Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

உங்களுக்குத் தெரியுமா?

உங்களுக்குத் தெரியுமா?

உங்களுக்குத் தெரியுமா?

(இந்த வினாடிவினாவுக்கான விடைகளை கொடுக்கப்பட்ட பைபிள் இடக்குறிப்புகளில் காணலாம்; எல்லா விடைகளும் இந்தப் பக்கத்திலேயே அச்சிடப்பட்டுள்ளன. கூடுதலான தகவல் பெற விரும்பினால், யெகோவாவின் சாட்சிகள் பிரசுரித்த “வேதாகமத்தின்பேரில் உட்பார்வை” [ஆங்கிலம்] என்ற பிரசுரத்தை ஆராய்ந்து பாருங்கள்.)

1. ‘பின்னிட்டுத் திரும்பாமல் இருக்க வேண்டியதன்’ அவசியத்தை வலியுறுத்துவதற்கு, இயேசு கிறிஸ்து யாரை நினைத்துக்கொள்ளும்படி சொன்னார்? (லூக்கா 17:31, 32)

2. விதைக்கிறவனைப் பற்றிய இயேசுவின் உவமையில் கற்பாறை நிலத்தில் விழுந்த விதை ஏன் முளைத்த பிறகு காய்ந்து போயிற்று? (மாற்கு 4:5, 6)

3. யெகோவாவின் “வலதுபாரிசத்தில்” இயேசு உட்காருவது எதை அர்த்தப்படுத்தியது? (அப்போஸ்தலர் 2:34, 35)

4. பைபிள் ஒரேவொரு சூகியனைப் பற்றித்தான் குறிப்பிடுகிறது. அவருடைய பெயர் என்ன? (யோபு 8:1)

5. யாக்கோபு சுமார் 97 வயதாயிருந்தபோது, யெகோவா அவருக்கு என்ன பெயர் வைத்தார்? (ஆதியாகமம் 32:28)

6. கடவுளுக்குக் கீழ்ப்படியாமல் தாவீதை கொல்வதற்கு சவுல் வாய்ப்பைத் தேடி அலைந்தார். ஆனால் வாய்ப்பு தன்னைத் தேடி வந்த போதும் தாவீது ஏன் சவுலைக் கொல்லவில்லை? (1 சாமுவேல் 26:7-11)

7. பொல்லாத யேசபேல் எந்த மிருகத்திற்கு இரையாவாள் என்று யெகோவா சொல்லியிருந்தார்? (2 இராஜாக்கள் 9:36)

8. இஸ்ரவேலர் சிவந்த சமுத்திரத்தை நோக்கி பயணித்தபோது எந்த இடத்தில் முதலில் தங்கினார்கள்? (யாத்திராகமம் 12:37)

9. எப்படிப்பட்ட பக்தி “தேவனுக்கு முன்பாக மாசில்லாத சுத்தமான பக்தியாயிருக்கிறது” என்று யாக்கோபு சொல்கிறார்? (யாக்கோபு 1:27)

10. மேசியா வருவதையும் சங்கரிக்கப்படுவதையும் பற்றிய எந்தக் காலப்பகுதி தானியேலுக்கு வெளிப்படுத்தப்பட்டது? (தானியேல் 9:24-27)

11. முடிவு வருவதற்கு முன் எந்த செய்தி “பூலோகமெங்குமுள்ள சகல ஜாதிகளுக்கும் சாட்சியாகப் பிரசங்கிக்கப்படும்” என்று இயேசு சொன்னார்? (மத்தேயு 24:14)

12. கடவுளுடைய ராஜ்யத்திற்குள் பிரவேசிப்பதற்கு தடையாயிருக்கும் “மாம்சத்தின் கிரியைகள்” யாவை? (கலாத்தியர் 5:19-21)

13. சரியான விதத்தில் மனிதனை நியாயந்தீர்ப்பதற்கு யெகோவாவுக்கு என்ன திறமை இருக்கிறது? (1 சாமுவேல் 16:7)

14. தீர்க்கதரிசியாக ஆமோஸ் தேர்ந்தெடுக்கப்படுவதற்கு முன் அவர் என்ன வேலை செய்து வந்தார்? (ஆமோஸ் 7:14)

15. என்ன அர்த்தத்தில் தம் சீஷர்கள் தங்கள் குடும்பத்தாரை ‘வெறுக்க’ வேண்டும் என்று இயேசு சொன்னார்? (லூக்கா 14:26) (g04 10/8)

வினாடி வினாவுக்கான விடைகள்

1. “லோத்தின் மனைவி”

2. அதன் வேர் ஆழமாக போகாததால் வெயில் ஏறினபோது அதனால் தாக்குப்பிடிக்க முடியவில்லை

3. இயேசு முக்கியமான ஸ்தானத்தை, அதாவது யெகோவாவுக்கு அடுத்த ஸ்தானத்தை ஏற்கிறார்

4. யோபுவின் மூன்று நண்பர்களில் ஒருவரான பில்தாத்

5. இஸ்ரவேல்

6. சவுலை யெகோவா அபிஷேகம் செய்திருந்ததால் தாவீது பிரச்சினையை யெகோவாவின் கையில் விட்டுவிட்டார்

7. நாய்கள்

8. சுக்கோத்

9. ‘திக்கற்ற பிள்ளைகளும் விதவைகளும் படுகிற உபத்திரவத்திலே அவர்களை விசாரிக்கிறதும் உலகத்தால் கறைபடாதபடி தன்னைக் காத்துக்கொள்வதும்’

10. “எழுபது வாரங்கள்”

11. “ராஜ்யத்தினுடைய இந்தச் சுவிசேஷம்”

12. ‘விபசாரம், வேசித்தனம், அசுத்தம், காமவிகாரம், விக்கிரகாராதனை, பில்லிசூனியம், பகைகள், விரோதங்கள், வைராக்கியங்கள், கோபங்கள், சண்டைகள், பிரிவினைகள், மார்க்கபேதங்கள், பொறாமைகள், கொலைகள், வெறிகள், களியாட்டுகள் முதலானவை’

13. ‘அவர் இருதயத்தை பார்க்கிறார்’

14. ‘மந்தை மேய்க்கிறவரும், காட்டத்திப் பழங்களைப் பொறுக்குகிறவருமாய்’ இருந்தார்

15. அவர்களை குறைவாக நேசிக்க வேண்டும்