Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

குடும்ப பிரச்சினைகளை சமாளிக்க உதவி

குடும்ப பிரச்சினைகளை சமாளிக்க உதவி

குடும்ப பிரச்சினைகளை சமாளிக்க உதவி

மெக்சிகோவிலுள்ள வேராக்ரூஸ் நகரில் வசிக்கும் ஒரு பெண்மணியின் வீட்டில் ஒரு பிரச்சினை நிலவியது. அது பற்றி கலந்தாலோசித்த விழித்தெழு! பத்திரிகையை யாரோ அவரிடம் கொடுத்திருந்தார்கள். “எங்க வீட்டிலேயே அந்தப் பிரச்சினை நிலவியதாலே அந்தப் பத்திரிகை எனக்கு ரொம்ப பிடிச்சு போச்சு” என்று யெகோவாவின் சாட்சிகளுடைய கிளை அலுவலகத்திற்கு அவர் கடிதம் எழுதினார். “இந்த விஷயம் எனக்கு மட்டுமில்ல, என் கணவருக்கும் பிள்ளைகளுக்கும்கூட உதவியா இருக்கும்” என்றும் எழுதினார்.

அந்தக் கடிதத்தில் பின்வரும் வேண்டுகோளையும் விடுத்திருந்தார்: “யெகோவாவின் சாட்சிகள பத்தி அதிகம் தெரிஞ்சுக்க ஆசைப்படுறேன். உங்களுடைய சபை பக்கத்தில எங்கே இருக்குன்னு தெரியப்படுத்துங்க. குடும்பத்தோடு வர ஆசைப்படுறேன். ஏன்னா, நாங்க எல்லாருமே கடவுள்கிட்ட இன்னும் நெருங்கி வரணும்னு நெனக்கிறேன்.” அவருடைய மனதை அவ்வளவாய் கவர்ந்த விழித்தெழு! இதழின் கடைசி பக்கத்தில் குடும்ப மகிழ்ச்சியின் இரகசியம் என்ற புத்தகம் சிறப்பித்து காட்டப்பட்டிருந்தது. ஆகவே, அந்தப் புத்தகத்தைத் தனக்கு அனுப்பி வைக்கும்படி கேட்டிருந்தார்.

கணவன், மனைவி, பெற்றோர், பிள்ளைகள், தாத்தா பாட்டிமார் என குடும்பத்திலுள்ள ஒவ்வொருவருக்கும் பிரயோஜனமான தகவல் அதில் உள்ளது. “சிசுப்பருவத்திலிருந்தே உங்கள் பிள்ளையை பயிற்றுவியுங்கள்,” “உங்கள் பருவவயது பிள்ளை செழித்தோங்க உதவி செய்யுங்கள்,” “உங்கள் குடும்பத்தை தீங்கு விளைவிக்கும் செல்வாக்குகளிலிருந்து பாதுகாத்திடுங்கள்,” “உங்கள் குடும்பத்தில் சமாதானத்தைக் காத்துக்கொள்ளுங்கள்” போன்றவை அதிலுள்ள தகவல் நிறைந்த அதிகாரங்கள் சிலவற்றின் தலைப்புகளாகும்.

கீழ்க்காணும் கூப்பனை பூர்த்திசெய்து பக்கம் 5-⁠ல் உள்ள பொருத்தமான விலாசத்திற்கு அனுப்பி இந்தப் புத்தகத்தைப் பற்றிய கூடுதலான தகவலை நீங்கள் பெற்றுக்கொள்ளலாம். (g04 12/8)

◻ குடும்ப மகிழ்ச்சியின் இரகசியம் என்ற புத்தகத்தைப் பற்றி எந்தவித நிபந்தனையுமின்றி கூடுதலான தகவல் பெற விரும்புகிறேன்.

◻ இலவசமாக பைபிளைக் கற்றுக்கொள்ள ஆசைப்படுகிறேன்.