Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

“அது என்னை ரொம்பவே மாற்றிவிட்டது”

“அது என்னை ரொம்பவே மாற்றிவிட்டது”

“அது என்னை ரொம்பவே மாற்றிவிட்டது

பெரிய போதகரிடம் கற்றுக்கொள் என்ற புதிய புத்தகத்தைப் பற்றி அமெரிக்கா, வர்ஜீனியா மாநிலத்தைச் சேர்ந்த 12 வயது சிறுவன் சொன்ன வார்த்தைகளே இவை. இதுவரை தெரிந்திராத, கேள்விப்பட்டிராத சில விஷயங்களை அதிலிருந்து கற்றுக் கொண்டதாக அவன் குறிப்பிடுகிறான். அவன் விளக்குகையில்:

“கடவுளை எப்பொழுதும் நேசிக்க வேண்டும்; அவரைப் பற்றி எல்லாரிடமும் பேச வேண்டும்; அவரிடம் ஜெபிக்க வேண்டும் என்பதையெல்லாம் பெரிய போதகரிடம் கற்றுக்கொள் புத்தகத்திலிருந்து தெரிந்துகொண்டேன். உதவிக்காகவும் பாதுகாப்புக்காகவும் கடவுளிடம் கேட்க வேண்டும் என்பதையும் அது சொல்லித் தந்துள்ளது. கடவுளை நேசித்து அவர் கட்டளைப்படி நடக்கும் எல்லாரும் பரதீஸில் இருப்பார்கள் என்பதையும் நான் கற்றுக் கொண்டேன்.

“அது என்னை ரொம்பவே மாற்றிவிட்டது. நான் எப்பொழுதும் பொய் பேசுவேன். ஆனால் இந்தப் புத்தகத்தைப் படிக்க ஆரம்பித்த பிறகு, பொய் சொல்வதை நிறுத்திவிட்டேன். இது போன்ற அநேக புத்தகங்களைப் படிக்க வேண்டும் என்ற ஆர்வத்தையும் இந்தப் புத்தகம் எனக்கு ஏற்படுத்தியுள்ளது. அதனால் கடவுளைப் பற்றி அதிகம் கற்றுக் கொள்ளவும் தெரிந்து கொள்ளவும் நான் விருப்பமுள்ளவனாக இருக்கிறேன்.”

அழகிய படங்களோடு விளக்கப்பட்டுள்ள இந்தப் புத்தகத்தைப் படிக்கும்போது நீங்களும் ஒருவேளை இப்படித்தான் உணருவீர்கள். அந்தப் புத்தகம் இப்பத்திரிகையின் அளவுடையது, 256-பக்கங்களைக் கொண்டது. “ஜெபம் செய்ய இயேசு கற்றுக்கொடுக்கிறார்,” “அன்பைப் பற்றி ஒரு பாடம்,” “சந்தோஷத்திற்கான வழி,” “நாம் ஏன் பொய் சொல்லக்கூடாது” போன்ற அதிகாரங்களை படிக்கையில் நீங்களும் மகிழ்ச்சியடைவீர்கள். இந்தப் புத்தகத்தைப் பற்றி கூடுதலான தகவல் பெற கீழ்க்காணும் கூப்பனை பூர்த்திசெய்து பக்கம் 5-⁠ல் உள்ள பொருத்தமான விலாசத்திற்கு தயவுசெய்து அனுப்புங்கள். (g04 8/22)

[பக்கம் 32-ன் படம்]

பொய் சொல்லக் கூடாது என்பதைப் பற்றி கற்றுத் தரப்படுகிறது