Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

“கடவுளோடு நடவுங்கள்” மாவட்ட மாநாட்டிற்கு வாரீர்!

“கடவுளோடு நடவுங்கள்” மாவட்ட மாநாட்டிற்கு வாரீர்!

“கடவுளோடு நடவுங்கள்” மாவட்ட மாநாட்டிற்கு வாரீர்!

இந்த மாநாடு உலகெங்கிலும் பல்வேறு இடங்களில் நடைபெறும். லட்சோபலட்சம் பேர் இந்த மாநாட்டிற்குக் கூடிவருவார்கள். இது பெரும்பாலும் வெள்ளிக்கிழமை தொடங்கி ஞாயிற்றுக்கிழமை முடியும். இந்த மூன்று நாள் மாவட்ட மாநாடு நீங்கள் வசிக்கிற பகுதியிலும் நடைபெறும்.

ஒவ்வொரு நாளும் மாநாட்டின் நிகழ்ச்சிகள் காலை 9:30 மணிக்கு இசையுடன் ஆரம்பமாகும். “வழி இதுவே, இதிலே நடவுங்கள்” என்பதே வெள்ளிக்கிழமை நடைபெறும் நிகழ்ச்சியின் பொருள். “யெகோவா தம் வழிகளைக் கற்பிப்பதற்கு கூடியிருக்கிறோம்” என்ற வரவேற்புரையுடன் அந்த நாளின் நிகழ்ச்சி ஆரம்பமாகும். அதைத் தொடர்ந்து வரும் பேச்சில் கடவுளோடு உத்தமமாய் நடப்பவர்களுடைய பேட்டிகளும் இடம்பெறும். பின்பு, “எப்படிப்பட்டவர்களென உங்களுக்கு நீங்களே நிரூபித்துக் கொள்ளுங்கள்,” “உங்கள் நடைகளை கடவுளுடைய வார்த்தை தினந்தோறும் வழிநடத்தட்டும்” ஆகிய சொற்பொழிவுகளுக்குப் பிறகு, “கொந்தளிப்பான காலத்தில் கடவுளோடு நடவுங்கள்” என்ற தலைப்பில் ஆற்றப்படும் முக்கிய உரையுடன் காலை நிகழ்ச்சிகள் நிறைவுறும்.

“கடவுளோடு நடக்க ஓசியா தீர்க்கதரிசனம் நமக்கு உதவுகிறது” என்ற தொடர்பேச்சு மூன்று பகுதிகளைக் கொண்டது; இது வெள்ளிக்கிழமை பிற்பகல் வழங்கப்படும். “‘தேவன் இணைத்ததை’ பிரிக்காதீர்கள்,” “நம் பரிசுத்த கூட்டங்களுக்கு மரியாதை காட்டுதல்” ஆகிய பேச்சுகளும் அன்று இடம்பெறும். “சகல தேசத்து மக்களுக்கும் நற்செய்தி” என்பதே அன்றைய இறுதிப் பேச்சின் தலைப்பு. இது, எல்லா மொழியினருக்கும் நற்செய்தியை பிரசங்கிக்கும்படி கேட்போரை உற்சாகப்படுத்தும்.

சனிக்கிழமை நடைபெறும் நிகழ்ச்சியின் பொருள், “கவனமாய் நடந்துகொள்ளப் பாருங்கள்.” அன்று காலையில் கொடுக்கப்படும் தொடர்பேச்சின் தலைப்பு, “ஊழியர்களாக தொடர்ந்து முன்னேறுதல்.” வேற்று மொழியினருக்கு எப்படி நற்செய்தியை அறிவிக்கலாம் என்பதற்கு கூடுதல் ஆலோசனைகளைத் தரும் ஒரு பகுதியும் இதில் அடங்கியுள்ளது. “முன்னதாகவே ஒப்புக்கொண்டு யெகோவாவுடன் நடத்தல்” என்ற தலைப்பில் பேசப்படும் முழுக்காட்டுதல் பேச்சுடன் காலை நிகழ்ச்சிகள் முடிவுறும். அதன் பிறகு தகுதியுள்ளவர்கள் முழுக்காட்டுதல் பெற ஏற்பாடுகள் செய்யப்படும்.

“யாதொன்றிலும் இடறலைத் தவிருங்கள்,” “புத்துணர்ச்சி அளிக்கும் ஆரோக்கியமான காரியங்கள்” ஆகிய பேச்சுகள் சனிக்கிழமை பிற்பகலில் கொடுக்கப்படும். அவற்றைத் தொடர்ந்து, “யெகோவா நம் மேய்ப்பர்,” “காலத்தை பிரயோஜனப்படுத்திக் கொள்ளுங்கள்,” “அதிகமதிகமாய் பிரகாசிக்கும் பாதையில் நடத்தல்” ஆகிய தலைப்புகளில் பேச்சுகள் கொடுக்கப்படும். இவற்றில் உற்சாகமூட்டும் பேட்டிகளும் இடம்பெறும். “‘விழிப்புடனிருங்கள்’​—⁠நியாயத்தீர்ப்புக் கொடுக்கும் வேளை வந்துவிட்டது” என்ற தலைப்பைக் கொண்ட சிந்திக்க வைக்கும் உரையுடன் அன்றைய நிகழ்ச்சிகள் முடிவடையும்.

ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் நிகழ்ச்சியின் பொருள், “சத்தியத்தில் தொடர்ந்து நடவுங்கள்.” இந்தப் பொருள், “இளைஞர்களே​—⁠நீதியின் பாதையில் நடவுங்கள்” என்ற பேச்சில் வலியுறுத்திக் காட்டப்படும். அடுத்து, அப்போஸ்தலன் பவுலின் ஊழியத்தை சிறப்பித்துக் காட்டும் ஒரு நாடகம் இருக்கும்; இதில் கதாபாத்திரங்கள் பூர்வகால உடையணிந்து நடிப்பார்கள். அதைத் தொடர்ந்து, நாடகத்திலிருந்து கற்றுக்கொள்ளும் பாடங்களை சிறப்பித்துக் காட்டும் ஒரு பேச்சு இருக்கும். அன்று பிற்பகல் வழங்கப்படும் பொதுப் பேச்சின் தலைப்பு: “கடவுளோடு நடப்பதால் இன்றும் என்றும் ஆசீர்வாதங்கள்.” 

நீங்கள் வசிக்கும் பகுதியில் மாநாடு நடைபெறும் விலாசத்தை உள்ளூர் யெகோவாவின் சாட்சிகளுடைய ராஜ்ய மன்றத்தில் பெற்றுக் கொள்ளுங்கள் அல்லது இந்தப் பத்திரிகையைப் பிரசுரிப்போருக்கு எழுதுங்கள். (g04 6/8)