த மரத்தின் கட்டைகளை வைத்து வீட்டை கட்டுகிறார்கள், ஏன் தரையைக்கூட அமைக்கிறார்கள். அது மட்டுமல்ல இதன் இலைகளை, கூரை வேய்வதற்கும், துடைப்பம் செய்வதற்கும், கூடை பின்னுவதற்கும் பயன்படுத்துகிறார்கள். வெப்பமண்டல மழை காடுகளுக்கு அப்பால் வெகுதூரத்தில் வசிக்கும் சிலர் கண்ணைக் கிள்ளும் கறுநிற கோடுகள் பதிந்த இந்த ஸ்டில்ட் பனையிலிருந்து செய்யப்பட்ட அழகான கைத்தடிகளை பயன்படுத்தியிருப்பார்கள்; அல்லது அதே பனையால் செய்யப்பட்ட உறுதியான பார்க்கே (parquet) தரை மீது நடந்திருப்பார்கள்.

மற்ற பனைகளைப் போல ஸ்டில்ட் பனைகள்கூட நமக்கு உணவளிக்கின்றன. அநேக பனைகளின் தண்டு நுனிகள் உணவுப் பொருளாக பயன்படுத்தப்படுகின்றன. சாப்பிடுவதற்கு சுவையாகவும் இருக்கின்றன. வித்தியாசமான சுவையை கொண்டு தூள் கிளப்பும் இந்த உணவை மக்கள் விரும்பி சாப்பிடுவதால் அதற்கான தேவை அதிகரித்திருக்கிறது. வருத்தகரமாக இந்தப் பனை மரத்தின் சில வகைகள், சுவை மிகுந்த மிருதுவான தண்டுகளுக்காக மாத்திரமே வெட்டப்படுவதால் இதன் மற்ற பகுதிகளெல்லாம் வீணாக்கப்படுகின்றன. (g04 7/22)

[பக்கம் 31-ன் படக்குறிப்பு]

ஸ்டில்ட் பனைகள் உபயோகமான பல பொருட்களை தயாரிப்பதற்கு பயன்படுகின்றன