இளைஞருக்கேற்ற ஒரு புத்தகம்
இளைஞருக்கேற்ற ஒரு புத்தகம்
இளைஞர் கேட்கும் கேள்விகள்—பலன்தரும் விடைகள். இது இளைஞருக்கேற்ற ஒரு புத்தகம் என சிறியோர் பெரியோர் அனைவரும் புகழ்ந்து பேசியிருக்கிறார்கள். 15 வயது மதிக்கத்தக்க பெண் ஒருத்தி தனது நண்பர்கள் சிலருக்கு இந்தப் புத்தகத்தைக் கொடுப்பதற்காக பத்து பிரதிகள் ஆர்டர் செய்தாள். இவள் மெக்சிகோவிலுள்ள ஸீனலோயா மாநிலத்தைச் சேர்ந்தவள்; யெகோவாவின் சாட்சியாக இல்லாவிட்டாலும் தனக்கு இந்தப் புத்தகம் ரொம்ப பிடித்திருந்ததாக எழுதியிருந்தாள். “யெகோவாவின் சாட்சிகளான உங்களை மிகவும் மதிக்கிறேன்” என்று அக்கடிதத்தில் குறிப்பிட்டிருந்தாள்.
அதுமட்டுமல்ல, “வாழ்க்கையைப் பற்றி ஏகப்பட்ட கேள்விகளைக் கேட்கும் நிறைய ஃபிரண்ட்ஸ் எனக்கு இருக்கிறார்கள். அவர்களிடம் இந்தப் புத்தகத்தைக் காண்பித்தேன், அவர்களுக்கு ரொம்ப பிடித்துவிட்டது. சூப்பர் புத்தகம் இது. இளைஞர் தெரிந்துகொள்ள விரும்புகிற எல்லாமே இதில் இருக்கிறது” என்று எழுதியிருந்தாள். இந்தப் புத்தகத்தின் பிரதிகளைக் கோடை விடுமுறைக்கு முன் அனுப்பி வைக்கும்படியும் எழுதியிருந்தாள்.
இளைஞர் கேட்கும் கேள்விகள் புத்தகத்தில் 39 அதிகாரங்கள் உள்ளன. அவற்றில் சில: ‘நண்பர்களின் செல்வாக்கை நான் எவ்வாறு எதிர்க்கலாம்?,’ ‘நான் எவ்வாறு உண்மையான நண்பர்களை அடைய முடியும்?’ ‘விவாகத்துக்கு முன் பாலுறவு கொள்ளலாமா?,’ ‘அது உண்மையான அன்பு என்பதை நான் எப்படி அறிந்துகொள்வது?’ கீழ்க்காணும் கூப்பனை பூர்த்திசெய்து அதிலுள்ள விலாசத்திற்கு அல்லது இந்தப் பத்திரிகையில் பக்கம் 5-ல் உள்ள பொருத்தமான விலாசத்திற்கு அனுப்பி 320 பக்கங்கள் கொண்ட இப்புத்தகத்தைப் பற்றிய கூடுதலான தகவலை பெற்றுக்கொள்ளலாம். (g04 10/8)
□ இளைஞர் கேட்கும் கேள்விகள்—பலன்தரும் விடைகள் புத்தகத்தைப் பற்றி எந்தவித நிபந்தனையுமின்றி கூடுதலான தகவல் பெற விரும்புகிறேன்.
□ இலவசமாக பைபிளைக் கற்றுக்கொள்ள ஆசைப்படுகிறேன்.